சூர் ஸாகரம்
ஓடிவந்த யசோதை பதறிப்போய் ''என்னடா ஆச்சு உனக்கு. ஏன் இப்படி அழறே, வயிற்றை வலிக்கிறதா?'' பசியா? யாரு உன்னை அடிச்சா?''
''சொல்லமாட்டேன் போ''
''கண்ணா, கட்டிக் கரும்பு இல்லையா நீ எனக்கு. சொல்லுடா ராஜா? ஏன் அழறே, நான் சரி பண்ணிடுறேன் அப்பா''
''இதோ இவன் தான் '' ... கிருஷ்ணன் கை பலராமனை சுட்டி காட்டியது.
''பலராமன் என்ன செய்தான் சொல் கண்ணா?''
''நீ எனக்கு அம்மா இல்லையாம்.. அப்புறம்.......''
''அப்புறம் ...என்னடா கண்ணா சொன்னான் அவன்?'' கிருஷ்ணனை வாரி அணைத்துக்கொண்டு தடவிக்கொடுத்தாள் யசோதை.
''கடையிலே தான் நீ என்னை வாங்கினியாம்? கறிவேப்பிலையை கொடுத்துட்டு?''
ஓ வென்று மீண்டும் அழுதான் கிருஷ்ணன்.
''அதெல்லாம் பொய் . நம்பவே நம்பாதே கண்ணா''
'எப்பவும் என்னை இப்படியே சொல்றேன் பலராமன் . உம்ம்ம்ம்ம்.... இனிமே விளையாடவே போகமாட்டேன்.
''இல்லேடா கண்ணா. நீ நிறைய எங்கே வேணா போய் விளையாடுடா செல்லம். நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்'' என்றாள் யசோதை.
''பலராமன் கேக்கறான் ''யாரடா உங்கப்பா, எவள்டா உனக்கு அம்மா?'' -- சொல்லி சொல்லி சிரிக்கிறான் பலராமன் எப்பவுமே.
''ஏண்டா என்னை இப்படி கேக்குறே?'' ன்னு நான் கேட்டா என்ன சொல்றான் தெரியுமா உனக்கு?'' என்றான் கிருஷ்ணன்
''சொல்லுப்பா சொல்லு அவன் பொல்லாதவன் பொய் சொல்றவன்''.
''எங்கப்பா நந்தகோபனை பாரு வெள்ளை. எங்கம்மாவை பார் வெள்ளை. என்னைப்பாரு ''வெள்ளை'' நீ மட்டும் அட்டை கரி. கருப்பு. தொட்டா ஒட்டிக்கிற கருப்பு''. என்று கேலி பன்றான் மா'' கேவி கேவி அழுதுகொண்டே வருத்தத்தோடு சொன்னான் கிருஷ்ணன்.
''ஐயோ. தெய்வமே '' என்றாள் யசோதை.
''பலராமன் இப்படி எல்லாம் என்னை கேலிபண்ணினா இந்த தெரு பசங்கள் எல்லாம் என்னை பார்த்து சிரிக்கிறானுங்க . நீ என்னை மட்டும் தான் அடிக்கிறே. பலராமனை ஒண்ணும் சொல்றது கூட இல்லை. அடிக்க மாட்டே''.
''ஹா ஹா'' என்று வாய் கொள்ளாமல் சிரித்தாள் யசோதை. கிருஷ்ணனின் பிஞ்சு முகத்தில் பலராமனின் மேல் கோபம் தெரிந்து அதைப் பார்த்த அவளுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்தது.
''இதோ பாருடா கண்ணா, இந்த பயல் பலராமன் பிறந்ததிலிருந்தே பொல்லாதவன், ரௌடி, விஷமக்காரன் என்று எல்லோருக்குமே தெரியும் நீ அப்படி இல்லை. எல்லோருக்குமே செல்லம். அதாலே தான் அவன் அப்படி எல்லாம் இல்லாததும் பொல்லாததும் உன்னைப்பத்தி சொல்லியிருக்கான் . நீ தாண்டா என் அருமை செல்ல பிள்ளை. உன் அம்மா நானேதான் டா. இதோ பார் இந்த லக்ஷம் பசுக்கள் சாட்சியா சொல்றேன். நான் தான் உன் அம்மா, உன் அம்மா, உன் அம்மா. போதுமா''.
கிருஷ்ணன் கண்ணைத் துடைத்துக்கொண்டு சிரித்தான். அவன் கன்னத்தில் ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாள் யசோதை.
சூர்தாஸ் பாடலுக்கு என் கற்பனையில் உருவம் கொடுக்கும்போது பரம ஆனந்த நிலை எனக்கு.
O mother mine, Dau (Balram)forever teases me.
you never gave birth to me,
and I was bought in the market.
this is what he tells me
o mother mihne, Dau forever teases me.
fed up of his teasing ways,
I don't go out to play.
who is your mother?
and who is your father?
again and again he says.
Yasoda's fair, so also Nanda,
how come you're so dark?
Dau provokes, the gopas laugh,
and all have such a lark.
me, mother, you want to beat,
but Dau you never even scold,
seeing the anger on Mohan's face
Yasoda's joy was untold,
listen Kanha, Balbhadra is naughty,
wicked from his birth,
you're my son, and I your mother,
I swear by mother cows worth!
No comments:
Post a Comment