Monday, October 9, 2017

ஆங்காரமும் ஓங்காரமும்



ஆங்காரமும் ஓங்காரமும் - J.K. SIVAN

தாத்தா உங்களுக்கு இன்னிக்கு பிறந்தநாள் என்று சொன்னாளே அம்மா. பொய் தானே?

''இல்லேடா அம்பி இன்னிக்கு தான் வருஷா வருஷம் தவறாம வரும் இங்கிலிஷ் பிறந்த நாள்''
அப்படின்னா இந்தாங்க தாத்தா உங்களுக்கு சாக்லேட். அப்போ கொஞ்சநாள் முன்னாலே வீட்டிலே பாயசம் பண்ணினது உங்க பர்த்டே என்கிறதாலே என்று சொன்னாளே ? அது என்ன பர்த்டே?

குழந்தை நாம் தமிழ் பாம்பு பஞ்சாங்கத்தை பின் போற்றுபவர்கள். -- கம்சபுரம் என்கிற கஞ்சனுர் அப்பனையங்கார் குமாரர் அண்ணாவையங்காருக்கு பிறகும் சாஸ்த்ரோக்தமாக கணிக்கப்பட்டது என்று பாம்புக்கு மேல் போட்டிருக்கும் மஞ்சள் கலர் பஞ்சாங்கம். அது பிரகாரம் தமிழ் மாச நக்ஷத்திரம் படியான பிறந்தநாள்.

காபி மணம் வீசிய சாக்லேட் வாய்க்கு ருசியாக தான் இருந்தது.

என் பேரனுடன் வந்த சில பையன்களை யார் என்று கேட்டேன்.

உங்களை ஏதோ கேக்கணும் னு எங்க பள்ளிக்கூடத்திலிருந்து நிறைய பேர் வந்திருக்காங்க. வாங்க ஹாலுக்கு.

தாத்தாவைப்பார்த்து சிறுவர் சிறுமியர் வணக்கம் தாத்தா, நிறைய விஷயங்களை நீங்கள் எங்களுக்கு சொல்லித்தருகிரீர்கள். இன்றும் உங்கள் பேச்சைக் கேட்க ஆவலாக இருக்கிறோம்.

குழந்தைகளே, கடவுளிடம் நாம் பிரார்த்திப்பது என்பது நமது தேவைகளை பூர்த்தி செய்ய சொல்வது அல்ல. என் ஆத்மாவில் வந்து குடி கொள். நான் செய்த தவறுகளை இனி செய்யாமல் திருத்து. பிராத்தனையில் இதயம் மட்டும் இருந்தால் போதும், வெறும் வார்த்தைகள் மட்டும் இருந்தால் பயனில்லை. இப்படி சொன்னவர் உங்களுக்கு தெரிந்த இன்னொரு தாத்தா. காந்தி தாத்தா.

ஏன் தாத்தா இந்த உலகத்திலே நாம் அனுபவிக்கிற சுகம் உண்மையில்லை என்கிறீங்களே எப்படி தாத்தா?

உதாரணத்தோட சொன்னாதான் உங்களுக்கு இது புரியும். சொல்றேன். ஒரு பெரிய தவளை. அதை ஒரு பாம்பு பிடிச்சுடுத்து. பாம்பின் வாயிலே தவளை. அதோடைய பாதி உடம்பு பாம்பு வாயிலே இருக்கு. அப்பவும அந்த தவளை அந்த நேரத்திலே கூட அது வாய்க்கு எதிரே ஒரு பூச்சியைப் பாத்துட்டுது. டக்குன்னு நாக்கை நீட்டி அந்த பூச்சியை பிடித்து விழுங்குது. நாமும் தவளை போலே தான். காலம் என்கிற பெரிய பாம்பின் பிடியில் இருக்கிறோம். இதை உணராமலே, புலன் இன்பத்தில் திளைத்து வாழ்வது சாஸ்வதம் என்று மனப்பால் குடிக்கிறோம். இதற்காக இரவும் பகலும் பிரயாசைபடுகிறோம்.. இப்போது தெரிகிறதா?"".

தாத்தா நாங்க வரும்போது நீங்க ஏதோ உரக்க பாடிக் கொண்டிருந்தீன்களே அது என்ன பாட்டு.

உங்களுக்கு சொன்ன விஷயமே தான். மறுபடியும் பாடறேன் கேளுங்க

ஆங்காரமும் ஒடுங்கார், அடங்கார் , ஒடுங்கார், பரமானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறுப்பும் அற்றார் தினைப்போது அளவும்
ஓங்காரத்து உள் ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு
தூங்கார் தொழும்பு செய்யார் என் செய்வார் யம தூதருக்கே

இதன் அர்த்தம் என்ன தெரியுமா பசங்களா, எவன் ஒருவன் தன்னுடைய ஆங்காரம், அகம்பாவம் இதெல்லாவற்றையும் துண்டித்து புதைக்கவில்லையோ, எவன் அவனது புலன்கள் இழுத்துச் செல்லும் வழியில் ஒரு வித கட்டுப்பாடும் இன்றி போகிறானோ, எவன் ஒரு தினை அளவு கூட இறைவனை நினைக்கவில்லையோ, ஓம் என்கிற பிரணவ ஸ்வரூபமாக உள்ளே இருக்கும் முருகனை உணரவில்லையோ, எவன் தேவையற்ற எண்ணங்களில் உழன்று, என்றும் ஸாஸ்வதமான உள்ளே உள்ள ஆத்மாவை மறந்த நிலையில் இருக்கிறானோ, பாவம் எம தூதர்கள் கையில் பாசக்கயிருடன் அவனைக்கட்டி நரகத்துக்கு இழுத்துச் செல்லும்போது என்ன செய்வான்? இப்படி கவலைப்படுபவர் யார் ?

நீங்களா தாத்தா?

நான் பையா. இப்படி நமக்காக எண்ணுபவர் அருணகிரிநாதர். இது கந்தரலங்காரத்தில் வருகிறது.

போய் விளையாடுங்கோ. நான் நிறைய அப்பறமா சொல்றேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...