பேசும் தெய்வம் --- நங்கநல்லூர் J K SIVAN --
'' கனவுகள் நினைவானது''
நூறு வருஷம் வாழ்ந்து நம்மை எல்லாம் ரக்ஷித்த மஹா பெரியவா வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் ஏதாவதொரு ரஹஸ்யம், அதிசயம், அற்புதம் சத்தம் போடாமல் நடந்து கொண்டிருந்தது. அது சம்பந்தப்பட்ட பக்தர் களுக்கு மட்டுமே தெரியும். அவர்களில் சிலர் தான் அவற்றை வெளியே அப்போதோ எப்போதோ நினைவு கூர்ந்து சொல்வார்கள், சிலர் எழுதுவார்கள். மற்றவர்கள் சிலர் அதைக் கேட்டு வெளிப்படுத் துவார்கள். லண்டன் ஸ்வாமிநாதன் ஒரு அருமையான மஹா பெரியவா பக்தர்.. அவர் எத்தனையோ விஷயங்கள் சொல்லி இருக்கிறார். அதில் நான் கண்ட சில விஷயங்கள்:
ஆண்டவன் வேறு ஆச்சார்யாள் வேறு இல்லை. ஆசார்யன் மூலமாகத் தான் ஆண்டவனை தரிசிக்கிறோம். நமது சந்தேகம், ஞானப் பசியை தீர்ப்பவர் ஆசார்யன் தான் முதலில். ஆண்டவன் அனுக்கிரஹம் நமக்கு அவர் மூலம் தானே பெறுகிறோம். குருவுக்கு குரு, பரமகுரு. பரம குருவுக்கு குரு பரமேஷ்டி குரு . அவரே பரமேஸ் வரன். மஹா பெரியவா அப்படிப்பட்டவர்.
அவரது கனவில் ஒரு காட்சி. காஞ்சி காமாக்ஷி ஆலயத்திலும் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்திலும் அம்பாளின் உக்ரம் தணிய மந்த்ர சாஸ்திர பிரகாரம், யந்த்ர பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கரர். அம்பாளுக்கு இரு செவிகளிலும் தாடங்கம் செய்து அணிவித்தார். எத்தனையோ நூற்றாண் டுகள் ஆகிவிட்டதால், தாடங்கத்தை புதுப்பிக்க மஹா பெரியவா முன்வந்தார். ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்தின் போது அது நிறை வேறியது.
சென்னபட்டணத்தில் ஜகத்குரு முகாம் இட்டிருந்தபோது வெள்ளைக்காரன் . ஒருநாள் கனவில் காஞ்சி காமாக்ஷி தோன்றினாள் . அம்பாள் ''என் தலையைப் பார்த்தாயா? காய்ந்து எண்ணெய் இன்றி சடை பிடித்தி ருப்பதை.? கும்பாபிஷேகம் எப்போது பண்ணு வாய்? என்று கேட்பது போல் தோன்றியதால் உடனே விழிப்பு வந்துவிட்டது. தன்னுடைய கனவை வெள்ளைக்கார அதிகாரிகளிடம் தெரிவித்தார். பக்தர்களும் கும்பாபிஷேகத்துக்கு உதவ தயாரானார்கள்.
சென்னபட்டணத்திலிருந்து காஞ்சிபுரம் 40 மைல் .அன்றே புறப்பட்டுவிட்டார். நேராக காமாக்ஷி ஆலயம் சென்று கண்களில் நீரோடு பிரார்த்தித்தார். நன்கொடைகள் கொட்ட ஆரம்பித்தன. அப்போதெல்லாம் போக்குவரத்து வசதி அவ்வளவாக இல்லையே. அப்படி இருந்தும் குதிரைவண்டிகள், மாட்டு வண்டிகளில் பக்தர்கள் திரண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக தரிசனம் செய்தார்கள்.
அதேபோல் மஹா பெரியவா கும்பகோணத் திலிருந்தபோது பக்தர்கள் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு தாடங்கம் புதுப்பிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித் தார்கள். மஹா பெரியவா திருவானைக்கா வந்தார். சிருங்கேரி சாரதா பீட மடம் தங்களுக்கு மட்டும் தான் அம்பாளுக்கு தாடங்கம் பிரதிஷ்டை செய்ய உரிமை என்று அறிவித்தது. இந்த விஷயம் வழக்காகி மூன்று நீதி மன்றங்களை ச் சந்தித்தது. காஞ்சி மடம் தாடங்க பிரதிஷ்டை செய்யலாம் என்று தீர்ப்பு வந்தது. இந்த நீதிமன்ற வழக்கு ஏற்கனவே நான்கு வருஷங்களையும் ஏகப்பட்ட பணத்தையும் தின்றுவிட்டது. பெரியவா தாடங்கம் ஏற்பாடு பண்ணியாகிவிட்டது. ஆடமபர செலவு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எதற்கு வீண் செலவு? சிருங்கேரி மடம் தாடங்க பிரதிஷ்டை பண்ணுவதாக இருந்தால் அவர்களிடமே பொறுப்பை விட்டுவிடலாம் என்று கூட சொல்லிக்கொண்டு வந்தார்.
இந்த நீதிமன்ற வழக்
குகளை காஞ்சி மடத்திற் காக நடத் தி வந்த முக்கிய பக்தரைத் திடீ ரென்று காணோம். என்னவாயிற்று அவருக்கு ? எல்லோருக்கும் கவலை. சில நாட்கள் சென்று ஒருநாள் அவரே திரும்பி வந்தார். பெரியவா அவரைக் கூப்பிட்டு ''எங்கே உன்னைக் காணோம். எங்கே சென்றாய்? என்று கேட்டபோது ''பெரியவா, நான் தஞ்சாவூர் ராஜாவைப் போய் பார்த்தேன். பெரியவாளை தஞ்சாவூர் அழைத்து தங்கவைத்து, நிதி உதவிகள் செய்யவும் ராஜாவால் முடியவில்லை, அவருக்கு வசதியில்லை என்று அறிந்தேன். அடுத்தமுறை எப்படியும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டார'' என அந்த பக்தர் தெரிவித்தார்.
குகளை காஞ்சி மடத்திற் காக நடத் தி வந்த முக்கிய பக்தரைத் திடீ ரென்று காணோம். என்னவாயிற்று அவருக்கு ? எல்லோருக்கும் கவலை. சில நாட்கள் சென்று ஒருநாள் அவரே திரும்பி வந்தார். பெரியவா அவரைக் கூப்பிட்டு ''எங்கே உன்னைக் காணோம். எங்கே சென்றாய்? என்று கேட்டபோது ''பெரியவா, நான் தஞ்சாவூர் ராஜாவைப் போய் பார்த்தேன். பெரியவாளை தஞ்சாவூர் அழைத்து தங்கவைத்து, நிதி உதவிகள் செய்யவும் ராஜாவால் முடியவில்லை, அவருக்கு வசதியில்லை என்று அறிந்தேன். அடுத்தமுறை எப்படியும் ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டார'' என அந்த பக்தர் தெரிவித்தார்.
பெரியவா மீண்டும் கும்பகோணம் திரும்ப நேர்ந்தபோது திருவையாறு சாலை வழியாக யானை குதிரை ஒட்டகங்களோடு செல்ல ஏற்பாடு செய்தார்கள் என்றாலும் கடைசியில் தஞ்சாவூர் வழியாக செல்ல நேரிட்டது. பெரியவா அமர்ந்த பல்லக்கு தஞ்சாவூர் தெருக்களில் சென்றபோது பெரியவாளுக்கு அமோக வர வேற்பு கொடுக்கப்பட்டது. மேள தாளங்க ளோடு பெரியவா ஊர்வலம் தெருக்களில் சென்றது. முதலில் வரவேற்று தங்க வைக்க வசதி இல்லை என்ற ராஜாவுக்கு எப்படி இந்த வசதி வந்தது? ராஜாவின் கனவில் சந்திர மௌலீஸ்வரர் தோன்றி பெரியவாளை வரவேற்று உபசாரம் செய் என்று கட்டளையிட்டது எத்தனை பேருக்கு தெரியும். ராஜா பெரியவாளுக்கு கனகாபி ஷேகம் ஏற்பாடு செய்தததால் நிதி உதவி காஞ்சிமடத்திற்கு கிடைத்தது. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி காதுகளில் தாடங்கம் பிரதிஷ்டை ஆகி, கும்பாபிஷேகமும் சிறப்பாக வந்தது. பெரியவா கனவில் கண்டதை செயலில் முடித்துவிட்டார்.
No comments:
Post a Comment