பகவான் ரமண மகரிஷி: -- J.K. SIVAN
'ஒரு தெலுங்கு பக்தை சொல்கிறாள்''- 5
சூரி நாகம்மா : ...
சூரி நாகம்மா : ...
காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. அது ஓடுவதே தெரியவில்லையே. அதற்குள் ரெண்டு வருஷமா? நேற்று நடந்தது போல் இருக்கிறதே. குண்டூரிலிருந்து வந்த தம்பதிகள். அடிக்கடி வருபவர்கள். ரெண்டு மாதம் தங்கி இருந்தார்கள். குழந்தைகளை குடும்பத்தை விட்டு ரெண்டு மாதத்திற்கு மேல் தங்க முடியவில்லை அந்த கணவனுக்கு. ஒருநாள் பகவானை சந்தித்து கேட்டான்: '' சுவாமி என்னால் குடும்ப தொல்லைகள் தாங்கமுடியவில்லை. என் மனைவியை நீ வரவேண்டாம் குண்டூரிலேயே இரு என்று சொன்னேன். கேட்கவில்லை. இப்போது வீட்டில் ஊரில் நிறைய வேலை இருக்கிறா வா திரும்ப போகலாம் என்கிறாள்'' என்று மனைவி மேல் பழி சுமத்தினான். நீங்கள் தான் அவளை போக வைக்கவேண்டும். நான் இங்கேயே தங்கி உங்களோடு இருக்கிறேன். இங்கேயே சாப்பிட்டு தூங்குகிறேன்.'' என்றான்.
பகவான் அவனுடன் என்ன சொன்னார் ?
''நீ குடும்பத்தை விட்டு எங்கே போய்விடுவாய்? வானத்தில் பறந்து செல்வாயா? பூமியில் தானே இருக்கவேண்டும். நீ எங்கிருக்கிறாயோ அங்கு தான் உன் குடும்பம். என்னைப்பார். ஒன்றுமே வேண்டாம் என்று தான் வீட்டை விட்டு வந்தேன். இங்கே பார்த்தாயா எவ்வளவு பெரிய குடும்பஸ்தன் நான் என்று ஆஸ்ரமத்தை சுற்றி கையைக் காட்டினார் சிரித்துக்கொண்டே. என் குடும்பம் உன்னுடையதை விட பலமடங்கு பெரியது. உன் மனைவியை கூப்பிட்டு நீ போ என்று என்னை சொல்லச் சொல்கிறாயே, உன் மனைவி திருப்பி என்னிடம் ''நான் எங்கே போவேன் சுவாமி, இங்கேயே உங்களோடு இருந்துவிடுகிறேன் என்று சொன்னால்?''
என்கிறார் பகவான்.

ஆஸ்ரமத்தில் இருந்த எல்லோரும் அமைதியாக வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்கிறார்கள். அந்த தெலுங்குக்காரர் விடுவதாக இல்லை. தரையில் உட்கார்ந்துகொண்டார். ''நீங்கள் பகவான் சுவாமி, நீங்கள் எங்களைப் போல் இல்லையே. பந்தம் பற்று இல்லாத ஞானி. எங்களைப்போல எத்தனையோ குடும்பங்களை ரக்ஷிக்க வல்லமை படைத்தவர். குடும்ப பாரம் அத்தனையும் தாங்க கூடியவர்'' என்கிறார்.
நாம் அவரிடம் சென்று உடல் வலி பற்றி சொல்கிறோம். குறைபட்டுக்கொள்கிறோம்.
ஒரு வயதானவர் பகவானிடம் வந்து. ''சுவாமி எனக்கு கண் பார்வை கிட்டத்தட்ட முழுதுமாகவே போய்விட்டது. நீங்கள் தான் அதை எனக்கு பெற்றுத்தரவேண்டும்'' என்கிறார். சுவாமி அவரைப் பார்த்து தலை அசைத்தார். ''பாவம் அவருக்கு சரியாக கண் பார்வை இல்லை என்கிறார். என்னை சரியாக்கு என்கிறார். என் முட்டிக்கால் வலியை நான் யாரிடம் போய் சொல்வேன்'' என்று சிரித்தார் எந்த உடல் பாதையும் லக்ஷியம் செய்யாத மஹான்.
No comments:
Post a Comment