மாண்டூக்யோபநிஷத் - 2 --- நங்கநல்லூர் J K SIVAN --
नान्तःप्रज्ञं न बहिष्प्रज्ञं नोभयतःप्रज्ञं न प्रज्ञानघनं
न प्रज्ञं नाप्रज्ञम् । अदृष्टमव्यवहार्यमग्राह्यमलक् षणं
अचिन्त्यमव्यपदेश्यमेकात्मप्रत् ययसारं प्रपञ्चोपशमं
शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः ॥ ७॥
अचिन्त्यमव्यपदेश्यमेकात्मप्रत्
शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः ॥ ७॥
நாந்த:ப்ரஜ்ஞம் ந ப³ஹிஷ்ப்ரஜ்ஞம் நோப⁴யத:ப்ரஜ்ஞம் ந ப்ரஜ்ஞாநக⁴நம்
ந ப்ரஜ்ஞம் நாப்ரஜ்ஞம் । அத்³ரு’ஷ்டமவ்யவஹார்யமக்³ராஹ்
அசிந்த்யமவ்யபதே³ஶ்யமேகாத்மப்
ஶாந்தம் ஶிவமத்³வைதம் சதுர்த²ம் மந்யந்தே ஸ ஆத்மா ஸ விஜ்ஞேய: ॥ 7
மனித வாழ்க்கையின் மூன்று பரிமாணங்களை பற்றி அறிந்தோம்.,விழிப்பு நிலை, கனவு, ஆழ்ந்த உறக்கம், நான்காவது நிலை ஒன்று உண்டு. அது உள்ளேயோ, வெளியேயோ, அசையும் உணர்வு அல்ல. இரண்டும் சேர்ந்ததும் அல்ல. இரண்டின் இனம்புரியாத கலவையுமல்ல, உணரமுடியாததல்ல, உணர்வதுமல்ல, கண்ணுக்கு புலப்படாதது, பிடிபடாதது, குணமற்றது, விளக்கமுடியாதது, அது தான் ஆத்மா அதை உணரமுடிய வேண்டுமானால் கடும் தியானப் பயிற்சி தேவை. அது தன்னைத்தானே உணரவல்லது. மென்மையானது, அமைதியானது, ஆனந்தமயமானது. ஈடிணையற்ற சுகானுபவம் அதை உணரத்தான் முனிவர்கள் ரிஷிகள் கடுமையாக தவம் இருக்கிறார்கள்.
सोऽयमात्माध्यक्षरमोङ्कारोऽधिमा त्रं पादा मात्रा मात्राश्च पादा
अकार उकारो मकार इति ॥ ८॥
ஸோऽயமாத்மாத்⁴யக்ஷரமோங்காரோऽதி ⁴மாத்ரம் பாதா³
மாத்ரா மாத்ராஶ்ச பாதா³ அகார உகாரோ மகார இதி ॥ 8॥
अकार उकारो मकार इति ॥ ८॥
ஸோऽயமாத்மாத்⁴யக்ஷரமோங்காரோऽதி
மாத்ரா மாத்ராஶ்ச பாதா³ அகார உகாரோ மகார இதி ॥ 8॥
ஆத்மாவை சப்த வடிவில் காட்டும் ஓம் எனும் பிரணவ மந்த்ரம் மேலே சொன்ன நான்கு நிலைகளிலும் உணரப்படும். ஓம் என்பது அ உ ம எனும் மூன்று அக்ஷரங்கள் தொகுப்பு. ஓம் என்பது சப்த மாதா.
जागरितस्थानो वैश्वानरोऽकारः प्रथमा मात्राऽऽप्तेरादिमत्त्वाद्
वाऽऽप्नोति ह वै सर्वान् कामानादिश्च भवति य एवं वेद ॥ ९॥
ஜாக³ரிதஸ்தா²நோ வைஶ்வாநரோऽகார: ப்ரத²மா மாத்ராऽऽப்தேராதி³மத்த்வாத்³
வாऽऽப்நோதி ஹ வை ஸர்வாந் காமாநாதி³ஶ்ச ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 9॥
jāgarita-sthāno vaiśvānaro’kāraḥ prathamā
mātrā’pter ādimattvād vā’pnoti ha vai
sarvān kāmān ādiś ca bhavati ya evaṁ veda.
வைச்வாநரம் என்பது விழிப்பு நிலையை குறிப்பது. அது தான் முதல் சப்தம். அ . சகலமும் உள்ளடக்கியது இந்த அக்ஷரம். எனவே அதையே முதலாவதாக கொண்டார்கள் ரிஷிகள். அகாரம் என்கிற சப்தம், எழுத்து தான் அநேகமாக எல்லா பாஷைகளிலும் முதல் எழுத்தாக உலகில் இன்றும் காணப்படுகிறது. எல்லாம் அறிந்தவன் எல்லாவற்றிற்கும் ஆதாரமான முதல் சப்தமாகிறான். இது தான் வேதம் சொல்வது.
स्वप्नस्थानस्तैजस उकारो द्वितीया मात्रोत्कर्षात्
उभयत्वाद्वोत्कर्षति ह वै ज्ञानसन्ततिं समानश्च भवति
नास्याब्रह्मवित्कुले भवति य एवं वेद ॥ १०॥
ஸ்வப்நஸ்தா²நஸ்தைஜஸ உகாரோ த்³விதீயா மாத்ரோத்கர்ஷாத்
உப⁴யத்வாத்³வோத்கர்ஷதி ஹ வை ஜ்ஞாநஸந்ததிம் ஸமாநஶ்ச ப⁴வதி
நாஸ்யாப்³ரஹ்மவித்குலே ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 10॥
இரண்டாவது நிலையான கனவு தைஜஸ் என அறியப்படுகிறது. இதற்கான சப்தம் உ எனும் அக்ஷரத்தால் உணரப்படுகிறது. அற்புதமான சப்தம் இது. மற்ற இரண்டின் தன்மையை தன்னுள் கொண்டது. எவன் இதை அறிந்தவனோ, அவன் ஞானம் பெறுபவன். அவன் வம்சத்தில் எவனும் பிரம்மத்தை அறியாதவனாக இருக்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு சக்தி வாய்ந்த சப்தம் இது. வேதம் இதை வலியுறுத்துகிறது.
सुषुप्तस्थानः प्राज्ञो मकारस्तृतीया मात्रा मितेरपीतेर्वा
मिनोति ह वा इदं सर्वमपीतिश्च भवति य एवं वेद ॥ ११॥\
ஸுஷுப்தஸ்தா²ந: ப்ராஜ்ஞோ மகாரஸ்த்ரு’தீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இத³ம் ஸர்வமபீதிஶ்ச ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 11॥
ஸுஷுப்தஸ்தா²ந: ப்ராஜ்ஞோ மகாரஸ்த்ரு’தீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இத³ம் ஸர்வமபீதிஶ்ச ப⁴வதி ய ஏவம் வேத³ ॥ 11॥
மூன்றாவது நிலையான ஆழ்ந்த உறக்கம் மகாரம் எனும் சப்தத்தால் உணர்த்தப்படுகிறது. பிரஞை எனும் சொல்லால் இந்த நிலை குறிப்பிடப்படுகிறது. இதில் எல்லாம் சேர்கிறது. இதன் தன்மையை உணர்ந்தவன் சகலமும் அறிந்தவன் என வேதம் சொல்கிறது.
अमात्रश्चतुर्थोऽव्यवहार्यः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत
एवमोङ्कार आत्मैव संविशत्यात्मनाऽऽत्मानं य एवं वेद ॥ १२॥
அமாத்ரஶ்சதுர்தோ²ऽவ்யவஹார்ய: ப்ரபஞ்சோபஶம: ஶிவோऽத்³வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஶத்யாத்மநாऽऽத்மாநம் ய ஏவம் வேத³ ॥ 12॥ ॥ இதி மாண்டூ³க்யோபநிஷத் ஸமாப்தா ॥
மாண்டூக்ய உபநிஷத் முதல் பாகம் சொல்வது இவ்வளவு தான்.
மேலே சொன்ன ஸ்லோகங்களில் ஓம் எனும் பிரணவ ஆதார மந்த்ரம் அக்ஷரங்கள் மூலம் பகுத்துக் காட்டப்பட்ட து . ஓம் எனும் மந்திரம் அ எனும் முதல் சப்தத்தில் பிறக்கிறது அல்லவா. அந்த அ எனும் ''அப்தி '' எனும் சொல்லின் வடிவம். அப்தி என்றால் அடைவது, சேர்வது. ஆதி மாத்வம். (ஆதாரமான முதலாவது) ரெண்டாவது சப்தமான உகாரம் , உதகர்ஷம் (உயர்நிலை) .இதையே உபயத்வம் (நடுநிலை) என்பார்கள். மூன்றாவது சப்தம் ம , மிதி எனும் சொல்லின் விளைவு. மிதி என்பது உருவாவது, விளைவது என்று அர்த்தம் தருவது. மி மினதி , அதாவது அபிதி யை சொல்வது. அழிவு, சம்ஹாரம் பற்றி உணரவைப்பது. நான்காவது சப்த குறிப்பற்றது . அதற்கு தனியான அக்ஷரம் இல்லை. ஏன் எனில், அது பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்டது. இப்படித்தான் மாண்டூக்யோபநிஷத் பிரணவ சப்தம் ஓம் என்பதை ஆத்மாவாக உணர்த்துகிறது. நான்காவது நிலை துரீயம் விளக்க வொண்ணாதது. தன்னுள் தானே அனுபவத்தால் அறிவது.
அன்பர்களே, உபநிஷதுகள் பொறுமையாக படித்து அறிந்து கொள்ளவேண்டியவை. அவசரமாக அணுகினால் உள்ளே நுழையாது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஓம் எனும் பிரணவத்தை உள்ளர்த்தத்துடன் புரிந்துகொண்டு நெருங்கினால் உபநிஷதுகள் கொஞ்சம் எளிமையாக புரியும்.
108 உபநிஷதுகள் இருக்கிறது.
No comments:
Post a Comment