Sunday, October 29, 2017

கல்யாணமாம் கல்யாணம்....2






கல்யாணமாம் கல்யாணம்....2 - J.K. SIVAN

இன்று சில தெரியாத விஷயங்களை பற்றி பேசுவோம்.

வது வர குண பரிக்ஷம் - இதன் மூலம் ஒரு பையன் பெண்ணுக்கு தகுந்தவனா அல்லது பெண்பையனுக்கு ஏற்றவளா என்று சோதிபதற்காகத்தான், பெரியவர்கள் சம்பந்தம் பேசுமுன் சகல விபரங்களையும் கேட்டு அறிவார்கள். பொருத்தம் பார்ப்பது இதற்காகத் தான். இதெல்லாம் அப்போது....

'' வரப்ரசேன, வரவரித்தி கர்மா'' என்பது தக்கவர்களை அனுப்பி பெண் கேட்பது. பெண்வீட்டார் முதலில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை தேடுதல் வழக்கமானது. இப்போது இதற்கென சில ப்ரோக்கர்கள். அவர்களது நோக்கம் எப்படியாவது எவரையாவது ''பிடிப்பது'' தனக்கு ஆதாயம் பெறுவது.

''அப்பறம் வரி நிஸ்சயம்.'' பெண்ணையோ பிள்ளையையோ தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்து கொள்ளுதல்.

''மண்டபகரணம்'' - ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து கல்யாண ஏற்பாடு இப்போது அவசியமாகி விட்டது. ஒன்றரை வருஷத்துக்கு முன்பே கல்யாண மண்டபம் தேடி பிடித்தபிறகு தான் கல்யாணம் வைத்துக் கொள்ளமுடியும். அப்போதெல்லாம் பெண் வீட்டிலேயே தெருவை மடக்கி பந்தல் போட்டு விமரிசையாக கல்யாணம் நடக்கும். ஊரில் எல்லோரும் பங்கேற்று கல்யாணம் நடக்கும். ஊர்லே கல்யாணம் மார்லே சந்தனம். இப்போது புத்தகத்தில் கதைகளில் மட்டுமே இதை படிக்கலாம்.

'வது கிரஹ கமனம்'' : பிள்ளை பெண் வீட்டுக்கு செல்வது. அதற்கு முன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பரிச்சயம் இல்லை. இப்போது படித்து சிரிக்கலாம்.

'நாந்தி ச்ராத்தம், புண்யாஹவாசனம்' - முன்னோர்கள் தேவர்கள் ஆசியை வேண்டுதல்.
ஹோமங்கள், ப்ரீதிகள் தொடரும்.

வேதங்களில் '' தைல ஹாரித்ர லேபனம்'' என்று மஞ்சள் குங்குமம் தடவி பெண்ணை அலங்கரிப்பது பற்றி வருகிறது. ஒருவிதத்தில் மெஹந்தி, நலங்கு இது தான் இப்போது இதை குறிப்பதாக எடுத்துக் கொள்வோம்.

'மதுபர்க்கம்'' - பிள்ளையை பெண் வீட்டுக்கு அழைத்து பாலும் பழமும் கொடுப்பது. கல்யாண மண்டபத்திலேயே இது ஊஞ்சலில் இப்போது நடைபெறுகிறது.

மாப்பிள்ளையை விஷ்ணுவாக பெண்ணை லக்ஷ்மிதேவியாக பாவித்து உபசரிப்பது வேதங்களில் சொல்லப்படுகிறது.

''பரிதாபன, சம்நஹனம்'' என்பது புது வஸ்திரங்களை பெண்ணுக்கு உடுத்தி இருப்பில் தர்ப்பையை இடுப்பில் கட்டுவது. ,

'ப்ரதிஸர பந்தனம்' : பெண்ணின் இடது கரத்தில், பையனின் வலது கரத்தில் காப்பு கட்டுவது.

''பரஸ்பர சமிக்ஷண'' : அந்தக்காலத்தில் பெண்ணும் பிள்ளையும் நேரில் பார்த்துக்கொள்வதே கல்யாணத்தின் போது தான். தயவு செய்து சிரிக்காதீர்கள்..

''ஆர்த்ராக்ஸத்ரோபனம்'' என்பது முழு நெல், அரிசியை பாலில், நெய்யில் கலந்து இருகையாலும் பெண்ணின் இரு கரத்தில் மாப்பிள்ளை கொடுப்பதும் அதேபோல் பெண் பிள்ளையின் கரங்களில் அளிப்பதும் ஒரு வழக்கம். இருவரின் சேர்ந்த கரங்களில் ஒரு தங்க காசு பெண்ணின் தந்தை அளிப்பார். இப்போது அதெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

வாத்யார் ரெண்டு பேருக்கும் கங்காஜலம் த்ருவ தர்ப்பையால் ப்ரோக்ஷணம் செய்வார்.கங்கண தாரணம் நடைபெறும்.

மங்கள சூத்ர தாரணம் - இதுவே முக்கிய நிகழ்ச்சி.

உத்தரீய ப்ராந்த பந்தனம்: மஞ்சள் கிழங்கு பாக்கு வெற்றிலையை பிள்ளையின் அங்கவஸ்திரத்தில் முடிந்து வைத்து ரெண்டு பேர் வஸ்திரத்தையும் இணைத்து முடிச்சு போட்டுவிடுவார்கள்.

அக்னிஸ்தாபன ஹோமம்: ஹோமத்தீ வளர்த்து மந்திரங்கள் சொல்வது.

பாணிக்கிரஹணம்: பெண்ணின் கரத்தை பிள்ளை பற்றுவது.
லாஜ ஹோமம்: பெண் அல்லது பெண்ணின் சகோதரனோ அக்னியில் பொரி இடுவது. இது யமனுக்கு த்ரிப்தியை அளித்து எங்களை நீண்டநாள் வாழ வையப்பா என்று வேண்டுவது. ஒரு குட்டி லஞ்சம் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம்.

''அக்னி பரிணாயணம்: தீயை மூன்று முறை வலம் வருவது என்று தான் வேதங்களில் சொல்வது. ஆனால் ஏழுமுறை என்பது பின்னர் வழக்கமாகிவிட்டது. அதுவே சப்தபதி.

அஸ்மாரோஹணம்: அம்மி மிதிப்பது. கஷ்டங்களை, துன்பங்களை எதிர்கொள்வேன் என திடம் செய்து கொள்வது

மூர்தபிஷேகம் : பெண்ணுக்கு அபிஷேக ப்ரோக்ஷணம்:

ஸூர்யோதிக்ஷணம் : சூரியனை வணங்குவது.
ஹ்ரிதயஸ்பர்ச இருவரும் நெஞ்சைத்தொட்டு உள்ளன்போடு பிரார்த்திப்பது.



இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...