அறுபத்துமூவர் J.K. SIVAN
கண்ணப்ப நாயனார்
இப்படி ஒரு சிவ பூஜையா?
ஒரு தப்பான அபிப்பிராயம் இன்னும் அறியாதவர்கள் சிலருக்கு இருக்கிறது. ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லோருமே பிராமணர்கள் என்பதால் அவர்களை உயர்த்தி எழுதப்பட்டுள்ளவை புராணங்கள், பிரபந்தங்கள் என்று ஒரு தவறான எண்ணம் இன்னும் சிலர் மனதில் புகுந்து கொண்டு வெளியேற மறுக்கிறது. நிச்சயம் இல்லை. நிறைய பேர் ஆழ்வார்களில் நாயன்மார்களில் பிராமணரல்லாத பல குலங்களில் பிறந்து தெய்வீக தன்மை பெற்ற நாம் வழிபடும் மஹான்கள். உன்னதர்கள். பக்தி செய்ய மனிதனாக அதுவும் பிராமணனாக இருக்க, ஜாதி பேதத்துடன் இருக்க எந்த அவசியமும் இல்லை. பக்ஷிகள், விலங்குகள் கூட பக்தியால் மேம்பட்டு வழிபடப் படுகின்றன. ஜடாயு, வானரர்கள், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன்,ஆதிசேஷன் எல்லாமே மனிதர்கள் இல்லையே,
பொதப்பி என்ற தெலுங்கு நாட்டில் ஒரு ஊர் உடுப்பூர். வேடுவர்கள் குடும்பங்கள் வாழ்ந்த இடம். அவர்களுக்கு நாகன் என்ற வேடன் தலைவன். அவன் மனைவி தத்தை. இருவருமே முருக பக்தர்கள். முருகன் வள்ளி எனும் வேடுவ குல மனைவியைக் கொண்டவன் அல்லவா? முருகன் அருளால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. திடகாத்திரமான குண்டு குழந்தை. திண்ணன் என்று பெயர். பதினாறு வயது வாலிபன் என்பதால் முதியவரான நாயகனுக்கு பதிலாக பொறுப்பேற்று வேட்டையாட ஆரம்பித்தான். வேடுவர் தலைவன் அவன் இப்போது.வேட்டைக்கு கிளம்பிவிட்டான்.
கடி நாய்கள் சகிதம் ஆயுதங்களோடு புறப்பட்டவன் காட்டை வளைத்து அட்டகாகசமாக உள்ளே புகுந்து மிருகங்களை துரத்தினான். கரடி, புலி, மான் என பலவற்றை உயிரோடும் பிணமாகவும் பிடித்தான். அவன் கண்ணில் அப்போது ஒரு கொழுத்த காட்டுப் பன்றி தென்பட்டது அவன் துரத்த அவனை எங்கெங்கோ இழுத்து க்கொண்டு ஓடியது. நாணன், காடன் இருவரும் களைந்து மரநிழலில் அமர்ந்தார்கள். திண்ணன் களைப்பை பொருட்படுத்தாமல் மலையில் ஓடினான். பன்றி பிடிபட்டது. கொன்றான். அதை சுட்டு உண்ண தயாராயினர். ''தண்ணீர் வேண்டுமே குடிக்க. ரொம்ப தாகமாக இருக்கிறதே'' என்றான் திண்ணன்.
நாணன் மலை அருகே நின்ற ஒரு உயரமான தேக்குமரத்தை காட்டினான். ''திண்ணா , அந்த மரம் பக்கத்தில் ஒரு ஆறு ஓடுகிறது. அதில் நல்ல குடிநீர் கிடைக்கும். பன்றியைத்தூக்கிக்கொண்டு நடந்தார்கள்.
வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது..
''நண்பர்களே அதோ பார்த்தீர்களா ஒரு மலை. அதன் மீது ஒரு கோவில் தெரிகிறதே வாருங்கள் அங்கே செல்வோம்.'' என்றான் திண்ணன்
''திண்ணா , எனக்கு அது தெரியும். அங்கே குடுமி தவர் என்று சிவபெருமான் இருக்கிறார். அழகான சிறிய கோவில் போகலாம். கும்பிடலாம்'' என்றான் நாணன். மலையை நெருங்கி மேலே என்ற ஒரு உற்சாகம், மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி திண்ணனுக்கு ஏற்பட்டது. ஏன்?
பொன்முகலி ஆறு வந்தது. ''காடா, நீ இங்கே தீ மூட்டு பன்றியை சுடுவோம். அதற்குள் நான் மேலெழ நாணனோடு சென்று குடுமி தேவரை பார்த்தது கும்பிட்டு விருகிறேன்'' என்றான் திண்ணன்.
உச்சி காலத்தில் தேவர்கள் வந்து காளத்திநாதனை வழிபடும் நேரம். துந்துபி போன்ற தேவ வாத்தியங்கள் முழங்கிய சப்தம் திண்ணன் காதில் ஒலித்தது. திண்ணன் முற்பிறப்பில் அர்ஜுனன் என்கிறது காளஹஸ்தி புராணம்.
''நாணா , அது என்ன சப்தம்?''
நாணன் காதில் அது விழவில்லை. ''ஏதோ காட்டில் மரங்கள், மிருகங்கள் ஓசையாக இருக்கும், திண்ணா '' என்றான்.
மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத அன்பு பெறுக, திண்ணன் மலையேறினான். மலையில் ஒரு கோவில். அதனுள் தீபம் எரிகிறது. கருவறை திறந்திருக்கிறது. கதவே இல்லை. காற்றின் அசைவில் மணி அடிக்கிறது. செவிக்கு இன்பமாக '' வா திண்ணா , உனக்காக தான் காத்திருக்கிறேன்'' என்று ஒலித்தது. அது மனதில் அடிநாதமாக கேட்டது. தாயைக் கண்ட சேய் போல வேகமாக ஓடி அப்படியே குடுமித்தேவரை ஆலிங்கனம் செய்தான்.
குடுமித் தேவர் தலையில், சிவலிங்கத்தில் பச்சிலை பூக்கள் தெரிந்தது. அடடா நான் இதுவெல்லாம் கொண்டுவர வேண்டும் என்று அறியவில்லையே?
நாணன் சொன்னான். ''திண்ணா நான் உன் தந்தையோடு ஒரு முறை முன்பு இங்கே வந்திருக்கிறேன். அப்போது ஒரு பார்ப்பனர் இங்கே வந்து இந்த சிவலிங்கத்துக்கு தண்ணீர் நிறைய தலையில் கொட்டினார். பிறகு இலைகளை போட்டார், பூக்களை பறித்துவந்து மேலே போட்டார். அது இந்த சாமிக்கு பிடிக்கும் போல் இருக்கிறது. இவரைக் கும்பிட வேண்டுமென்றால் நாமும் அதெல்லாம் செய்யவேண்டுமடா?'''என்றான்
விட்டகுறை தொட்டகுறையோ? அன்று முதல் அடிக்கடி காளத்தி மலை செல்வான். வாயில் நீர்சுமந்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வான். தலையில் நிறைய புத்தம் புது மலர்களை சுமந்து வருவான். இலைகளால் அவனுக்குத் தெரிந்த அர்ச்சனை செய்வான். சிவனுக்கு பசிக்குமே என்று தான் வழக்கமாக உண்ணும் பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை சிவனுக்கு படைப்பான்.
இதுவரை திண்ணன் வரும் நேரமும் அந்த சிவாச்சாரியார் வரும் நேரமும் ஒன்றுபடவில்லை. தனித்தனியாக தான் குடுமி நாதருக்கு அவரவர் வழியில் வழிபாடு நடந்தது.
முதல் முதலாக திண்ணன் இவ்வாறு காளத்திநாதரை தனது வழியில் பூஜித்து ''மாமிச நைவேத்தியம்'' அளித்த அன்று மாலை காளத்தி நாதரை அர்ச்சித்து பூஜை செய்யும் சிவகோசரியார் எனும் சிவாச்சாரியார் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாஸ்த்ர பிரகாரம் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
No comments:
Post a Comment