சூர் சாகரம் J.K. SIVAN
உன் மேலே சத்தியம்...
அம்மாவை இவ்வளவு பேச்சு பேசுகிறோமே . நாம் எப்படி வளர்ந்தோம் என்பது ஞாபகம் இருக்கிறதா? எப்படி சாப்பிட்டோம் தெரியுமா? எப்படியெல்லாம் படுத்தி இருக்கிறோம் என்று நினைவிருக்கிறதா?
இதோ இந்த யசோதை படும் பாட்டை அறிந்து கொண்டு, தெரிந்து கொண்டு, அதில் கொஞ்சமாவது நமது அம்மாக்கள் பட்ட அவஸ்தையை உணர்வோம்.
என்றாவது ஒருநாளாவது அவன் தரையில் அமர்ந்து தட்டில் சாப்பிட்டவனா? ஹுஹும். அம்மா யாசோதை மடியில் ஆடிக்கொண்டும் அசைந்து கொண்டும் ஓடுவான். இழுத்து பிடித்து மடியில் மறுபடியும் அமர்த்திக் கொள்வாள். ஒரு வாய் ரெண்டு வாய் சாதம் ஊட்டுவதற்குள் அவள் படும் பாடு... அப்பப்பா.. என்னால் சொல்லவோ எழுதவோ முடியாத ஒரு காரியம். பாதி உள்ளே போகும். பாதி துப்பிவிடுவான். ஒவ்வொருவேளையும் யசோதை புடவையெல்லாம் பருப்பு சாதம்.
எத்தனை கதை சொல்லவேண்டும். எத்தனை மரம், செடி, காக்கை குருவி, சூரியன் சந்திரன் நக்ஷத்ரம் எல்லாம் காட்டவேண்டும். ஆட வேண்டும். பாடவேண்டும்.
என்ன தோணுமோ? வாயிலிருந்து கொஞ்சம் சாதத்தை எடுத்து எதிரே அப்பா நந்தகோபன் வாயில் போடுவான். எதிரே நந்தகிராமம் கோபியர் எவள் வாயிலாவது கொஞ்சம். அதில் அவனுக்கு எத்தனை சந்தோஷம். காக்கும் கடவுள் அல்லவா? மற்றவர் சாப்பிட்டால் அத்தனை திருப்தி. கொடுத்து வைத்தவர்கள் அவர்கள். கடவுள் கொடுத்த உணவை வாங்கி சாப்பிட்டவர்கள்.
ஒரு கையில் எப்போதும் கொஞ்சம் வெண்ணை இருக்கும். அப்பப்போ நக்கி விழுங்குவான். ஒரு சட்டியில் கெட்டி தயிர் அருகே இருக்கும். அதில் ஒரு கை துழாவிக் கொண்டிருக்கும்.
இப்படி அவனுக்கு பாடிக்கொண்டே ஊட்டும்போது யசோதையின் சந்தோஷத்துக்கு மூன்று உலகைக் கொடுத்தாலும் ஈடாகாது.
ஒரு நாள் அந்த சந்திரன் எனக்கு விளையாட வேணும் அப்போதான் சாப்பிடுவேன்'' என்பானே . இல்லாவிட்டால் தரையில் விழுந்து புரளுவான்.
''போ உன் மடியில் உட்காரமாட்டேன்'' என்று கோபிப்பான்.
''கிட்ட வராதே, தலை வாரி பின்னிக்க மாட்டேன்''
''நான் உனக்கு குழந்தே இல்லை நீ வேண்டாம் போ ''
''அதோ அந்த அப்பாவுக்கு மட்டும் தான் புள்ளை'' என்று நந்தகோபனை காட்டுவான்.
''இல்லேடா கிருஷ்ணா வா உனக்கு ஒரு நல்ல கதை, ரகசியம் சொல்றேன் வா. சாப்பிடு.'' என்பாள் யசோதை
''என்ன ரகசியம் சொல்லு?''
''ஒரு அழகான பொண்ணு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறேன்''
''சீக்கிரம் சாப்பிட்டாவா?''
''ஆமாம் டா கண்ணா''
''சரி எனக்கு கல்யாணம் என்றால் பிடிக்கும்.
''அப்படின்னா சாப்பிடறியா ''
''உன் மேலே சத்யம் ஒழுங்கா அப்படின்னா சாப்பிடறேன்'' என்று வாயை திறப்பான் ''
சூர் தாசரை மிஞ்சிய கற்பனா சக்தி எனக்கு இல்லையே!!
Kanha eats in Yasoda's lap.
some he eats, some he drops,
as the ladies of Nandgaon watch,
some he eats and some he puts
in Nanda's mouth,
this joy is beyond recount.
some he eats, some gives to gopas,
butter in his hands, curd in doniyas.
The joy of Yasoda
the three worlds cannot account.
the meal is over, Kanha washes,
for Sur the left-overs count.
other, the moon I want as my toy.
I will roll on the floor,
Not come to your lap,
Nor have my hair-braid combed.
No longer will I be your child
I will only be Nand baba's boy.
Listen son, come to me
There's a secret from bal we can hide.
Hiding her smile, Yasoda said,
I'll give you a brand new bride.
Quick then, Mother, I swear by you
A wedding is what I'd like.
No comments:
Post a Comment