Tuesday, October 31, 2017

பார்போற்றும் பரம ஹம்சர்




பார்போற்றும் பரம ஹம்சர் J.K SIVAN

அற்புத உரையாடல்

வெல்லக்கட்டி எங்கிருக்கிறதோ அங்கே எறும்புகள் சேராதா?
அந்த சின்ன அறையில் காற்றோட்டமாக வெளிச்சமாக மட்டும் இல்லை, ஞான ஒளியும் வேத சாரமும் சேர்ந்திருந்தது.

பரமஹம்சர் என்ன சொல்கிறார் என்று பாக்கியசாலிகள் நிறையபேர் அங்கே காத்திருந்தனர். பரம ஹம்சர் பேசிக்கொண்டிருக்கிறார்.

ப: ''மனிதர்களை நாலு வகையாக பிரிக்கலாம். உலக வாழ்க்கை சங்கிலியால் பிணைக்கப்பட்டவர்கள். தவறுதலாக கூட கடவுளை நினைக்காதவர்கள்.

மோக்ஷம் முக்தியை தேடுவோர்கள், இவர்களுக்கு முக்தி நல்லதை கொடுக்கும் என்று தெரியும், ஆனால் உலக இன்பங்களில் இருந்து விடுபடாதவர்கள். ஆற்றில் ஒரு கால். சேற்றில் ஒரு கால் ஆசாமிகள்.

முக்தியை அடைந்தவர்கள், சாதுக்கள், மகாத்மாக்கள்.மண் பெண் பொன் ஆசையை துறந்தவர்கள். உலகப் பற்றை அறுத்தவர்கள். பகவான் சிந்தனையில் ஈடுபடுபவர்கள்.

கடைசியாக என்றும் நிரந்தரமாக ஸ்வதந்திரமான ஜீவர்கள். இந்த கடைசி ராகத்தில் நாரதர் ஒருவர். மற்றவர் நலத்துக்காக, நன்மைக்காக உலவு பவர்கள். ஆன்மீக உண்மைகளை போதிப்பவர்கள்.
இவர்கள் எப்படி என்றால் ஆற்றில் மீன் பிடிக்க வலை விரித்தால் அதில் சிக்காத மீன்கள். சிலது மாட்டிக்கொண்டு தப்பிக்கும். அது போன்றவர்கள் முக்தி தேடி அடைந்தவர்கள். எல்லாமே தப்பாது. முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் வலையில் சிக்கி அதிலேயே மாட்டிக்கொண்ட மீன்கள்.தப்ப முயலாதவர்கள்.

நான் சொன்ன வலை தான் மண் பெண் பொன் எனும் மூவாசைகள். குப்புசாமி மரணத்தருவாயில் இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறான். அவன் மனைவி ''நீங்க பாட்டுக்கு போயிடுவீங்க. எனக்குன்னு என்ன செஞ்சீங்க?'' என்று தான் அழுகிறாள்? விளக்கு பெரிசா திரி எரியுதுடா கோவாலு, கொஞ்சம் திரியை இழுத்து விட்டு மெதுவா திரி எரிஞ்சு விளக்கு சின்னதா பண்ணு . எண்ணையை குடிக்குது. அப்பாரு போய்க்கினு இருக்கிறார். கொஞ்ச நேரம் விளக்கு நின்னு எரியட்டும் ''

வலையில் மாட்டிக்கொண்ட ஜீவன்கள் கடவுளைபற்றி கொஞ்சமும் சிந்தனை இல்லாத பிறவிகள். கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் ஊர் வம்பு, முட்டாள் தனமான ஏதோ பேச்சு. எந்த பிரயோஜனமும் இல்லாத ஏதோ வேலை.
என்னடா செய்றே என்று கேளுங்க. ''இதோ பாத்தி கட்டிக்கிட்டு இருக்கிறேன். செவத்தை சுரண்டிக்கிட்டு இருக்கேன். சுண்ணாம்பு அடிக்கணும். கொஞ்சம் கூட சும்மா இருக்க நேரமே இல்லையே என்பான். தலை மறைஞ்சதும் சீட்டு ஆடுவான்.''

எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

'குருநாதா, இப்படிப்பட்ட உலக மாயையில் சிக்கியவனுக்கு கதி மோட்சம் ஒன்றும் கிடையாதா?''

'ப: ''ஏன் இல்லை. நேரமா இல்லை அவனுக்கு. மனசு வைக்கணும். ஆன்மீக மனிதர்களோடு பழகணும்.தெரிஞ்சுக்க விருப்பம் முதலில் மனதில் தோணணும். தனிமையில் கொஞ்சம் யோசிக்க ஆர்வம் வேணும். பகவானே எனக்கு இதெல்லாம் தெரியணும் என்று எண்ணம் முதலில் அவனுக்கு வரணும்''
நம்பிக்கை பக்தி அவசியம்.

ராமனுக்கு லங்கை போக தெரியாதா, முடியாதா? ஒரு பாலம் கட்டி அதன் மேலே போகணும்னு தான் தோன்றியது. ஆனால் அவன் பக்தன் ஹநுமானுக்கு எதிரே சமுத்திரத்தை பார்த்ததும் நூறு யோஜனை தூரம் தாண்டணுமே என்று எண்ணியதும் ''ஜெய் ராம் சீதா ராம் என்று ராமனின் பெயரை சொல்லி அதன சக்தியில் தாண்ட முடியும் என்று தோணியது. அப்படியே முடிந்தது. அவனுக்கு எதுக்கு பாலம்?''

இன்னும் தொடருகிறேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...