நாலடியார் - J.K. SIVAN
சமணர்கள் தந்த பரிசு -3
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
அகட விகட சாமர்த்தியம், நேர்மையோடு, கொஞ்சம், அப்படியில்லாமல் நிறைய, சேர்த்த செல்வம் என்றும் சாஸ்வதமாக எனக்கே, என்னோடு தான் இருக்கும் என்று எண்ணி பணம் சேர்க்கிறான். அந்த செல்வம் அவனை விட்டு சென்றுவிடும் என்று நினைப்பதற்கே பிடிக்காது. அப்படி நிலைக்காது என்று தெரிந்தால் அவன் சேர்ப்பானா? செல்வம் ஓரிடத்தில் நிலையாக நிற்காது என்று தெரிந்து கொண்டு விரைவில் அது தானாக செல்லுமுன் நீங்கள் அதை நல்வழியில், தர்ம காரியங்களுக்கு செல்லும்படியாக ஏற்பாடு செய்யுங்கள்.
சமீபத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு வாட்சாப்பில் உலகிலேயே பெரும் பணக்காரன் ஒரு இளைஞன் தாம் தூம் என்று செலவு செய்பவன் தான் என்றும் நிலைத்து அவ்வாறே வாழ்வோம் என்று மனக்கோட்டை கட்டும் நேரத்தில் அவனுடைய டாக்டர், அவனுக்கு டெலிபோன் பண்ணுகிறார். ''தம்பி உன்னுடைய உடல் செக்கப் ரிப்போர்ட்கள் வந்துவிட்டன. அதன் சாராம்சத்தை உன்னிடம் எப்படி சொல்வது என்று தயக்கமாக இருக்கிறது.''
என்ன தயக்கம் உடனே சொல்லுங்கள் டாக்டர்.
''உன் வாழ்வு சீக்கிரம் முடியப்போகிறது. உன் இதயம் நிற்கும் நிலையில் இருக்கிறது.அதிக பக்ஷம் பத்துநாள்''
அதற்கு மேல் அதை தடுக்க வழியில்லை அப்பனே. ''
பணக்கார வாலிபனின் பணம் அவனுக்கு அதிலிருந்து மீள உதவவில்லை என்று தெரிகிறது. எல்லாவற்றையும் விட்டு செல்லப்போகிறோமே என்று அழுகிறான்.
இதை நாலடியார் சமணர்கள் அழகாக சொல்கிறார்கள். எமதர்மன் ரொம்ப கோபமாக எருமை மாட்டிலேறி வந்து கொண்டிருக்கிறான். கொஞ்சம் வர லேட்டாகலாம். ஆனால் அதிக நாள் ஆகாது.வாழ்நாள் வேகமாக சென்றுவிடும் என்கிறார்கள்.
''என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.''
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்.''
செல்வம் எந்த ரூபத்திலும் நம்மை வந்து அணுகும். சேரும். வீட்டை சுற்றிலும் முருங்கை மரங்கள் வேண்டாம் என்று தோன்றினாலும் ஒரு காடாக வளர்ந்தது. ஒரு முருங்கைக்காய் எட்டு ரூபாய் பத்து ரூபாய் என்று விற்கும்போது மரங்கள் நிறைய இலையை விட முருங்கை காய்களாக தொங்கினால்? மல்லிப்பூ காடு நமக்கு சொந்தம். அந்த பூவிற்கு உள்ள டிமாண்ட். விலை? ஆகவே செல்வம் எப்படி கிடைத்தாலும் பிற்காலம் உதவும் என்று அதை பிடித்து சேர்த்து வைக்காதீர். பின்னர் நமக்கு அது உதவாமல் எவனோ உரிமை கொண்டாடி முதியவயதில் நீதிமன்றம் கருப்பு கோட்டுகளுக்கு அது செலவாகி அழிவதற்கு முன்பே, மற்றவர்களுக்கு அதை மனமுவந்து கொஞ்சம் உதவலாமே. எருமை மாட்டுக்காரன் நம்மை அணுகிவரும் போது இந்த மாதிரி உதவியவர்களை விட்டு விட்டு மற்றவர்களை தேடி செல்வானாம். தர்மம் செய்பவர்கள் நரகம் செல்லமாட்டார்கள். அவர்கள் அடையப்போவது மோக்ஷம் தானே என்கிறது நாலடியார் பாடல்.
No comments:
Post a Comment