MY DEEPAVALI GIFT FOR YOU ALL -
டாக்டர் கபாலி ஒரு சிறந்த புற்று நோய் நிபுணர்.
டாக்டர் அர்ஜண்டாக ஒருநாள் வேறு ஒரு ஊருக்கு ஒரு பெரிய மருத்துவ மாநாடு செல்வதற்கு புறப்பட்டார்.
அவரது புதிய ஆராய்ச்சி மருத்துவ உலகில் பல உயிர்களை காப்பாற்ற போகிறது. உலகமே வியக்க போகிறது. ஒரு பெரிய உலக அளவு மருத்துவர் மாநாட்டில் அழைத்து மேதாவி பட்டம் கொடுக்கப்போ கிறார்கள்.
இன்னும் 27 மணி நேரம் உலகம் வியக்கப்போகிறது அவரை கண்டு. சீக்கிரம் போகவேண்டும்.
''நான் எவ்வளவு உழைத்து பெறுகிறேன் இந்த பட்டம்!'' கடவுளை வணங்கினார் கபாலி.
நகத்தை கடித்துக் கொண்டு விமானநிலையத்தில் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கிறதே.
துரதிர்ஷ்டம் யாரை விட்டது. விமானம் பறந்த ரெண்டு மணி நேரத்திலே அதில் கோளாறு.
''விமானத்தில் சிறு கோளாறு. சற்று நிமிஷத்தில் ஓரிடத்தில் தரை இறங்கப்போகிறது. பயப்படவேண்டாம். ஜாக்கிரதையாக இறங்குவீர்கள்'. ஒலிபெருக்கி அலறியது.
கையில் பெட்டியோடு முகத்தில் கவலையோடு அந்த தற்காலிக விமான அதிகாரியை போய் பார்த்தார் கபாலி
''ஒரு மாநாடு போகவேண்டுமே . இப்படி நடுவில் இறங்கவேண்டியதாகி விட்டதே. எப்படி குறித்த நேரத்தில் இன்னும் பத்து மணி நேரத்துக்குள் அங்கே போய் சேர்வது. வேறு ஏதாவது இங்கிருந்து விமானம் செல்ல வழி உண்டா?
''அப்படி எதுவும் இல்லையே டாக்டர். ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள். இங்கே ஒரு வாடகை கார் கிடைக்கும். அதில் ஒரு மூன்று நாலு மணி நேரம் பிரயாணம் செயது அடுத்து ஒரு பட்டணம் போனால் அங்கிருந்து சில ஹெலிகாப்டர்கள் குறித்த இடத்துக்கு கொண்டு சேர்க்கும்.''
கபாலி அந்த ஊரிலிருந்து காரில் பறந்தார். அடாடா ஒரு பெரும் புயல் எங்கிருந்தோ வந்து குறுக்கிட்டது.
இரவு நேரம். போகும் பாதையிலிருந்து வேறு பாதையில் தவறாக கார் பறந்தது. அடாடா இன்னும் ரெண்டு மணி நேரம் ஓடி விட்டதே. சரி அவ்வளவு தான் என் அதிர்ஷ்டம். எனக்காவது எல்லோர் எதிரிலும் மரியாதை பட்டமாவது ?''
புயலைத்தொடர்ந்து விடாத மழை. வானம் பொத்துக் கொண்டது. முன் பின் அறியாத ஏதோ ஒரு தெருவில் கார் மெதுவாக நுழைந்தது. தெருவெல்லாம் தொப்பம். பசி எங்கும் ஒரு வீடு கூட காணோம். கபாலிக்கு களைப்பு. மயக்கம் வரும்போல் இருந்தது. காரை ஓட்டிக்கொண்டே சென்றார்.
''அப்பாடா ஒரு தொத்தல் பழைய வீடு தெரிகிறது.'' உள்ளே விளக்கு ஒளி தெரிந்ததும் மூச்சு வந்தது. கொஞ்சம் தண்ணீராவது கேட்கலாம்.
காரை நிறுத்தி கதவைத் தட்ட ஒரு கிழவி கதவை திறந்தாள்.
''உங்கள் வீட்டில் போன் இருக்கிறதா அர்ஜண்டாக போன் பேசவேண்டும்.''
''எங்கிட்ட அந்த வசதி எல்லாம் இல்லையே. உள்ளே வாருங்கள். கொஞ்சம் சூடாக ஆகாரம் இருக்கிறது தருகிறேன். இளைப்பாருங்கள்.''
போகவேண்டிய இடத்துக்கு வழி சொன்னாள். நீங்கள் சாப்பிடுங்கள். நான் கொஞ்சம் பிரார்த்தனை செய்ய வேண்டும்'' என்றாள் கிழவி.
சூடாக அவள் கொடுத்த ஆகாரத்தை விழுங்கி கொண்டே டாக்டர் கபாலி அவளை பார்த்தாள் . தரையில் விழுந்து வணங்கிய கிழவியின் எதிரே ஒரு தொட்டில். அசையாமல் அதில் ஒரு குழந்தை.
முகத்தில் கவலையோடுஅந்த கிழவி தொடர்ந்து ப்ரார்த்தித்துக்கொண்டு இருந்தாள் .
'
'என்னம்மா கவலை உங்களுக்கு?''
''என் பிரார்த்தனையை கிருஷ்ணன் நிறைவேற்றுவான் என்று நம்புகிறேன்''
'
'என்ன துன்பம் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்தால் உதவுகிறேன்'' டாக்டர் கபாலி மனம் திறந்து நன்றியில் சொன்னார்.
''கிருஷ்ணன் என் பிரார்த்தனை எல்லாம் நிறைவேற்றிவிட்டான். இன்னும் ஒன்று தான் பாக்கி. ஏன் அதை மட்டும் இன்னும் நிறைவேற்றவில்லை என்று ஆச்சர்யப்படுகிறேன்'' என்றாள் கிழவி.
''அது என்ன என்று என்னிடம் சொல்லலாமா' என்று கெஞ்சினார் கபாலி
''இந்த தொட்டிலில் அசையாமல் இருப்பவன் என் பேர குழந்தை கோபாலன். அவன் தாய் தந்தை இருவருமே ஒரு கார் விபத்தில் நிமிஷத்தில் மறைந்து விட்டார்கள். ஏதோ ஒரு புற்றுநோய் இந்த குழந்தைக்கு. எல்லா டாக்டர்களும் கைவிட்டு விட்டார்கள். யாரோ ஒரு டாக்டர் எங்கோ இருக்கிறாராம். அவர் தான் கடைசி நம்பிக்கை. அவர் தான் இந்த நோயை குணப்படுத்துவதில் நிபுணராம் . அவரை என்னைப்போன்ற ஏழை எப்படி எங்கே போய் பார்த்து என் ஒரே வாரிசு இந்த உயிரை காப்பாற்றுவது? கிருஷ்ணன் வழி காட்டுவான் என்ற நம்பிக்கை இன்னும் போகவில்லை. விடாமல் அவனை தொழுது வேண்டிக்கொண்டு இந்த பேரக்குழந்தையை காப்பாற்ற சரணடைந்து கொண்டே இருக்கிறேன்.'' அழுது கொண்டே கிழவி சொன்னாள் .
கபாலி சிலையாக நின்றார். கண்ணில் மழை.
ஆஹா, நான் புற்றுநோய் நிபுணன். எனக்கு மேதாவி பட்டம். கிளம்பினேன். விமானம் கோளாறு. போக முடியவில்லை. அப்படியும் தொடர்ந்து முயன்றேன். புயல், மழை, இரவில் பாதை மாறியது தெரியாது. வெகு தூரம் இங்கே வந்துவிட்டேன்.
காரணம் ?
கிழவியின் பிரார்த்தனை.
''அம்மா கவலை படாதீர்கள். உங்கள் குழந்தையை காப்பாற்ற நான் முயல்வேன் . நான் தான் நீங்கள் தேடிய அந்த டாக்டர்'கபாலி '
கிழவியின் இரு கரங்கள் சிரத்துக்கு சென்றன. '' கிருஷ்ணா... நீ என் பாக்கி ஒரு பிரார்த்தனையையா நிறைவேற்றிக்கொண்டிருந்தாய். நான் புரிந்து கொள்ளவே இல்லையே
No comments:
Post a Comment