Tuesday, October 17, 2017



ஒரு நவரத்ன விஷயம் J.K. SIVAN

ஒரு ஒன்பது (நவரத்ன) விஷயங்கள் நம்மை இன்று நெருங்கியிருக்கிறதே. அவை என்ன வென்று பார்க்கவேண்டாமா, படிக்க வேண்டாமா, புரிந்து கொள்ள வேண்டாமா, புரிந்துகொண்டால் மட்டும் போதவே போதாதே. விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு பின்பற்றவேண்டும்.

இப்படி செய்தால் என்னய்யா பயன்?

பயனா? அனுபவித்துப்பார் உனக்கே தெரியும் புரியும்.மீதி பேருக்கும் நீயே ஓடிப்போய் சொல்வாய்.

1. பிரார்த்தனை, ப்ரேயர் என்றெல்லாம் சொல்கிறோமே. அதனால் என்ன பிரயோசனம்?
அது உன் காரில் இருக்கும் ஸ்பேர் சக்ரம், ஸ்டெப்னி மாதிரி. நடுரோடில் ஈ காக்கா இல்லாத இடத்தில் 108 டிகிரி வெயிலில் உன் கார் புஸ் என்று நின்றுவிட்டால் பங்க்சர் ஆன சக்கரத்தை மாற்றி நீ அங்கிருந்து ஓட உதவுகிறதே ஸ்டெப்னி , அதுபோல் பிரார்த்தனை உனக்கு கஷ்டம் எப்போது வருகிறதோ அப்போது உனக்கு உதவுவது மட்டுமல்ல. நீ காரை சரியான வழியில் ஓட்டுவதற்கு, செல்ல, உதவும் ஸ்டீரிங் வீல் மாதிரியும் கூட. உன்னை சரியான பாதையில் வாழ்க்கைப் பயணத்தில் செலுத்த உதவுவது கடவுளை நோக்கி நீ
செலுத்துகிற பிரார்த்தனை தான், சரியா?

2. காரில் உனக்கு முன்னாலே இருக்கும் கண்ணாடி பெரியதாகவும் பின்னால் இருக்கும் கண்ணாடி சிறியதாகவும்
இருக்கிறதே, அதே போல் தான் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்காலம் என்பது உனக்கு முன்னால் இருக்கும் கண்ணாடி. உன் கவனம் அதில் தான் இருக்க வேண்டும். கடந்த காலம் தான் பின்னாலே இருக்கும் கண்ணாடி. அந்த கண்ணாடி எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்க அத்தனை முக்கியம் அல்ல. தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப் பார்க்கத்தான்.

3. மற்றவர்களோடு நீ வைத்துக்கொண்டி ருக்கும் நட்பு என்பது ஒரு புத்தகம் மாதிரி யோசித்து பார். அரை நிமிஷத்தில் ஒரு நெருப்புக்குச்சி போதும் அதை எரித்து அழிக்க, ஆனால் எத்தனை காலம் தேவையாக இருந்திருக்கும் அந்த
புத்தகத்தை எழுத. கவனத்தோடு நட்பை போற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .

4. கொஞ்சம் சமயோசிதமாக வாழ்க்கையை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. எதுவுமே சாஸ்வதமில்லை. எனவே ஏதேனும் கொஞ்சம் திருப்தியாக நடந்தால் உடனே சந்தோஷத்தோடு வரவேற்று வந்தபோது அதை கெட்டியாக பிடித்துக்கொள். விட்டால் அது விரைவில் மறைந்து விடும். அதே போல் நினைத்தபடி, எதிர்பார்த்ததுபோல் சில
காரியங்கள் நடக்கவில்லை என்றால் தலையைக் கையில் ஏந்த வேண்டாம். கவலையை விடு. அதுவும் ரொம்ப நாள்
ஓடாது. விரைவில் நல்ல திருப்பத்தைத் தரும்.

5. ஒரு அழகான பொன் மொழியை நினைவு கூறுவோமா? பழைய நண்பர்கள் தங்கம் போன்றவர்கள். அப்பப்போ, புதிசு
புதிசாக நாம் பிடித்துக் கொள்ளும் நண்பர்கள் வைரங்கள் என்று தோன்றட்டுமே. வைரங்கள் இருந்தாலும் அதைச் சுற்றி
கெட்டியாக பிடிமானமாக இருக்க தங்கம் தான் தேவைப்படுகிறது. வைரத் தோடு, வைர மோதிரம், வைர மூக்குத்தி வெறும் வைரத்திலா போட்டுக்கொள்ள முடிகிறது. அதை ஆபரணமாகக் கட்ட ஒரு தங்கக் கம்பியாவது தேவை. இல்லையா?

6. '' போச்சு, எல்லாமே போச்சு'' என்று இடிந்து போய் உட்காருகிரோமே, சில சமயம். நம்பிக்கை நம்மை விட்டுப்போனதால்
பயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அப்போது தான் கடவுள் மீது நமக்கு நம்பிக்கை இருந்தால் அவன் நமக்கு ஆறுதல் சொல்வது உள்ளே கேட்கும். ''ஹே அசடே, உன் முன்னே தோன்றுவது பாதையின் முடிவு அல்ல, ஒரு வளைவு தானே. ஏன் பதற்றம்? வளைவைக் கடந்து எதிரே பார். நேர் பாதை தெரியும்''

7. கடவுளைப் பற்றி சொல்லும்போது இன்னொன்று நினைவில் கொள்ளவேண்டும். நீ ரொம்ப கஷ்டப்படும் வேளையில் உன் கஷ்டம் கடவுளை நம்பியதால் தீர்ந்து விடுகிறது. அப்போது க''டவுளே என்னே உனது சக்தி'' என்று புகழ்கிறாய். அவனது சக்தி மேல் அபார நம்பிக்கை வைக்கிறாய். ஒரு வேளை நீ வேண்டியும் கடவுள் உன்னை உன் கஷ்டத்திலிருந்து மீட்க உதவவில்லை என்று தோன்றினால் என்ன புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா?. ''உன் கஷ்டத்தி லிருந்து மீண்டுகொள்ள உனக்கே தேவையான சக்தி அவன் கொடுத்தி ருப்பதால் அவனது சக்தி தேவையில்லை என்று கடவுள் உன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறானென்று''.

8. பிரார்த்தனை என்று பேசுகிறோமே அதில் அமிர்தம் போல ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளவேண்டும். நீ பிறர்க்காக
பிரார்த்தனை பண்ணும்போது கடவுள் உன் பிரார்த்தனையினால் உனக்காக அவர்களை ரக்ஷிக்கிறான். அதே போல்தான் நீ சந்தோ ஷமாக, நலமோடு வாழும் வேளையில் உனக்காக யாரோ, எங்கோ எப்போவோ கடவுளைப் பிரார்த்தனை செய்தி
ருக்கி றார்கள் என்று கடவுளுக்கும் அவர்களுக்கும் நன்றி சொல்லவேண்டும்.
''லோகா சமஸ்தா சுகினோ பவந்து'' வை நமது முன்னோர்கள் இதற்காகவே அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

9. எதற்கேடுத்தாலும் ஒரு கவலை, மன வியாகுலம் வேண்டாமே. நாளைக்கு வரப்போகிறது என்று அஞ்சும் ப்ராப்ளத்தை இத்தகைய கவலை தீர்க்கப்போ வதில்லையே. ஆனால் என்ன செய்யும் தெரியுமா? கொஞ்ச நஞ்சம் இன்றிருக்கும் மன அமைதியை நிச்சயம் சாப்பிட்டு விடும்.

DEAR NON TAMIL KNOWING FRIEND, THIS IS FOR YOU . i. Prayer is not a "spare wheel" that you pull out when in trouble, but it is a "steering wheel" that directs the right path throughout.
ii. A Car's WINDSHIELD is so large & the Rear view Mirror is so small? Because our PAST is not as important as our FUTURE. So, Look Ahead and Move on.
iii. Friendship is like a BOOK. It takes few seconds to burn, but it takes years to write.
iv. All things in life are temporary. If thing are going well, enjoy it, they will not last forever. If things are going wrong, don't worry, they can't last long either.
v. Old Friends are Gold! New Friends are Diamond! If you get a Diamond, don't forget the Gold! Because to hold a Diamond, you always need a Base of Gold!
vi. Often when we lose hope and think this is the end, GOD smiles from above and says, "Relax, sweetheart, it's just a bend, not the end!
vii. When GOD solves your problems, you have faith in HIS abilities; when GOD doesn't solve your problems HE has faith in your abilities.
viii When you pray for others, God listens to you and blesses them, and sometimes, when you are safe and happy, remember that someone has prayed for you.
ix. WORRYING does not take away tomorrow's TROUBLES, it takes away the precious ''TODAY''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...