Sunday, July 15, 2018

naladiyar



நாலடியார்       - J.K. SIVAN 

சமணர்களை பின் தொடர்வோம். நல்ல பாடல்களை கைவசம் வைத்திருக்கிறார்கள்.  நாலு அடியில் நல்ல நல்ல உபதேசங்கள்.  நாலடியார் என்ற இந்த பழந் தமிழ் செயல்களை அறியும்போது எவ்வளவு அழகாக இதெல்லாம் பாதுகாத்து வைக்கப்பட்டு  நம்மை மகிழ்விக்கின்றன. நாம் என்ன செய்யப்போகிறோம். நமக்கு பின்னால்  வரும் சந்ததிக்கு நம்மால் எதுவும் நல்ல விஷயம் கொடுக்க முடியவில்லை என்றாலும், நமக்கு கிடைத்த இவற்றையாவது அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பதன் மூலம் ஒரு சின்ன சமூக தொண்டு செய்வோமே.  முதலில் நாம் புரிந்துகொள்வோம்.  அது மிக அவசியமல்லவா?

பாடல்:
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி.

சமணர் தமிழ்  புரியாதபடி இருந்ததால் ''தமிழ்'' அறிஞர் நமது முக நூல் அன்பர்  ஹரிகுமார் அர்த்தம் சொல்லிக்கொடுத்தார். அவருக்கு நமது நன்றி. வாழ்த்துக்கள். இந்த பாடல் என்ன சொல்கிறது என்று அறிவோம்.
  
நம்மில்  உலோபிகள், கிருமிகள், கஞ்சன், என்ற பட்டம் சுமந்து வாழும் சிலர் உண்டு.  மேலும் மேலும் செல்வத்தை சேர்த்து வைத்துக்கொண்டிருப்பான். தனக்கும் செலவு செய்து கொள்ளமாட்டான். மற்றவனுக்கு ஒரு சல்லிக்காசு கொடுக்கமாட்டான் . அவனைப்பற்றில் தான் சமணர் சொல்கிறார்.    நல்ல ஆடை வாங்கி உடுத்தமாட்டான்,  வயிறு நிறைய வேளா வேளை நல்ல உணவு சாப்பிடமாட்டான். தனது உடம்புக்கு வியாதி வந்தபோதும் அதற்கு மருந்து வாங்க காசு செலவு பண்ண மனம் வராது. தர்மம்  தானம்  என்றால் அர்த்தமே தெரியாதவன்.  இப்படிப்பட்டவனின் பணம் அவனிடமேயா  இருக்கப்போகிறது. வேறு எவனுக்கு அதிர்ஷ்டம்.  இதைப்பற்றி சொல்லும்போது சமணர் எதை உதாரணம் காட்டுகிறார் தெரியுமா?   தேனீக்களை.  எங்கிருந்து எல்லாமோ இடாமல் சுறுசுறுப்பாக பறந்து சென்று பூக்களைத்தேடி அதன் தேனை வாயில் நிரப்பிக் கொண்டு வந்து தானும் அதை சாப்பிடாமல், ஒரு கூடு கட்டி அதில் சேமித்து வைக்கும்.  அந்த தேனை ஒருநாள் சும்மா இருக்கும் ஒருவன் அந்த தேன் கூடை அழித்து அதன் தேனை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு போய்விடுவான்.

தேனீக்களாக இருக்காமல் தேனாக இனிக்கும்படி எல்லோருக்கும் நம்மாலான உதவி செய்வோம். பணம் நிரந்தரமல்ல.

பாடல்
''நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.''
வயதுக்கும்  அறிவுக்கும், ஞானத்திற்கும்   எந்த சம்பந்தமும் இல்லை.   வயதானால் அதை உணர்த்த  தலை\யில் வெள்ளிக்கம்பிகள் முளைக்கும். அப்போது கல்வி மண்டையில் ஏறாது.  உடலு ம் இடம் கொடுக்காது.  அதற்கு தான் ''இளமையில் கல்'' என்று  அறிவுரை தந்திருக்கிறார்கள்.  இப்போதே முடிந்தவரை நாம் ஏதாவது உருப்படியாக தெரிந்து கொள்வோம்.    சமணர் அந்த காலம் இதை உணர்ந்து தான் அரசனுக்கு புத்திமதி கூறுகிறார்.  மஹாராஜா,  நீ சிறந்தவன், தவறில்லாமல் நாட்டை ஆள்பவன், உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்.  நம்முடைய  இளமை வாலிபம் சக்தி எல்லாம் என்றும் சாஸ்வதமானது என்று சந்தோஷ  கனவு கண்டவர்கள் கடைசியில் ஒரு கம்பு ஊன்றிக்கொண்டு தள்ளாடுவார்கள். விவேகமானவர்கள்  வயது என்ற என்ற நரை திறை மூப்பு  வரும் என்று அறிந்தவர்கள்,   இளம் வயதிலேயே துறவறம் கடைப்பிடிப்பார்கள்.  சமணர்கள் குழந்தைப் பருவத்திலேயே சந்யாசிகள்.  

இன்றும் திபெத் மக்கள் பலர் படம் பார்க்கிறோமே, அதில் எத்தனை குழந்தைகள் மொட்டைத்தலையும் காவி உடையுமாக பௌத்தமதம் தழுவிய சன்யாசியாக காண்கிறார்கள். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...