இந்த பகுதியோடு ஆதி சங்கரரின் நிர்வாண தசகம் எனும் பத்து ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது.
நீங்கள் இதை ஆழ்ந்து கவனித்து படித்து புரிந்து கொண்டு பயன் பெறவேண்டும் என்பது எனது விருப்பம்.
உயர்ந்த அத்வைத தத்துவம் இது.
न शास्ता न शास्त्रं न शिष्यो न शिक्षा न च त्वं न चाहं न चायं प्रपञ्चः ।
स्वरूपावबोधाद्विकल्पासहिष्णुस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥७॥
Na sastha na sasthram na sishyo na siksha,
Na cha thwam, na cha aham na cha ayam prapancha,
Swaroopavabadhadhi vikalapa sahishnu,
Thadekovasishta Shiva kevaloham. 7
ந சாஸ்தா ந சாஸ்த்ரம் ந சிஷ்யோ ந சிக்ஷா ந ச த்வம் ந சாஹம் ந சாயம் ப்ரபஞ்ச: |
ஸ்வரூபாவபோதாத்விகல்பாஸஹிஷ்ணுஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௭||
நான் யார் என்று சொல்லும்போது நான் யாரெல்லாம், எதுவெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே வருகிறேன். இதோ மேலும் சில அடையாளங்களை சொல்கிறேன்.
நான் ஞானத்தின் பூர்வமா, ஆதாரமா? ரெண்டுமே இல்லை. நான் சாஸ்த்திரங்களோ அதை விளக்கும் புத்தகங்களோ இல்லை. நான் யாருக்கும் சிஷ்யனோ, எவருக்காவது குருவோ வென்றால் அதுவும் இல்லை.
நான் நீயுமில்லை, நான் நானுமில்லை. நான் இந்த உலகமே இல்லை. ஏன் இப்படி எல்லாம் சொல்கிறேன் என்றால் என்னை நான் சொன்ன லிஸ்டில் எதிலும் காண முடியாதே. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.
न चोर्ध्वे न चाधो न चान्तर्न बाह्यं न मध्यं न तिर्यङ न पूर्वा परादिक ।
वियद्व्यापकत्वादखण्डैकरूपस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥८॥
Na chordhve na chadho na chaandhar na bahyam,
Na madhyam na thiryang na poorva paraddik,
Viyad vyapakathwath Akandaika roopa,
Thadekovasishta Shiva kevaloham. 8
ந சோர்த்வே ந சாதோ ந சாந்தர்ந பாஹ்யம் ந மத்யம் ந திர்யங் ந பூர்வா பராதிக் |
வியத்வ்யாபகத்வாதகண்டைகரூபஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௮||
இன்னொன்று சொல்லட்டுமா? நான் மேலே மட்டும் இல்லை, கீழேயும் கிடையாது. உள்ளேயும் காணமுடியாது, வெளியேயும் தேட முடியாது, அப்படியென்றால் எங்காவது நடுவே கிடைப்பேனா என்றால் அதுவும் இல்லை. குறுக்கே, எதிர்புறம், ஹுஹும் இல்லவே இல்லை. கிழக்கில் இருப்பாயோ? ஒருவேளை மேற்கே? காற்றில் கலந்த உயிர் சத்து போல் எங்கும் கலந்து வியாபித்து இருக்கிறதே ''ஈதர் ''(ether) அதுபோல தான் நான். எங்கும் காணப்படுபவன். சிவன், ஆத்மன். நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.
अपि व्यापकत्वादितत्त्वात्प्रयोगात्स्वतः सिद्धभावादनन्याश्रयत्वात ।
जगत्तुच्छमेतत्समस्तं तदन्यस्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥९॥
Api vyapakathwadhi Thathwa prayogath,
Swatha sidha bhavananya asrayathwath,
Jagat thuchamethath samastham thadanya,
Thadekovasishta Shiva kevaloham. 9
அபி வ்யாபகத்வாதிதத்த்வாத்ப்ரயோகாத்ஸ்வத: ஸித்தபாவாதநந்யாச்ரயத்வாத் |
ஜகத்துச்சமேதத்ஸமஸ்தம் ததந்யஸ்ததேகோ(அ)வசிஷ்ட: சிவ: கேவலோ(அ)ஹம் ||௯||
எங்கும் எதிலும் இருந்தும், ஒரே லட்சியமாக இருப்பவன். எனக்கு யாரும் அவசியமில்லை, எவரையும் எதிர்பார்த்து நான் இல்லை. எனக்கு நானே போதும். எதுவும் தேவை அற்றவன். உலகம் எனக்கு லக்ஷியம் இல்லை. நான் இல்லையே அது. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.
न चैकं तदन्यद्द्वितीयं कुतः स्यान्न चाकेवलत्वं न वा केवलत्वम ।
न शून्यं न चाशून्यमद्वैतकत्वात्कथं सर्ववेदान्तसिद्धं ब्रवीमि ॥१०॥
Na chaikam thadanyath dweetheeyam kutha syath,
Na chaa kevalathwam na vaa kevalathwam,
Na soonyam na chaa soonyamadvaidhakathwath,
Kadam sarva vedhatham sidham braveemi 10
ந சைகம் ததந்யத்த்விதீயம் குத: ஸ்யாந்ந சாகேவலத்வம் ந வா கேவலத்வம் |
ந சூந்யம் ந சாசூந்யமத்வைதகத்வாத்கதம் ஸர்வவேதாந்தஸித்தம் ப்ரவீமி ||௧0||
நான் உருவமே இல்லாதவன். என்னை ஏதோ ஒன்றாக நினைக்க முடியாது. ஆகவே நான் இரண்டாக பிரித்தும் பார்க்க முடியாதவன். நான் இப்படித்தான் என்று குறிப்பிட்டு கூற முடியாதவன், இல்லை அவன் அப்படியில்லை என்று வேறு மாதிரியாகவும் என்னை பார்க்கமுடியாது. நான் ஒன்றுமே இல்லாத சூன்யம் அல்ல, அதில்லாமல் வேறு என்று அறுதியிட்டு எவரும் விவரிக்க முடியாதவன். இரண்டற்ற ஒன்றின் சாரம் சத்ய ஸ்வரூபம் என்பார்கள். யார் எப்படியெல்லாம் என்னை வித விதமான தத்துவங்களால் கோட்பாடுகளால் எடுத்துச் சொன்னாலும் அதிலும் நான் அகப்படமாட்டேனே .
விவரித்தாலும் அது நான் நிச்சயம் இல்லை. நான் சிவன், சதா சிவன் , ஆத்மன், நான் தூக்கத்திலும் அதை கடந்தும் இருப்பவன். எல்லாமே இல்லாமல் போனாலும் அப்போதும் நிலையாக இருப்பவன்.
இதுவரை பத்து ஸ்லோகங்களில் நிர்வாண தசகம் என்று ஆதி சங்கர பகவத்பாதர் எழுதிய உயர்ந்த ஆத்ம ஞானம் பற்றி சொன்னேன். எத்தனை பேருக்கு புரிந்தது என்று விரல் விட்டு தான் எண்ணவேண்டும்.
நான் ஏற்கனவே சொன்னபடி ஆதிசங்கரர் நர்மதை நதிக்கரை கானகத்தில் அவரது குரு கோவிந்த பாதரை சந்தித்தபோது வணங்கியபோது ''நீ யாரப்பா ?'' என்று குரு கேட்டபோது இந்த பத்து ஸ்லோகங்களை சங்கரர் சொன்னார் என்று ஒரு சில புத்தகங்கள் சொல்கின்றன.
மற்றவை சில என்ன சொல்கிறது என்றால் ஆதி சங்கரர் இந்த உலகை விட்டு நீங்கும்போது அவரது சிஷ்யர்கள் அனைவரும் ''குருநாதா தங்களது உபதேசங்களை அத்வைத சாரத்தை சுருக்கமாக எங்களுக்கு சொல்லவேண்டும் என்று கேட்ட பொழுது இந்த பத்து ஸ்லோகங்களை ஆதி சங்கரர் அவர்களுக்கு உபதேசித்தார் என்று சொல்கின்றன.
எது எப்படியானாலும் நமக்கு நிர்வாண தசகம் பத்து விலைமதிக்க முடியாத பொக்கிஷம் கிடைத்திருக்கிறதே.
No comments:
Post a Comment