ஆதி சங்கரரின் அத்வைத சாரத்தின் ஒரு துளியாக இந்த நிர்வாண தசகம் அமைந்திருக்கிறது. இன்று மற்ற மூன்று ஸ்லோகங்களை அறிவோம்.
न साङ्ख्यं न शैवं न तत्पाञ्चरात्रं न जैनं न मीमांसकादेर्मतं वा ।
विशिष्टानुभूत्या विशुद्धात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥४॥
Na sankhyam na saivam na thath pancha rathram,
Na jainam , na meemamskader matham vaa,
Visishtanubhoothya vishudhath maka thwath,
Thadekovasishta Shiva kevaloham. 4
ந ஸாங்க்யம் ந சைவம் ந தத்பாஞ்சராத்ரம் ந ஜைநம் ந மீமாம்ஸகாதேர்மதம் வா |
விசிஷ்டாநுபூத்யா விசுத்தாத்மகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௪||
சாங்கிய கோட்பாடுகளா நீ என்று கேட்டால் ஹுஹும் நான் அதை சேர்ந்ததல்ல. அப்படியென்றால் சைவமோ? இல்லையே அதுவும் இல்லை. வைணவர்கள் கடைபிடிக்கும் பாஞ்சராத்ரம் போல் இருக்கிறது என்று நினைத்தால் அதுவும் தவறு. சொல்லிவிடுகிறேன் நான் ஜைன மதமோ, மீமாம்ச சாஸ்திரமோ சொல்பவையும் இல்லை. ஏன் தெரியுமா இந்த ஆத்மா இருக்கிறதே அது பரிசுத்த தனித்த சத்யம், உண்மை. அது தான் நான். விழிப்பு தூக்கத்தில் சகலத்திலும் இருப்பவன். சிவன். எல்லாவற்றையும் அகற்றினாலும் அதன் பின்னும் நிலையாக இருப்பவன்.
न शुक्लं न कृष्णं न रक्तं न पीतं न पीनं न कुञ्जं न ह्रस्वं न दीर्घम ।
अरूपं तथा ज्योतिराकारकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥५॥
Na shuklam na krishnam na raktham na peetham,
Na peenam na kubjam na hruswam na deergam,
Na roopam thada jyothirakarakathwath,
Thadekovasishta Shiva kevaloham. 5
ந சுக்லம் ந க்ருஷ்ணம் ந ரக்தம் ந பீதம் ந பீநம் ந குஞ்ஜம் ந ஹ்ரஸ்வம் ந தீர்கம் |
அரூபம் ததா ஜ்யோதிராகாரகத்வாத்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௫||
எனக்கு என்று ஒரு நிறம் உண்டா என்று கேட்கலாம். நான் வெள்ளை நிறமோ, கருப்போ, சிவப்போ, மஞ்சளோ, எதுவும் இல்லையே. என் உயரம் பருமன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நான் உயரம் இல்லை, குட்டை இல்லை. குண்டும் இல்லை ஒல்லியுமில்லை. ஆகவே எந்த ஒரு நிறமோ, உருவமோ இல்லாத ஆத்மா. ஒளி ஸ்வரூபம். சாதாரண சிவன். தூக்கத்திலும் மறையாதவன். எல்லாம் அழிந்தாலும் அழியாத நிலையானவன்.
न जाग्रन्न मे स्वप्नको वा सुपुप्तिर्न विश्वो न वा तैजसः प्राज्ञको वा ।
अविद्यात्मकत्वान्त्रयाणां तुरीयं तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥६॥
Na jagranna me swapnako vaa sushupthi,
Ne viswo na vaa thaijasa pragnako vaa,
Avidhyathmakathwath trayanam thureeyam,
Thadekovasishta Shiva kevaloham. 6
ந ஜாக்ரந்ந மே ஸ்வப்நகோ வா ஸுபுப்திர்ந விச்வோ ந வா தைஜஸ: ப்ராஜ்ஞகோ வா |
அவித்யாத்மகத்வாந்த்ரயாணாம் துரீயம் ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௬||
எனக்கு விழிப்பு நிலை என்று தனியாக எதுவும் இல்லை. கனவு காண்பவனும் அல்ல நான். தவன். எனக்கு தூக்கமும் கிடையாது. சுருக்கமாக சொன்னால் உங்கள் உலக வாழ்க்கையில் நீங்கள் காணும் உணர்வுகள் எதுவும் இல்லை நான். கனவில் தோன்றும் காட்சிகளில் என்னை காண முடியாது. எந்த உணர்ச்சியில் என்னை தேடாதே. நான் மேலே சொன்னதெல்லாம் அவித்யா என்பார்களே அது தான். நான் அதல்ல. உனக்கு புரியும்படி ஒரு விஷயம் சொல்கிறேன் கேள். விழிப்பு, கனவு, தூக்கம் என்ற வழக்கமான நீ அறிந்த மூன்றும் கடந்து இன்னுமொன்று நாலாவதாக இருக்கிறது. அதற்கு பெயர் துரீய நிலை. அதில் இருப்பவன் நான். என் பெயர் அங்கே சிவன். தூக்கத்தையும் மற்றதையும் தாண்டி நிற்பவன். எது அகன்றாலும் அகலாமல் தனித்து நிலையாக நிற்பவன்.
இந்த கட்டுரையோடு இணைத்துள்ள அழகிய புன்சிரிப்பு உதிர்க்கும் ஆதி சங்கரரை கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சமாதி மந்திர் எனும் ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இன்னும் மூன்று பாக்கி இருக்கிறது. சொல்கிறேன்.
No comments:
Post a Comment