திருமந்திர சித்தர் 3 - J.K. SIVAN
இப்போது சில ஆன்மீக வாதிகளாலேயே ஆன்மீகத்துக்கு இழுக்கு வருவது மனத்தை நொறுக்குகிறது. ஆன்மிகம் ஒரு பிழைக்கும் வழியானது காரணமோ என்னவோ? ஆன்மீகத்தில் வருமானம் கூடவோ? அதனால் தான் ஆன்மீக குருமார்கள் அவர்களுக்குள்ளேயே யுத்தம் செய்கிறார்களோ?
காற்று வாக்கில் இது இப்படி தான் இருக்கப்போகிறது பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பே திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. ஒரு குருவை நாம் ஏற்றுக் கொள்வதானால் அவர் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும். இவரை நாம் குரு வென சுவீகரிக்க வேண்டும் என்று தெளிவாக ஒரு திருமந்திரத்தில் அழகாக எளிமையாக நல்ல உதாரணத்தோடு கூறுகிறார் பாருங்கள்.
திருமூலர் எப்போதுமே பளிச்சென்று எதையும் சொல்பவர். அஞ்ஞானத்தில் தான் உழன்றுகொண்டு, அதுவே புரியாமல் அடுத்தவனுக்கு அஞ்ஞானத்தை போக்க முயலும் ஒருவன் குருவா? இப்படிப்பட்ட குருவை ஒருவன் அடைவது எது போலவாம்?
ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழிகாட்டிக் கொண்டு போய் ரெண்டு குருடும் சேர்ந்து வழியில், ஒரு குழியில் விழுந்தது மாதிரி.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்,
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழுமாறே
திரிபுரம் அழித்து திரிபுராந்தகனை சிவன் வென்றான் என்று புராணங்கள் சொல்கிறது இருக்கட்டும். உண்மையிலேயே திரிபுராந்தகனின் மூன்றுகோட்டைகளும் அழிந்ததோ இல்லையோ இதற்கு வேறு ஒரு அருமையான அரத்தம் உள்ளது. அது என்ன என்று திருமூலர் விளக்கும் திருமந்திரம் ஒன்று இதோ.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்க்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே
கங்கை நீரைத் தனது விரித்த செஞ்சடை மேல் தாங்கிய முழு முதல் கடவுள் பரம சிவன் திரிபுரந்தாகனின் மூன்று வலிமையான கோட்டைகளைஎரித்தான். உண்மையிலேயே அவை வேறொன்றுமில்லை. மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை என்கிறவற்றை அழித்ததையே குறிக்கும்..அவர் இவ்வாறு செய்த பெருஞ்செயலை யாரால் அறிய முடியும் என்று வியக்கிறார் திருமூலர்.
கடைசியாக ஒன்று.
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்
ஒருவனு .மேஉல கோடுயிர் தானே
இது என்ன சொல்கிறது பார்ப்போமா? சிவன் ஒருவன் தான் சதாசிவன் என்கிற உயர் தெய்வம் . ஏழ் உலகங்களும் படைக்க காரணன். அவன் தான் இந்த ஏழு உலகங்களையும் படைத்ததோடு அல்லாமல் காக்கின்றான். அது மட்டுமா. அந்த ஏழு உலகங்களையும் கண்ட்ரோலில் வைத்து ஒடுக்குகிறான். உலகம் என்று சொல்லும்போது அதனுள் வாழும் எண்ணற்ற பல கோடி உயிர்களையும் தான் குறிப்பிடுகிறேன். அவை அத்தனைக்கும் அவனே வாழும் உலகமாகவும் அவற்றினுள்ளே உயிராகவும் உள்ளான்.
திருமூலர் புரிகிறாரா ? திருமந்திரம் இனிக்கிறதா?

No comments:
Post a Comment