அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN
'ஐயோ உள்ளம் கொள்ளை போகுதே...!!
கி பி 8ம் நூற்றாண்டில் ஒரு நிகழ்ச்சி. சோணாடு சோறுடைத்து. அன்றல்ல, இன்றும். (என்றுமா என்று இப்போதிருக்கும் சூழ்நிலையில் சொல்ல முடியாது). சீர்காழி ஜில்லாவில் திருவாலி திருநகரி நாடு என்ற பெரிய ஊரில் ஒரு சிற்றூர். அதன் பெயர் திருக்குறையலூர். இயற்கை வளம் கொழிக்கும் பூமி. அதில்
விஷ்ணு பக்தர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். சோழ ராஜாவின் சேனைத் தலைவன் ஆலிநாடர் என்பவரும்அவர்களில் ஒருவர். அவருக்கும் அவர் மனைவி வல்லித்திருவுக்கும் இறைவன் ஒரு பரிசு வழங்கினான். அந்த சிறந்த விஷ்ணு பக்த குடும்பத்திற்கு ஒரு அருமையான ஆண் குழந்தையை பெருமாள் அருளினார்.
விஷ்ணு பக்தர்கள் சிலர் வாழ்ந்து வந்தனர். சோழ ராஜாவின் சேனைத் தலைவன் ஆலிநாடர் என்பவரும்அவர்களில் ஒருவர். அவருக்கும் அவர் மனைவி வல்லித்திருவுக்கும் இறைவன் ஒரு பரிசு வழங்கினான். அந்த சிறந்த விஷ்ணு பக்த குடும்பத்திற்கு ஒரு அருமையான ஆண் குழந்தையை பெருமாள் அருளினார்.
ஆம். நள வருஷம்,கார்த்திகை பௌர்ணமி, வியாழனன்று கார்த்திகை நக்ஷத்திரம் அன்று நாராயணனின் முக்கிய அம்சமான சாரங்கமே அந்த குழந்தையானது. நீலமேக ஸ்யாமளனின் சார்ங்கம் அல்லவா. எனவே நீலன் என்று பெயர் குழந்தைக்கு அமைந்தது.
கல்வி கேள்விகளோடு ஆயுதப் பயிற்சி, மல்யுத்தமும் பயின்றான் நீலன். சேனாதிபதி பிள்ளை ஆச்சே.. திருமங்கை நாட்டின் அரசன் நீலனை தனது படைத் தலைவனாக நியமித்தான்.
அந்த காலத்தில் அங்கே ஒரு புலவர். 'நாற்கவிப் பெருமாள்' என்று புகழ்பெற்றவர் நீலனின் கல்வி கேள்வி திறமைகளை பற்றி கேள்விப்பட்டு அவனைப் போட்டிக்கு அழைத்தார். என்ன ஆச்சர்யம்! நீலனின் கவித்திறமையில் புலவர் தோற்றார். ராஜா நீலனை பாராட்டி '' இனி நீ தான் எனக்கு ''நாற்கவிப்பெருமாள்'' என்று பட்டம் அளித்தான்.
சோழ ராஜா வேறு நாடுகள் மீது படையெடுத்தபோது நீலன் சோழனுக்காக யுத்தத்தில் தனது பராக்கிரமத்தை காட்டி வென்றதால் சோழ ராஜா மிக மகிழ்வுற்றான். நீலனை அழைத்தான்.
''நீலா, இனி நீ தான் உன் திருவாலி நாட்டின் சிற்றரசன்'' என்று நியமித்தான். அதன் தலைநகரம் திருமங்கை. இனி நீலனை திருமங்கை மன்னன் என்று அழைப்போம். அவனது வீரத்தால் மற்ற நாட்டரசர்கள் அவனிடம் அஞ்சினார்கள். அவன் எதிரிகளுக்கு ''காலன் '' என்பதால் 'பரகாலன்' என்றும் பெயர் பெற்றான்.
ஒரு பழங்கதை இங்கு அவசியம்.
தேவலோகத்தில் ''சுமங்கலி'' என்ற ஒரு அழகி பூலோகத்துக்கு விஜயம் செய்தாள். அவள் இமயமலைப் பிரதேசத்தில் கபில முனிவர் மற்ற சில முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஸ்ரீ மந் நாராயணனின் கம்பீரம், பராக்ரமம் பற்றி எல்லாம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டாள் . சும்மா இருந்திருக்கலாம் அல்லவா? அங்கே இருந்தவர்களில் ஒருவர் அங்க ஹீனர். குரூபி. அவரை சுமங்கலியும் அவள் தேவலோக தோழிகளும் பார்த்து கேலி செய்தனர்.
கபிலர் இதை கவனித்து விட்டார்.
கோபமேலிட்டது சுமங்கலியின் மீது.
''சுமங்கலி, நீ தேவ கன்னிகையாயிருந்தும் இந்த மனிதரின் அங்க குறைவுகளை பற்றி கேலி செய்து பரிகசித்ததால், பூமியில் ஒரு பெண்ணாக பிறந்து ஒரு சாதாரண மனிதனை மணப்பாய் என்று சபிக்க, அவள் அழுது மன்னிப்பு கேட்க, ''சாபம் மாற்றுவதற்கில்லை, வேண்டுமானால் நீ ஒரு திடகாத்ர போர் வீரனை சந்திப்பாய், அவன் ஸ்ரீமந் நாராயணின் சாரங்க அம்சம். சிறந்த புத்திமான். இதற்கு மேல் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. அந்த வீரனின் சிந்தனை எப்போதும் போர், யுத்தம் இவற்றில் தான் இருக்கும். ஆகவே நீ அவனை எப்படியாவது திருத்தி ஒரு விஷ்ணு பக்தனாக மாற்றினால் மீண்டும் விண்ணுலகம் எய்தலாம். வேறு வழியில்லை'' என்கிறார் கபிலர். சுமங்கலி நிம்மதியாக ஒரு பெரு மூச்சு விட்டாள் .
சாபம் தீர, அவளும் தோழியர்களும் திருநாங்கூர் அருகே திருவெள்ளக்குளம் என்றும் அண்ணன்கோயில் என்றும் இப்போது வழங்கப்பட்டு ஓர் திவ்யதேசமாக இருக்கும் ஊருக்கு சென்றனர். அங்கே ஒரு அல்லிக்குளம் அவர்களை ஈர்த்தது. அந்த திரு அல்லிக்குளம் காலப்போக்கில் திரு வெள்ளக் குளமாகிவிட்டதோ? அந்த தடாகத்தில் இறங்கி ஆசை தீர நீராடி அல்லி மலர்களோடு குலாவி மகிழ்ந்தனர். சற்று நேரம் கழித்து, சாபம் பெறாத மற்ற தேவ கன்னியர்கள் சுமங்கலியை அங்கேயே விட்டுவிட்டு தேவலோகம் சென்றார்கள். அவர்கள் சென்றதை அறிந்த சுமங்கலி அங்கேயே ஒரு சிறு குழந்தையாக மாறினாள் .
அந்த ஊரில் ஒரு வைத்தியர். குழந்தை பாக்யம் இல்லாத அவர் அந்தப் பக்கமாக வந்தவர். அவளை அல்லிக்குளத்தில் கண்டு வியந்து இறைவன் அருளே என்று போற்றி வீட்டுக்கு எடுத்து சென்றார்.
அந்த அல்லிக்குளத்தை நான் ஸ்ரீ அண்ணன்கோவில் திவ்ய தேசத்தில் தரிசித்தேன். நிறைய குமுத மலர்கள் இன்னும் அந்த குளத்தில் இருக்கிறது. குமுதமலர்கள் இடையே கிடைத்ததால் குமுதவல்லி என்று பேர் வைத்தார். வளர்ந்தாள் . வளர்த்த தந்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும்போது தனது கதையை வளர்ப்பு தந்தையிடம் சொன்ன குமுதவல்லி ஒரு நாள் திருமங்கை மன்னன் வருவான் தன்னைத் தேடி என்றாள்
No comments:
Post a Comment