ஸ்வபாவம் !! j.k. sivan
பக்தி சிலருக்கு ஒரு தெய்வத்திடம் மட்டும் இருக்கலாம். இஷ்ட தேவதை என்று அந்த தெய்வத்தை மட்டும் வணங்குவதால் தவறில்லை. மற்ற தெய்வங்களை தாழ்த்தியோ இகழ்ந்தோ குறை சொல்வது, தூற்றுவது மட்டும் தான் மிகப் பெரிய தவறு.
ஏனோ சிலர் தங்கள் தெய்வம் தான் சக்தி வாய்ந்தது. பெரியது, மற்றதெல்லாம் சின்னது. வணங்க கூடாது.வேண்டாம் என்று முகத்தை திருப்பி செல்பவர்கள். இதை சொல்லிக்கொடுக்கும் குருமார்களும் இருப்பது நமது துர்பாக்கியம். கடவுளுக்கு உருவமில்லை, நாம, ரூப பேதமில்லை என்று வாய் மட்டும் சொல்லி என்ன பயன்.
ஒரு கிராமத்தில் ஒரு மிராசுதார் இப்படிப்பட்ட ஒரு தீவிர சிவ பக்தர். அவரிடம் ஒரு அருமையான நம்பகமான பணியாள் . அவர் எள் என்றால் எண்ணெயாக வேலை செய்த விசுவாசி. அவருக்கு அவனை ரொம்ப பிடிக்கும். ஆனாலும் ஒரு சின்ன அதிருப்தி. அது அவனிடம் இல்லை. அவன் பேரில்.
''எலே உன் பேர் என்னடா?
''பெருமாளுங்க''
''சரி போ. இதோ பார் உன்னை எப்போவும் ''எலே '' என்று தான் கூப்பிடுவேன். ஓடிவரணும். தெரியுதா.
வெகுநாள் அவருக்கு உள்ளே இது உறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது பார்த்தாலும்''பெருமாளு பெருமாளு;; என்று நொடிக்கொருதரம் அவன் பெயர் சொல்லிக்கூப்பிடுவது சங்கடத்தை அளிக்கவே பொறுக்கமுடியாமல் ஒரு நிலை வந்து ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு
''இந்தா பாரு, நீயி உன் பேரை மாத்திக்கிடணும். புரியுதா?''
''புரியில்லீங்களே சாமி''
''இதோ பார்ரா, உன் பேரை பெருமாளுன்னு இல்லாம வேற பேர் மாத்தி வச்சுக்கோ எங்கறேன்?''
''எதுக்கு சாமி?''
''எனக்கு அப்போ உன்னை இன்னும் ரொம்ப பிடிக்கும். நிறைய சம்பளம் கொடுக்கணும்னு ஒரு ஆசை.''
''எங்க தாத்தா வைச்ச பேருங்க. ஊர் சாமி பேரு.
''அதனாலே என்ன?''

ஊட்டுலே கேக்கறேங்க.''
''கேக்கறது என்ன மாத்திக்கறேன்னு சொல்லு.''

பெருமாளு வீட்டுக்கு போய் விஷயம் சொன்னான்.
வீட்டில் கேட்டதுக்கு ஊரில் கோயில் பூசாரி கிட்ட போய் சொல்ல சொன்னார்கள். பெருமாள் ஊருக்கு போனான்.
பூசாரி விஷயம் கேட்டான்.
''சரி பேத்தை மாத்த நிறைய செலவாகுமே. ஊரிலே சோறு போடணும் அம்புட்டு பேருக்கும். அவங்க முன்னாலே கோவில்லேயே உனக்கு பேர் மாத்திடறேன். கோவிலுக்கு நூறு ரூவா. எனக்கு இருநூறு ரூவா. படையலுக்கு ஊர் சாப்பாட்டுக்கு ஆயிரம் ரூவா கொண்டுவா. ஓடு''
பந்து மாதிரி எழும்பி வந்து பெருமாளு எஜமான் கிட்ட ஊரிலே நடந்ததை சொன்னதும். அவருக்கு இது ஒரு பெரிய விஷயமாக படலை. பணம் கொடுத்தார். ஒருவாரம் கழித்து பெருமாள் வந்தான்.
''என்னடா பெருமாள் பேர் மாத்திட்டியா? ''
''ஆமாம் எஜமான்.''
'' என்னடா பேர்"?''
''பெத்த பெருமாள்'' அய்யா.''
எஜமான் அசந்து போய் உட்கார்ந்தார்.

ஒவ்வொருவரும் தத்தம் மனதில் எதிலும் எந்த மனிதரிலும் தன் விருப்பத்தையே காணும் அன்பு தான் பேரன்பு.
No comments:
Post a Comment