Saturday, March 20, 2021

dhwadasa lingam


 

ஒரு டஜன் சிவலிங்கங்கள்  -   நங்கநல்லூர்  J K  SIVAN

மிகப்பெரிய குரு, வாத்யார், மௌனமாகவே  உபதேசித்தவர் தக்ஷிணாமூர்த்தி எனும் பரமேஸ்வரன், பரமசிவன் தான். முப்புரம் எரித்தாலும், கருணை உள்ளம் கொண்டவர், பக்தியோடு வேண்டி யார்   எதைக் கேட்டாலும்  யோசிக்காமல் தருபவர்.  யோகேஸ்வரன்.

 மஹாதேவன், சங்கரன், ஹரன் , சம்பு , சதாசிவன், ருத்ரன், மகேஸ்வரன், சூலபாணி , பைரவன்,உமாமகேஸ்வரன், நீலகண்டன், த்ரிலோசனன், த்ரியம்பகன், விஸ்வநாதன்,  அர்த்தநாரி, சந்திரசேகரன்,அடேயப்பா  எண்ணற்ற பெயர்கள் எதைச்சொல்லி அழைத்தாலும் வரும் எளிய கடவுள்.

அவன் ஆபரணத்தை, உடையை, சற்று நோக்குங்கள்.   பூசுவது  சாம்பல், ஜடாமுடி,  மண்டையோட்டு, கபால,  மாலை , போதாதற்கு  விஷ நாகம்  கழுத்துக்கு வெளியே, விஷம் கழுத்தில்.  அழிக்கும் கடவுள் என்பதால் அவனை இரக்கமற்றவன் என நினைக்கவேண்டாம். பிறந்தது எதுவும் இறந்தே ஆகவேண்டும் என்பது நியதி. இறக்கும் போது அந்த ஜீவனை முக்தி பெறச்செய்பவன் காசி விஸ்வநாதன்.  

ஸம்ஹாரம் என்பது மீண்டும்  அவதரிக்க . ஓம்  நமசிவாய என்று ஐந்தெழுத்து சொன்னாலே போதும். எதிரில் வந்து நிற்பவன்.

சில கதைகளை படித்துப் பாருங்கள்,   நந்தனார், கண்ணப்ப நாயனார், மார்க்கண்டன், ராவணன்,  பஸ்மாசுரன்,  திருவிளையாடல் புராணம் இதே போதும்.  அவனது தாராள மனம், கருணை புரியும்.

புலித்தோல்,  யானைத்தோல்  போதும் அவனுக்கு  ஆடையாக. இல்லையென்றால் கோவணாண்டியாக பிக்ஷாடனன்.  அருவமானவன் ஜோதிர்மயமாக , ஸ்தாணுவாக காட்சி தந்த தோடல்லாமல் நமக்கு லிங்க உருவிலும்   மனதில் குடிகொள்பவன்.  லிங்கத்தைப் பற்றி சொல்ல நிறைய  விஷயங்கள் இருக்கிறது.

இந்த பாரத தேசத்தில் பன்னிரண்டு க்ஷேத்ரங்கள் சிவனுக்கு  த்வாதச   ஜ்யோதிர் லிங்க க்ஷேத்திரமாக ஆங்காங்கு இருக்கிறது.  என் வாழ்வில் இதுவரை நான் பன்னிரெண்டையும் தரிசிக்க பாக்யம் கிட்டவில்லை. இனி எப்படியோ?

சிவ  மஹாபுராணத்தில்  ஒரு கதை.  ப்ரம்மா விஷ்ணு இருவருக்குள்ளும் யார் பெரியவர் என்ற போட்டி.   நடுவர்  சிவன்.  சரி,  என் தலையோ, காலோ,  யார் கண்ணில் முதலில் படுகிறதோ அவர்  பெரியவர் .. போட்டி ஆரம்பமாகியது. சிவன் ஒரு ஒளிக்கம்பமாக  நின்றார்.  அடிமுடி காண  பிரம்மாவும்  விஷ்ணுவும்  அன்னமாக,  வராகமாக  உருவெடுத்து  தேடினார்கள்.  விஷ்ணு தோல்வியை ஒப்புக்கொள்ள, ப்ரம்மா   சிவனது  ஒளி முடியைக் கண்டதாக  பொய்  சொல்லி பூலோகத்தில் கோயிலே இல்லாமல் போய்விட்டது.   இருவராலும் காணமுடியாத  சிவனே  உயர்ந்தவர் என்று அறிந்து  இருவருமே அகந்தை அழிந்தனர்.  திருவண்ணாமலை  தீப தர்சனம் அந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது.

ஒரு காலத்தில் 64  ஜோதிர் லிங்கங்கள் இருந்தன.  அவற்றில் 12  புனித ஸ்தலங்களாக இன்று  பக்தர்கள் தரிசிக்கப்படுகிறது.    ஒரு சின்ன ஸ்லோகம்   பன்னிரண்டு லிங்கங்கள் பெயர்  ஊர் பேர் மட்டும் சொல்கிறதால் அர்த்தம் எளிதில் விளங்கும்.

सौराष्ट्रे सोमनाथं च श्रीशैले मल्लिकार्जुनम्।
 சௌராஷ்ட்ரே சோமநாதம் ச    ---சௌராஷ்ட்ரத்தில்  சோமநாத லிங்கம்.

श्रीशैले मल्लिकार्जुनम्।  
ஸ்ரீசை`லே மல்லிகார்ஜுனம்!  --   ஸ்ரீ சைலத்தில் மல்லிகார்ஜுனஸ்வாமி

उज्जयिन्यां महाकाल  
உஜ்ஜயின்யாம் மஹாகாலம்  -- உஜ்ஜயினியில்  மஹா காளேஸ்வரர்

मोङ्कारममलेश्वरम्॥  
ஓங்காரம் அமலேஷ்வரம் !!   --  ஓம்காரநாதனாக  அமலேஸ்வரத்தில்.  காண்ட்வாவில் .

परल्यां वैद्यनाथम् च  
பரல்யாம் வைத்யநாதம் ச  -    பரலியில் , மஹாராஷ்ட்ர தேசத்தில்  வைத்யநாதனாக  

डाकिन्यां भीमशङ्करम्।  
டாகின்யாம் பீமச`ங்கரம்!   --  பீமசங்கரத்தில்  டாகினியாக  தோற்றமளிப்பவர்

सेतुबन्धे तु रामेशं      
சேதுபந்தே து ராமேச`ம்,   --    சேதுவில்  ராமேஸ்வரத்தில் ராமநாதஸ்வாமியாக

नागेशं दारुकावने॥  
நாகேச`ம் தாருகாவனே!!   தாருகா வனத்தில்  நாகேஸ்வரனாக    

 वाराणस्यां तु विश्वेशं    
வாராணஸ்யாம் து விச்`வேச`ம்  -   காசி  வாரணாசியில்  விஸ்வநாதனாக,

 त्र्यम्बकं गौतमीतटे।  
த்ரயம்பகம் கௌதமீதடே!   -   நாசிக்கில் கௌதமி (கோதாவரி)  நதிக்கரையில்   த்ரியம்ப
கேஸ்வரராக

 हिमालये तु केदा
ஹிமாலயே து கேதாரம் --    ஹிமாச்சலத்தில்  கேதார்நாத் ஊரில் கேதாரநாதனாக

 रं घुश्मेशं च शिवालये    
குச்`மேச`ம் ச சி`வாலயே!!  -    வெறுல் எனும் ஊரில், க்ரிஷ்னேஸ்வரில் குஷ்மேசனாக  
சிவாலயம் கொண்ட  பரமேஸ்வரன்

  एतानि ज्योतिर्लिङ्गानि सायं प्रातः  पठेन्नरः  सप्तजन्मकृतं पापं स्मरणेन विनश्यति  
ஏதானி ஜ்யோதிர்லிங்கானி ஸாயம் ப்ராத:  படே`ந்நர :! ஸப்தஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேந வினச்` யதி!!

மேலே சொன்ன  பன்னிரண்டு லிங்கங்கள் பெயரையும்  காலையிலும் மாலையிலும்  ஒரு தரம்  சொன்னாலே போதும். ஏழேழு ஜென்மங்களில் செய்த பாபங்கள் அகலும் என்கிறது இந்த த்வாதசலிங்க ஸ்தோத்ரம். கேட்கவே   அமிர்தமாக  ஒரு  ரெண்டு மூணு நிமிஷம்  https://youtu.be/K7r_r_yTPL4

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...