Monday, March 29, 2021

PESUM DEIVAM


 பேசும் தெய்வம்     --   நங்கநல்லூர்    J K  SIVAN  


       குப்பை எல்லாம் இங்கே கொட்டுங்கோ 
                  
நமக்கு  ஒரு குணம் பொதுவாக.   நம்மை விட  சிலரை  அறிவில் குறைந்தவர்  என்று உதாசீனம் செய்வது. மஹான்கள் ஞானிகள்  எவரையும்  வித்யாசமாக பார்ப்பதில்லை.  மஹா பெரியவா எல்லோரையும்  ஒன்றாக அன்போடு ரக்ஷித்தவர்.  ஒரு  விவரம் சேகரித்தது.  எங்கோ யாரோ எழுதியது நான் படித்தது தான். 

ஒண்ணுக்கும் உதவாதவன் இவன் என்று  பிறர்  கரித்து கொட்டினாலும்   அவனும் நம்மைப் போல தான்  என்று  பாசத்தோடு, அன்போடு  ஏற்றுக் கொள்பவர்  மஹா பெரியவா.   பிறருக்கு நாசூக்காக  இதை புரியவைப்பவர். அது தான்  பேசும் தெய்வம் பெரியவாவின்  அன்பு, எளிமை .
இப்படி  எல்லோராலும்  இது தண்டம், எதுக்கும் உதவாத  ஒதியமரம்  என்று புறக்கணிக்கப்பட்ட  ஒரு  இளம் வயது வாலிபன்  எங்கும்  தனக்கு பிழைக்க  ஆதரவு இல்லாததால்  எல்லோருக்கும் சரணாலயமாக  விளங்கும்  மஹா பெரிய வாளின்  காஞ்சி மடத்துக்கு வந்து  அங்கே  ஏதோ தன்னாலான  கைங்கர்யம் பண்ணிக்கொண்டி ருந்தான்.

ஒருநாள்,   மேற்படி  வாலிபன்  வாழ்ந்த  ஊரைச்  சேர்ந்த ஒருவர்  மடத்துக்கு  பெரியவா தரிசனத் துக்கு வந்தார்.  அங்கே  தங்கள் ஊர்  உதவாக் கரை  பெரியவா மடத்தில் இருப்பதைப் பார்த்ததும்  ஆச்சசர்யம்.

அன்று அவருடைய  அதிர்ஷ்டம்  பெரியவா மௌன விரதம் இல்லை. எல்லோருடனும்  பேசினார்.  இந்த  பெரிய மனிதர்  பெரியவாளுக்கு   நமஸ்காரம் பண்ணிவிட்டு  

''பெரியவா  இங்கே  இருக்கிற  அதோ அந்த பையன்  எங்க ஊர்க்காரன்?''

'ஓஹோ..''

''ஆனா  அவன்  ரொம்ப மந்த புத்திக்காரன்.  எங்க ஊர்லே  எல்லோரும் அவனை  '' கால் காசுக்கு பிரயோஜன மில்லாதவன் ! வெறும் குப்பை!  என்பார்கள்.    எங்க ஊர்ல குப்பை கொட்டியாச்சு! இப்ப இங்க மடத்துல வந்து குப்பை கொட்டறா னாக்கும்'' என்று கொஞ்சம் அளவுக்கு மீறி பேசி விட்டார்.

மஹா பெரியவாவிட மே  அவரது மடத்தில் இருந்த ஒருவனைப் பற்றி  இப்படி பேசுகிறோம் என்ற மரியாதை தெரியாமல்  அந்த தொண்டனைப்  பற்றி குறை சொன்னதை  மஹா  பெரியவா எப்படி எடுத்துக் கொண்டார்?  நாமாக இருந்தால் கோபம் கொள்வோம்.

''உங்க ஊர்க்காரனாக இருந்தாலும்  நீ  ஏன்  அவன் மேலே  குத்த பத்திரிகை வாசிக்கிறே.  ஒருவேளை  அவன் உன்னைத் தெரிஞ்சுண்டு,  ஒரே  ஊர்க்காரன் னு உபசாரம் பண்ணி வரவேத்து, என் முன்னாடி கொண்டு வந்து நிறுத்தலை  என்கிற   காரணமோ?''  என்று  நிதானமாக கேட்டார்.

அந்த மனிதர்  பதில் பேசவில்லை. கை  கட்டி நின்றார்.   பெரியவா தொடர்ந்தார்.

"அவனை குப்பைன்னு தானே சொன்னே! நீங்கள்ளாம் சுத்தம் பாக்கற பெரிய மனுஷா. அதனால குப்பை-கூளம் ஒங்களுக்கு ஒதவாது தான். ஆனா லோகம்னு  இருந்தா  குப்பை  கூளமும்   இருக்கத் தானே செய்யும்? அதை கொட்டி வெக்கவே குப்பை தொட்டின்னும்   ஒண்ணு  இருக்கத்தானே இருக்கு? நான்தான் அந்த குப்பை தொட்டி. ஒங்க  யாருக்கும்   தேவைப்படாத, வேண்டாத  குப்பையும் கூளமும் எனக்கு தேவை .

 "இதோ பாரு! குப்பையிலும் கூட   ஒங்க மாதிரி சுத்தம் பாக்கறவாளுக்கு  இஷ்டமானது கெடைக் கும் னு உனக்கு  தெரியுமோ? 

  இந்த மடத்து குப்பை குழிலேந்து தான் ஒரு பரங்கி கொடியும், பூஷணி கொடியும் மொளச்சு, ஒன் மாதிரி  சுத்தக்காராளும், "இந்த மாதிரி டேஸ்ட் சாப்பிட்டதே இல்லைன்னு" சந்தோஷமா சாப்டுட்டு போய்ண்டே இருக்கா. தெரிஞ்சுக்கோ!

குப்பையிலேதான்   "குருக்கத்தி"  ன்னு ஒசந்த ஜாதி புஷ்பம் பூக்கறது.       "குப்பைமேனி"   ன்னு மூலிகை  கீரையே இருக்கு என்கிறதை  தெரிஞ்சுக்கோ. 

குப்பையை கிளறாதேங்கறாளே அதைத் தான் சொல்றேன். கிளறினா பூச்சியும், புழுவும் வந்து பிடுங்கும். இப்ப நீ குப்பையை கிளறினதாலதான், நான் ஒன்ன பிடுங்கறேன்''

பெரியவா  கோபம் காட்டவில்லை.  ஆனால்  அவர்  வார்ததைகளில்  இருந்த  உஷ்ணம்  அந்த மனிதரின் மனதை சுட்டது.  கண்களில் நீரோடு   பெரியவாவிடம்    தான் பேசியதற்கு  மன்னிப்பு கேட்டார்.

தன் பணியாளன் ஒருவனைப் பற்றி  யாரோ ஒரு வார்த்தை  குறையாக சொல்லிய தைத்   தாங்கா மல், தன்னையே குப்பை தொட்டி என்று சொல்லிகொண்டதில்  தான் எத்தனை எளிமை, வாத்சல்யம், உட்பொருள்!  பரந்த மனம்.  இப்படி யார்  இருப்பார்கள்?  உலகமுழுதுமுள்ள  பக்தர் கள்   அவரை இன்னும்  நாடி தேடி  வணங்கி  அவர் அருள் பெற அலைவது ஏன் என்று புரிகிறதல் லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...