Thursday, October 12, 2017

'அவன்''

'அவன்'' J.K. SIVAN

''சார் உங்களுக்கு பெர்த் டே என்று கேள்விப்பட்டே
னே'' .

ரெங்குடு சார் எனக்கு மூணு பிறந்தநாள் எதைச்சொல்றேள் நீங்க?

''அக்டோபர் ஒன்பது ' என்கிறார் ரெங்குடு.

'' அது மூணுலே ஒண்ணு . உலகமே கொண்டாடறாளே ஏப்ரல் ஒண்ணாம் தேதி சர்வ மு...................... தினம். எனக்கு ஒரு பெர்த்டே அப்படி ஒண்ணும் பொருத்தமாக அமைஞ்சிருக்குன்னு வச்சுக்குங்கோ''
எனக்கு இந்த பட்டத்தை கொடுத்தவர் என்னுடைய பள்ளிக்கூட வாத்யார் சுப்ரமணிய ஐயர் . அவர் தான் எனக்கு ப்ரம்மா இந்த விஷயத்திலே'' என்ன விஷயம் சொல்லுங்கோ. வேறு ஏதாவது முக்கியமா பேசுவோம்'' என்றேன்.

''இன்னிக்கு ஒரு அருமையான பாட்டு ஒன்று கேட்டேன் சார்

'' இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ தேடி அலைகிறார், ஞானப் பெண்ணே '' என்று சீர்காழி பாடியது. எவ்வளவு அர்த்தம். கொஞ்சம் அதைப் பத்தி சொல்லுங்களேன். உங்க பிறந்த நாள்லே ஒரு நல்ல விஷயம் தெரிஞ்சுக்கிறேன்'' என்கிறார் ரெங்குடு.

ரொம்ப சீரியசான விஷயம் ஆச்சே. அதைப் பத்தியே பேசலாமா? .அப்படியென்றால் அது ''அவனை'' ப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும்.

''அவன்'' என்கிறீர்களே அது யார்?

''அவனா? அவன் ஹரியுமில்லை, ஹரனுமில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் அவன் தான் காரணன்.
அப்பாலுக்கு அப்பாலும் இருப்பவன். கருப்பு, சிவப்பு, வெளுப்பு, எந்த நிறத்திலும் இருப்பவன், இல்லாதவன். அசையாதவன். புரியாமலே இருப்பவன். பெரியதில் பெரியதும், சிறியதில் சிறியதுமானவன். அண்ட பகிரண்டம் கடந்தவன். அவற்றில் நிரம்பியவன்.

அறியாதவன் சொல்கிறான் ஆகாசத்தை பார்த்துக்கொண்டு, காலாட்டிக்கொண்டு, ' அவன் எங்கோ தூரத்தில், வெகு தூரத்தில், கண் காணாமல் ஆகாசத்தில் இருப்பவன் '' என்று, ஆனால் விவரம் புரிந்தவன் என்ன சொல்கிறான் காதில் விழுகிறதா?

''இதோ உன்னிலும் என்னிலும் எதிலுமே இருக்கிறானே. தொடலாமே, உணரமுடிகிறதே'' பளிச்சென்று சொல்கிறான்.

'' யாரப்பா அது, வெயிலில் காட்டிலும் மேட்டிலும் குடைபிடித்துக் கொண்டு, செருப்பு பிய்ந்து, அவனைத் தேடிக்கொண்டு?,

இதோ உன் கண் எதிரே இருப்பவனை காணாமல் வேறு எங்கே போய் தேடுகிறாய். சட்டை பட்டனை திறந்து உன் நெஞ்சை தொட்டுப்பார், தெரிவானே உள்ளே.''

பெரிய பெரிய கோபுர கோவில்கள், நிறைய படியோடு குளங்கள், மதில்கள் சுவர்கள், நந்தவனங்கள், ஞானிக்கு எதற்கு இதெல்லாம்.

மனமே கோவில், இதயம் தான் புஷ்கரணி. ஏன் நமது பூசலார் ஞாபகம் இல்லையா? திருநின்றவூரில் மரத்தடியில் அமர்ந்து பிரம்மாண்ட ராஜகோபுரம் கட்டி சிவனை பிரதிஷ்டை மனதிலேயே செய்தவர். உருவாகவும் அருவாகவும் உணர முடிகிறதே அவனை.

இதை மனதில் கொண்டு தான் அந்த ஞானி ஒருவர் கடுமையாகவே வார்த்தையில் கொட்டியிருக்கிறார்.

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே

'எடுத்தேன் கவுத்தேன்' என்று சொல்பவர் அல்ல அந்த ஞானி. சகலமும் அறிந்து, அதை சக்தி வாய்ந்த சொற்கட்டுகளை உபயோகித்து வடிப்பவர். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று சொல்வாரே.

இதற்க்கு யாரும் அர்த்தமே சொல்லவேண்டியதில்லை. வார்த்தையே எழுந்து நின்று கை தட்டி கூப்பிட்டு பேசுகிறதே.

சிவ வாக்கியர் சிவ வாக்கியர் தான் என்று அடிக்கடி சொல்வேனே.

''தாத்தா சார், அசாத்தியம் சார். உங்க கிட்ட நிறைய கேக்கணும். சிவ வாக்கியர் நிறைய படித்து சொல்லுங்கள் வருகிறேன் என்று தலையாட்டி மகிழ்ந்து வணங்கிவிட்டு சென்றார் ரெங்குடு..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...