வைராக்ய சதகம் -- நங்கநல்லூர் J K SIVAN ---
ராஜா பர்த்ருஹரி
मृत्पिण्डो जलरेखया वलयितः सर्वोप्ययं नन्वणु
भागीकृत्य स एव संयुगशतैः राज्ञां गणैर्भुज्यते
ते दद्युः ददतोऽथवा किमपरं क्षुद्रा दरिद्रा भृशं
धिक् धिक् तान् पुरुषाधमान् धनकणान् वाञ्छन्ति तेभ्योऽपि ये
ம்ருʼத்பிண்டோ³ ஜலரேக²யா வலயித: ஸர்வோঽப்ய the doயம் நந்வணு: ஸ்வாம்ஶீக்ருʼத்ய தமேவ ஸங்க³ரஶதை ராஜ்ஞாம் க³ணா பு⁴ஞ்ஜதே ।
தே த³த்³யுர்த³த³தோঽத²வா கிமபரம் க்ஷுத்³ரா த³ரித்³ரா ப்⁴ருʼஶம் தி⁴க்³தி⁴க்தாந்புருஷாத⁴மாந்த⁴நகணாந்வாஞ்ச²ந்தி தேப்⁴யோঽபி யே ॥ 59 ॥
யோசித்துப்பாருங்கள். இந்த அகண்ட உலகை நீரும் நிலமுமாக நாம் எல்லோரும் வாழ பகவான் படைத்தான். ஆனால் இந்த ராஜாக்கள் சும்மா இருக்கிறார்களா? சில பல ஆட்களை படையாக சேர்த்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் மோதி சண்டையிட்டு அதை பிரித்து கூறாக்கி, தனித் தனியே ஒரு அளவு வைத்துக் கொண்டு தங்களது ராஜ்ஜியம் என்று மேலும் அடைய ஆசைப்படு கிறார்கள். இப்படிப்பட்ட பிச்சைக் காரர்கள் நிலத்தை பிரித்துக்கொண்டு நாயாக சண்டை போடும் ஈனர்கள் மற்றவர்க்கு என்ன கொடுக்கப் போகிறார் கள்?. அவர்களிடம் ஒருவன் சென்று உன்னைப்போல் இந்திரன் சந்திரன் கிடையாது என்று பொய் கூறி அவனை மதித்து கையேந்தி சில பொருள்களை பெறுகிறானே அவன் எவ்வளவு ஈனமானவன்! அவனை என்ன என்று சொல்வது?
पुरा विद्वत्तासीदुपशमवतां क्लेशहतये
गता कालेनासौ विषयसुखसिद्ध्यै विषयिणां ।
इदानीम् संप्रेक्ष्य क्षितितलभुजः शास्त्रविमुखा
नहो कष्टं साऽपि प्रतिदिनमधोधः प्रविशति ॥
புரா வித்வத்தாஸிதூப ஷமவதாம் க்லேச ஹதயே
கதா காலெனாசெள விஷயசுகாஸி த்யை விஷயீனாம்
இதனீம் சம்ப்ரேக்ஷ்ய க்ஷிதிதலபுஜா ஸாஸ்திர விமுகா -
நஹோகஷ்டம் ஸாபி ப்ரதி தினமதோதா ப்ரவிஷதி [27]
கல்வி கற்பது ஆரம்பத்தில் உண்மையில் ஞானம் தேடுபவரால் மட்டுமே நாடப்பட்டது. அவர்கள் உலக இன்பம் துறந்தவர்களாக குருவிடம் பயின்றவர்கள். புலன்களிடம் அடிமையாகாத வர்கள். மனதை உறுதியாக சிறந்த முறையில் ஞானம் பெற, துயரம் துன்பத்தை விரட்ட தக்கதாக வைத்திருந்தவர்கள். ஆனால் போகப் போக என்ன ஆயிற்று? உலக மாயையில் சிக்கி இன்பம் தேடுபவர்களும் பொழுது போக்காக சாஸ்திரங் களை கற்கத் தொடங்கினார்கள். இதனால் என்ன விளைவு? பிரபுக்கள் ராஜாக்களுக்கு உண்மையான சாஸ்திரங்க ளையும் அதை முறையாக கற்பவர்களையும் அடையாளம் காண முடியாமல் போய் விட்டது. பாண்டித்யம், கல்வி ,எல்லாமே கீழ் நோக்கி போக ஆரம்பித்தாகி விட்டதே என்று அப்போதே பர்த்ருஹரி அழுகிறார், இப்போதைய நிலையை வந்து பார்த்தால் என்ன சொல்வாரோ??
किं कन्दाः कन्दरेभ्यः प्रलयमुपगता निर्झरा वा गिरिभ्यः
प्रध्वस्ता वा तरुभ्यः सरसफलभृतो वल्कलिन्यश्च शाखाः ।
वीक्ष्यन्ते यन्मुखानि प्रसभमपगतप्रश्रयाणां खलानां
दुःखाप्तस्वल्पवित्तस्मयपवनवशान्नर्तितभ्रूलतानि ॥ २५॥
கிம் கந்தா:³ கந்த³ரேப்⁴ய: ப்ரலயமுபக³தா நிர்ஜ²ரா வா கி³ரிப்⁴ய:
ப்ரத்⁴வஸ்தா வா தருப்⁴ய: ஸரஸப²லப்⁴ருʼதோ வல்கலிந்யஶ்ச ஶாகா:² ।
வீக்ஷ்யந்தே யந்முகா²நி ப்ரஸப⁴மபக³தப்ரஶ்ரயாணாம் க²லாநாம்
து:³கா²ப்தஸ்வல்பவித்தஸ்மயபவநவஶாந்நர்திதப்⁴ரூலதாநி ॥ 25 ॥
ஹே மூலிகை வேர்களே, கொடிகளே , யாரும் நெருங்கவொண்ணா உயர்ந்த மலைக்குகையில் இத்தனை காலமாக இருந்தவர்களே, இப்போது காணோமே எங்கே மறைந்தீர்கள்? மலையுச்சி யிலிருந்து மேகத்தி லிருந்து இறங்கிய நீராக வீழ்ந்து ஆறாக ஓடும் நதிகளே, எங்கே உங்களைக் காணோம்? சூரிய ஒளி கூட புக முடியாத அடர்ந்த கனி குலுங்கும் மரங்களே, எங்கே வேரோடு சாய்ந்து அழிந்தீர்கள்? இனி நல்லதெல்லாம் மறைந்து விடுமோ? கொடியவர்கள் தீமைகள் மட்டுமே எங்கும் நிறையுமா? இனிமேல் இது தான் நிலையா? இது தான் கலியா? அற்பர்களிடம், சன்யாசிகள் கூட கையேந்தி தான் வாழ வேண்டுமா. இயற்கையை நம்பிய காலம் மலையேறிவிட்டதா? இப்படி ஒரு வாழ்க்கை அவசியமா?
पुण्यैर्मूलफलैस्तथा प्रणयिनीं वृत्तिं कुरुष्वाधुना
भूशय्यां नवपल्लवैरकृपणैरुत्तिष्ठ यावो वनम् ।
क्षुद्राणामविवेकमूढमनसां यत्रेश्वराणां सदा
वित्तव्याधिविकारविह्वलगिरां नामापि न श्रूयते ॥ २६॥
புண்யைர்மூலப²லைஸ்ததா² ப்ரணயிநீம் வ்ருʼத்திம் குருஷ்வாது⁴நா
பூ⁴ஶய்யாம் நவபல்லவைரக்ருʼபணைருத்திஷ்ட² யாவோ வநம் ।
க்ஷுத்³ராணாமவிவேகமூட⁴மநஸாம் யத்ரேஶ்வராணாம் ஸதா³
வித்தவ்யாதி⁴விகாரவிஹ்வலகி³ராம் நாமாபி ந ஶ்ரூயதே ॥ 26 ॥
வாடா தோழா, நாம் அடர்ந்த வனத்திற்குள் சென்றுவிடுவோம், அங்கே கிடைக்கும் இயற்கை பரிசளிக்கும் காய்,கிழங்கு, வேர்கள், கனிகள் போதும், நீரோடைகள் தரும் நீர் தான் நமக்கு அம்ருதம். அது தான் நமக்கு சுகமான ஜீவனம். இறைவனை நினைக்க சுதந்திரமான சௌகரியமான இடம். பனித்துளிகள் ததும்பும் இளம் மென்மையான புல்வெளி தான் நமது நீண்ட அகலமான படுக்கை. அங்கே நமக்கு என்ன லாபம் தெரியுமா? விவேகமில்லாத, பணம் எனும் வியாதி பிடித்த நோயாளிகள் சகவாசம் கிடையாது. பணக்காரர்கள் பெயர் கூட நம் காதில் விழாதபோது அவர்கள் முகம் எப்படி நம் கண்ணில் படும்?
தொடரும்
No comments:
Post a Comment