தத: கிம்? தத: கிம்? தத: கிம்? தத: கிம்?
ஆதி சங்கரரை ஜகத் குரு என்று வழிபடுகிறோம். முப்பத்திரெண்டே வயதில் மூன்று உலகமும் போற்றும் அற்புத காவியங்களை படைத்து நமக்களித்தவர். ஆதி சிவனின் அவதாரம் என்பார்கள். ஒரு குருவாக நமக்கு நல்வழி போதிக்கும் ஆதி சங்கரர் தனது குருவான கோவிந்த பாதரை போற்றி அருளிச் செய்த எட்டு ரெண்டுவரி ஸ்லோகங்கள் தான் குரு அஷ்டகம். என்ன பிரயோஜனம் என்ன பிரயோஜனம் என்று ஒருதடவை அல்ல, நான்கு தடவை அழுத்தம் திருத்தமாக சொல்கிற முடிவும் அதன் அவசியத்தை உணர்த்துகிறது. இது போன்று இன்னொன்றை இன்னும் நான் காணவில்லை.
சம்சார சாகரத்தை கடக்க இதைவிட எளிய உபதேசம் கிடையாது. குருவின் அனுக்கிரஹம் இல்லாமல் எதையும் அவ்வாறு பெறமுடியாது என்பதும் தெளிவாக சொல்கிறார்.
இன்று காலை சங்கரரின் மேற்கண்ட குரு அஷ்டகம் எனும் எட்டு சின்ன ஸ்லோகங்களை படித்து இன்புற்றேன். அதை உங்களோடு மீண்டும் பகிர்ந்து உங்களோடு இன்னுமொரு முறை அதன் இன்பச்சுவையை அனுபவிக்கிறேன்.
शरीरं सुरूपं तथा वा कलत्रं, यशश्चारु चित्रं धनं मेरु तुल्यम् ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 1 ॥
Sareeram suroopam Thada va kalathram,
Yasas charu chitram dhanam Meru thulyam,
Gurongri padme, Manaschenna lagnam,
Tada kim, tada kim, tada kim, tada kim.
1
ஶரீரம் ஸுரூபம் ததா² வா கலத்ரம்
யஶஶ்சாரு சித்ரம் த⁴நம் மேருதுல்யம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 1॥
காசே தான் கடவுளடா. பாட வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் கவைக்குதவாது. உடல் அழகு, கம்பீரம் கண்ணுக்கு நன்றாக இருக்கலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். ரொம்ப சரி. எட்டு திசையிலிருந்தும் வாழ்த்துகள், கவுரவம் மாலை, மரியாதை, போற்றி போற்றி எல்லாம் சந்தோஷம் தான்.செல்வம் கறுப்பிலும் வெளுப்பிலுமாக மூட்டை மூட்டையாக வந்து சேர்கிறது. ஆஹா மகிழ்ச்சி! இதெல்லாம் இருந்தால் மட்டும் போதுமா? தன்னை சீராக்கிய, உபதேசித்த, நல்வழி காட்டிய ஆசார்யன், குருவின் பாதாரவிந்தங்களை பணியவில்லையே. அப்படியென்றால் மற்றவற்றால் என்ன பிரயோஜனம்.
என்ன பிரயோஜனம்.என்ன பிரயோஜனம்.என்ன பிரயோஜனம்?
कलत्रं धनं पुत्र पौत्रादिसर्वं, गृहो बान्धवाः सर्वमेतद्धि जातम् ।
मनश्चेन लग्नं गुरोरघ्रिपद्मे, ततः किं ततः किं ततः किं ततः किम् ॥ 2 ॥
கலத்ரம் த⁴நம் புத்ரபௌத்ராதி³ ஸர்வம்
க்³ருʼஹம் பா³ந்த⁴வா: ஸர்வமேதத்³தி⁴ ஜாதம் ।
மநஶ்சேந்ந லக்³நம் கு³ரோரங்க்⁴ரிபத்³மே
தத: கிம் தத: கிம் தத: கிம் தத: கிம் ॥ 2॥
ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல என்று படித்தால், பாடினால் மட்டும் போதுமா? அழகிய மனைவி, சொத்து நிலம் நீச்சு,வீடுவாசல், புத்திரர்கள், புத்திரிகள், பேரன் பேத்திகள் எல்லாம் இருக்கு சார். ஜே ஜே ன்னு சொந்தம் பந்தம் எல்லாம் வரும் போகும். இதெல்லாம் கிடைக்க அனுக்கிரஹம் பண்ணின குருவை ஒரு க்ஷணம் நினைக்காமல், அவர் திருவடிகளில் விழுந்து ஆசிபெறாத போது இதனால் எல்லாம் என்ன பிரயோஜனம். என்ன பிரயோஜனம்.என்ன பிரயோஜனம்.என்ன பிரயோஜனம்?
ரெண்டு ரெண்டாக நாலு நாளில் தருகின்றேன். மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment