''ஆமாம், இது நடந்தது'' - நங்கநல்லூர் J K SIVAN
நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே மரியாதை, கொஞ்சம் பக்தியும் நேர்மையும் ஜாஸ்தி. எல்லோரிடமும் அன்பா பழகி பீட்டர் பாண்டியன் என்று பேரும் வாங்கிட்டான்.
கலெக்டர் வீட்டுக்கும் ஆபிசுக்கு நடுவே மீனாட்சி அம்மன் கோவில் அப்போ நிறைய வீடுகள் கிடையாதே. தோட்டம் வயல்.
குதிரை மேலே ஏறி தான் ஆபிஸ் போவான். ஆனால் நடுவே மீனாட்சி அம்மன் கோவில் வரும்போது இறங்கி தலையிலே குல்லாவை கழட்டிட்டு, காலிலே ஷூவை கழட்டிட்டு மரியாதையோடு நடந்து போவான். கோவிலுக்குள்ளே போகறதில்லே. மீனாட்சியிடம் அவ்வளவு பக்தி மரியாதை.
வைகை ஒருநாள் வெள்ளத்திலே கரைபுரண்டு ஓடிச்சு. ராத்திரி கரை உடைஞ்சிடுச்சி. கலெக்டர் வீட்லே தூங்கறான். ஓவுன்னு மழை. வெள்ளம் ஊருக்குள்ளே வேகமாக வர ஆரம்பிச்ச்சுடுச்சு. தூங்கற கலெக்டர் காதுலே ஜல் ஜல்னு சலங்கை கொலுசு சத்தம் விடாம கேட்டிச்சு. என்னாடா ரோதனை இது ன்னு எந்திரிச்சான். இங்கே எங்கிருந்து கொலுசு சத்தம்.
பளிச்சுனு ஒரு மின்னல் வெளிச்சம். லாந்தர் விளக்கை பெரிசு பண்ணி பாக்கிறான் கலெக்டர். ஒரு சின்ன மூணு வயசு பொண்ணு. பட்டு பாவாடை சட்டை நிறைய நகை போட்டுக்கிட்டு பளிச்சுனு இருக்குது. ''பீட்டர் வா உடனே இங்கே ''ன்னு கை காட்டி கூப்பிடுது.
''அட , இந்த சிறிசு என்னை பேர் சொல்லி கூப்பிடுதே. எதுக்கு? கலெக்டர் உடனே எழுந்தான். நடந்தான். பின்னாலேயே போனான். யார் இந்த அழகான பொண்ணு?
''இன்னாத்தை சொல்றது. அய்யய்யோ. ஒரு ரெண்டு நிமிஷம் கூட ஆவலே . கலெக்டர் வெளியே வந்து. டமால் னு சத்தம். படபடன்னு சத்தத்தோடு அவன் வீடு இடிஞ்சுது. வெள்ளம் தண்ணி வீடு இருந்த இடத்தை முழுகடிச்சுட்டுது. அவன் வீடு இப்போ வைகை நதிக்குள்ளே.
''அம்மாடி, தாயே, பொண்ணே, யாருடி நீ. என்னை எழுப்பி கூட்டி வந்து காப்பாத்தினவள். பொண்ணு எங்கே திடீர்னு காணோம். அவ தான் காணாம போய்ட்டாளே. பொண்ணு கடைசியா அவன் பாக்கும்போது வெறும் காலோடு கொலுசு சத்தம் கேக்க கோவிலை பாக்க ஓடினாள்.... பீட்டர் பாண்டியன் கெட்டிக்காரன். புரிஞ்சிகிட்டான். '' டே பீட்டரு , உன்னை காப்பாத்தியது மீனாக்ஷி டா''
சந்தோஷம் நன்றி எதுன்னு புரியலே. ஒரே பரவசம் கலெக்டருக்கு. கோவில் தர்ம கர்த்தா, அர்ச்சகர் எல்லோரையும் ஆளு விட்டு அனுப்புனான்.
''உங்கள எதுக்கு கூப்பிட்டேன் தெரியுமா? நேத்து ராத்ரி உங்க மீனாட்சி தான் எனக்கு உயிர் கொடுத்தவ வெறும் காலோடு வந்து காப்பாத்தினவ. அவளுக்கு தங்கத்தில் பாதுகை தறேன். எப்படி சாத்தனுமோ அப்படி உடனே செய்யுங்க ''
மீனாட்சி அம்மனுக்கு ரோஸ் பீட்டர் காணிக்கையாக அளித்த பாதுகை இன்னும் இருக்கிறதா? அவன் கொடுக்கும்போது அது தங்கத்தில் 412 மாணிக்க கல்கள், 72 மரகதம், 80 வைரக்கல்கள். !! இப்போ அப்படியே இருந்தா சந்தோஷம்.
சித்திரை விழாவில் உத்சவ அம்மனை ரோஸ் பீட்டர் பாதுகையோடு பார்க்கலாம். அந்த பாதுகையிலே பீட்டர் னு அவன் பேர் பொரிச்சிருக்கும். குதிரை மேலே உட்கார்ந்து அம்மன் போகும்போது காலுக்கு அது மிதியடி. சித்திரை திருவிழாவில் ஐந்தாம் நாள் தங்க குதிரை மேல் அம்மன் பவனியில் இது கண்கொள்ளாக் காட்சி.
மதுரை மீனாட்சி அந்த தூங்கா நகரத்தின் தாய். எண்ணற்ற ஹிந்து பக்தர்கள் தரிசித்து மகிழும் அன்னை பராசக்தி.
அவள் சாதாரணமானவளா? ஹிந்துக்களுக்கு மட்டும் அருள்பவளா? இல்லை என்கிறது மேலே நடந்த சரித்திர நிகழ்ச்சி
பீட்டர் ரோஸ் மீனாட்சி பக்தர் என்பதில் சந்தேகமே இல்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் வேட்டையாட செல்லும்போது ஒரு காட்டு ய;ஆணை அவரை தாக்கி அவர் தனியே அதனிடம் அகப்பட்டுக்கொண்ட போது ''அம்மா மீனாட்சி என்னை காப்பாற்று'' என்று வேண்ட அவரிடம் இருந்த துப்பாக்கியில் இருந்த ஒரே குண்டால் யானையை படுகாயம் அடையச்செய்து ஓடச் செய்தார். உயிர் தப்பினார்.
வேலை காலம் முடிந்து பீட்டர் ரோஸ் மற்றவர்களை போல் இங்கிலாந்து திரும்பவில்லை. ''என்னை இங்கே மதுரையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் புதைத்து விடுங்கள். இந்த சர்ச் மெயின் கார்டு சதுக்கத்தில் இன்றும் உள்ளது. அவரது கல்லறை மதுரை மீனாட்சி ஆலயத்தை பார்த்தவாறு தான் இருக்கிறது என்கிறார்கள். உண்மையான பக்திக்கு மதம் என்றும் தடையாக இருந்ததில்லை.
வேலை காலம் முடிந்து பீட்டர் ரோஸ் மற்றவர்களை போல் இங்கிலாந்து திரும்பவில்லை. ''என்னை இங்கே மதுரையில் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் புதைத்து விடுங்கள். இந்த சர்ச் மெயின் கார்டு சதுக்கத்தில் இன்றும் உள்ளது. அவரது கல்லறை மதுரை மீனாட்சி ஆலயத்தை பார்த்தவாறு தான் இருக்கிறது என்கிறார்கள். உண்மையான பக்திக்கு மதம் என்றும் தடையாக இருந்ததில்லை.
No comments:
Post a Comment