கனவில் வந்த லிங்கம் -- நங்கநல்லூர் J K SIVAN
ஹவாய் எனும் அமெரிக்காவில் உள்ள கடற்கரை பகுதியில் உள்ள ''இறைவன்'' கோயிலில் குடிகொண்டி ருக்கும் ஸ்படிக லிங்க கதை நான் படித்து எழுதியதற்கு நல்ல வரவேற்பு வாசகர்களிடம் இருந்து வந்ததில் மகிழ்ச்சி.
நேரில் அந்த கோயிலுக்கு சென்று தரிசித்த ஒரு சென்னை வாழ் தமிழன்பர் ஸ்ரீ மணியன் (88 வயது) எழுதியது: 1980 களில் ஆலயத்தை நிர்மாணித்த அமெரிக்கர் ராபர்ட் ஹான்சென் என்ற சிவாய சுப்பிரமுணிய சுவாமி (1927-2001) தமிழநாடு சிவாலய யாத்திரையாக சென்னை வந்த போது அடையார் கலாக்ஷே த்ராவில் ஒரு போட்டோக்ராபர் (பிற்காலத்தில் கோவிலூர் மட பீடாதிபதி) அமெரிக்கருடன் தொடர்பில் இருந்தார். சுப்பிரமுணிய சுவாமி ஒரு அமெரிக்கர் அவருடன் வந்திருந்த
மற்ற மூவருமே பிறப்பால் அமெரிக்கரகள் தான். பக்தியால் சிவபக்தர்கள். எல்லோருமே தமிழ்ப்
பெயர் கொண்டவர்கள். இந்த ஆலயத்தின் மறை நூலகள் திருமந்திரமும் திருக்குறளும் ஆகும் . திருக்குறளின் ஆங்கில பொழி பெயரப்பு அவரகளிடம இருந்தது.
ஆனால் திருமந்திர ஆங்கில மொழி பெயரப்பு இல்லை. தமிழகத்தின் அப்போதைய பொருளாதார நிபுணர் ஒருவர் திருமதிரத்தின் சில பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பாற்றம் செயதிருந்தார். சுவாமிகளுக்கு அந்த ஆங்கில மொழி மாற்றம் திருப்தி தரவில்லை .
ஜஸடிஸ் மகாராஜன் அவரகள் திருமந்திரத்தின் பெரும்பாலான பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம
செய்திருந்தார். கொஞ்சம் தான் பாக்கி இருந்தது. இதை அறிந்திருந்த அந்த போட்டோகிராபர் இந்த நாலவரையும் கூட்டிக் கொண்டு ஜஸ்டிஸ் அவரகளைப் பாரக்க வந்தனர். அப்போது நான் ஜஸடிஸ் வீட்டில் அவரகளோடு இருந்தேன். ஜஸ்டிஸ் மகாராஜன் அவரகளுடைய நெடுநாளைய அபிமானி நான்.
அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் தான் எங்கள் குடும்பம் வாழ்நது கொண்டிருந்தது. அவரகளிடம் தமிழ்ப் பாடலகள் கேட்டுக் கொண்டிருந்தேன் பல வருஷங்களாக. அப்போது தான் நான் சுப்பிரமுணிய சுவாமி களைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவர் இலங்கையில் இருந்த சிவ குருமார் ஒருவரிடம் சிவ தீட்சை பெற்றவர் என்றும் திருமந்திரத்தையும் திருக்குறளையும் இரு கண்களாக பாவிப்பவர்கள் என்றும் தெரிந்து கொண்டேன். ஜஸ்டிஸ் அவர்கள் இந்த இரு நூல்களின் பெருமையைப் பேசப் பேச சுவாமிகளும் அவருடன் வந்தவரகளும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போதே அவரகள் காணபித்த படங்களில் இருந்து ஹவாயில் ஒரு பெரிய சிவன் கோவில் உருவாவது அறிந்தோம். ஜஸ்டிஸ் அவரகளிடம் நானகு அல்லது ஐந்து முறை வந்தார்கள்.
எப்படியோ பேசி ஜஸ்டிஸ் அவர்களிடம் இருந்த திருமந்திர ஆங்கில மொழி பெயரப்பு எழுத்துப்பிரதியை வாங்கிக் கொண்டு போனாரகள். பிரதி எடுத்துக் கொண்டு திருப்பித் தருவதாகவும் மீதம் இருக்கிற பகுதியை மொழி மாற்றம் செய்த பிறகு அவர்களே இதை வெளியிடுவதாகவும் சொல்லி விட்டுப் போனாரகள். பிறகு பல காலத்திறகு அவர்களிடமிருந்து செய்தி ஏதும் இல்லை.அவரகளைத் தொடர்பு கொள்ள நாங்கள எடுத்த புயறசிகள் எதுவும் பலனிக்கவில்லை. இதறகிடையில் கலாக்ஷேத்ரா அனபர் துறவறம் பூண்டு மடாதிபதி ஆகிவிட்டார். எங்களுடைய கையெழுத்துப் பிரதியைப் பெற அவரை நாடுவது உசிதமாகத் தோன்றவில்லை.
இன்னும் காத்திருக்கிறோம். ஜஸ்டிஸ் அவரகளுடைய திருமந்திர ஆங்கில மொழி பெயர்பபுக்கு எதாவது விடிவு காலம் வருமா என்று. அன்புடன் மணியன்.''
இந்த இறைவன் கோவிலில் ஒரு அற்புதமான உலகத்திலேயே பெரிய ஸ்படிக லிங்கம் (quarts ) இருக்கிறது. ஸ்வயம்புவாக எப்படி கிடைத்தது, எங்கே? என்று நான் அறிந்து ஆச்சர்யப்பட்ட ஒரு சங்கதி உங்களிடம் சொல்லட்டுமா? ஏதோ ஒரு இங்கிலிஷ் சினிமா பார்ப்பதுபோல் காட்சிகள் வரப்போகிறது.
ஜிம்மி கோல்மன் நெற்றியில் விளக்கை மாட்டிக்கொண்டு நிலக்கரி சுரங்கத்தில் இறங்கி வைரம் குவார்ட்ஸ், மைக்கா போல் பாறைகளை வெட்டி விற்பவன். குவார்ட்ஸ் எனும் பளபள கண்ணாடி மாதிரி படிவங்கள் வைரங்கள் போல் ஜொலிக்கும். கிரிஸ்டல் வகை அவை.
1986ல் ஒரு நாள் அமெரிக்காவில் அர்கன்சாஸ் மாநிலத்தில் ஒரு சுரங்கத்தில் 65அடி ஆழத்தில் ஜிம்மி கோல்மன் வெட்டிக் கொண்டே போனவனின் நெற்றி விளக்கின் வெளிச்சம் ஒரு பளபள பாறை மீது பட்டு கண் கூசிற்று. பால் வெள்ளையாக ஸ்படிகம். மூன்றரை அடி உயரத்தில் கனமாக ஒரு லிங்கம். அவனுக்கு லிங்கம் என்றால் என்னவென்றே தெரியாது. அது மாதிரி அவன் பார்த்ததில்லை, உருவம் பிடித்து விட்டது.
எப்படியோ தட்டு தடுமாறி முனகி முயற்சித்து அவ்வளவு கனமான ஸ்படிக லிங்கத்தை தூக்க முடியாமல் தூக்கி வெளியே கொண்டு வந்து விட்டான். அழகாக அதை ஜாக்கிரதையாக பார்ஸல் செய்து ஒரு பெரிய கனமான மரப்பெட்டியில் வைத்து பூட்டி விட்டான்.
தான் கண்டுபிடித்து கொண்டுவந்த லிங்கத்தைப் பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை. அவனுக்கு அதை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவதில் காலம் செலவழிந்து. ஸ்படிக லிங்கம் எல்லாவற்றிலும் மேலான லிங்க ஸ்வரூபம். பூமியை பாதுகாக் கும் படிமம். சில்லென்று குளிர்ச்சியை அளிக்க வல்லது.
1986ல் வெளியே தோன்றியதே தவிர எத்தனையோ ஆயிரம் யுகங்களாக பூமிக்கடியில் தோன்றிய ஸ்வயம்பு லிங்கம் அது. சத்ய , த்ரேதா, யுக காலத்து லிங்கமாகக் கூட இருக்கலாம். ஆத்ம சக்தியைத் தன்னில் அளவற்று கொண்டது.
ஹவாய் தமிழ் பேசும் மக்கள் உள்ள பகுதி ஒன்றின் பெயர் கௌவை. அங்கே ஒரு கோயில் . அந்த கோவிலுக்கு பெயர் ''கடவுள் கோவில், இறைவன் கோவில்'' , தமிழ் பெயர் கொண்ட அமெரிக்கர் சிவாய சுப்ரமுணிய சுவாமி (சுப்ரமணிய சுவாமி?? என்கிற குருதேவர் சிவாலய த்தில் பூஜை செய்து வருகிறார். அந்த ஆலயத்தின் பெயர்'' இறைவன்/கடவுள் கோயில் பத்து ஏக்கர் நிலத்தில் ப்ரம்மாண் டமாக உருப்பெற்று எத்தனையோ பக்தர்கள் (வெள்ளைக்காரர்கள் அதிகம்). கடவுள் பக்திக்கு நிறம், குலம் , ஜாதி, மதம் எல்லாம் கிடையாது. அதெல்லாம் மனிதன் தன்னை வேறுபடுத்திக் கொள்ள படைத்து அதால் படாத பாடு படுகிறான். பல உயிர்களும் பலி .
சுப்ரமுணிய சாமிக்கு ஒருநாள் ஒரு கனவு. இந்த இறைவன் கோயிலில் ஒரு ஸ்படிகலிங்கத்தை பிரதிஷ்டை செய்வது போல். மிக மகிழ்ந்து போனார் அவர். ஸ்படிக லிங்கத்திற்கு அமெரிக்காவில், ஹவாயில் எங்கே போவது?
ஹிந்து தர்மத்தை ஹிந்து தேசத்தில் கொச்சை படுத்தும் நம்மில் சிலர் மத்தியில் இப்படி ஒரு அதிசயம் எங்கோ கடல் கடந்து பசுபிக் மஹா சமுத்திர கரையில் ஹவாய் கிராமத்தில் கடவுள் கோவில் என்று ஹிந்து சனாதன தர்ம வழிபாட்டை ஒரு அமெரிக்கர் தமிழை, சைவத்தை மனமார புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். அன்றாட ம் பூஜை செய்யப்பட்டு ஹோமங்கள் யாகங்கள் நடைபெற்று வருகிறது.
குருதேவர் கனவில் ஒருநாள் எதிர்காலத்தில் இறைவன் கோவிலில் மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் தீபத்தில் ஒளி வீசி ரக்ஷிப்பது போல் ஒளி வீசுகிறது. இதென்ன கனவு? அற்புதமான எண்ணமாக இருக்கிறதே!. பரம ஆனந்தம். கனவை அரும்பாடு பட்டு எப்படியாவது நனவாக்க வேண்டும்.
தன்னோடு பணியாற்றும் சக சன்யாசிகளோடு தனது கனவை பகிர்ந்து கொண்ட சுப்ரமுணிய சுவாமி, அவர்களும் ஏகோபித்து ஆதரவளிக்க இந்த ஸ்படிக ஸ்வயம்பு லிங்கம் சிருஷ்டி ஸ்திதி லய சக்தி கொண்ட அபூர்வ லிங்கமாக தெய்வமாக மண்ணையும் விண்ணையும் காக்கும் என்று கனவில் அறிவுறுத்தியது என்கிறார். எங்கே ஸ்படிக லிங்கம் கிடைக்கும்?
ஆகம சாஸ்திரத்தின் படி, சிவனை மண்ணினால், கல்லால், பசுஞ்சாணத்தால், மரத்தால், வெண்கலத்தால், கருப்பு கல்லினால், பளிங்கினால், இயற்கையான ஸ்படிகத்தால் வழிபடலாம். விடங்க லிங்கம். ஏற்கனவே அந்த கோயிலில் கிரானைட் நடராஜர் சிலை இருந்தது.
குருநாதர் கண்ணாடி, பளிங்கு, குவார்ட்ஸ் பொருள்கள் விற்கும் ஒரு கடைக்கு சென்றார். அங்கே ஒரு பெண்மணி பொறுப்பில் உள்ளவரிடம் தனது மனத்தில் தோன்றிய எண்ணத்தை சொல்கிறார். ஸ்படிக லிங்கம் எங்கே கிடைக்கும்? எப்டியாவது வாங்கித் தரமுடியுமா?''
அல்மிட்ரா ஜியான் என்ற அந்த கடைக்காரப் பெண் கிரிஸ்டல், பளிங்கு, கண்ணாடி பொருள்கள் வியாபா ரத்தில் ஈடுபடுபவள். சைவ சித்தாந்த தேவாலயம் பற்று கொண்டவள். அவர் விசாரித்த சிவலிங்கம் அவளிடம் இல்லை. அவளுக்கு அது பற்றி விவரங்கள் தெரியாது.
''இந்த மாதிரி ஸ்படிகமோ பளிங்கு சிலையோ என்னிடம் இல்லையே'' மற்ற வியாபாரிகள் சிலரிடம் விசாரித்து கண்டிப்பாக உங்களுக்கு சொல்கிறேன் '' எங்கெல்லாமோ தேடியும் அவளுக்கு சரியான தகவல் ஒன்றும் கிடைக்க வில்லை. சில வாரங்கள் ஓடிவிட்டது.
ஒருநாள் இரவு அல் மிட்ரா ஒரு அதிசய கனவு கண்டாள் அதில் ''அவள் எங்கோ அர்கான்சாஸ் என்னும் நகரத்துக்கு செல்கிறாள். பாதை எங்கெல்லாமோ சுற்றி வளைத்து அவளை இழுத்துக் கொண்டு போகிறது. ஒரு இடத்தில் ஜேம்ஸ் கோல்மன் கண்ணில் படுகிறான். அவனிடம் தான் தேடிவரும் ஸ்படிக லிங்கம் கிடைக்குமா என்று கேட்கிறாள்.அவனுக்கு ஸ்படிக லிங்கம் தெரியாது. ஒரு விசித்திர வஸ்து இயற்கையாகவே அவள் சொல்வது போலவே எனக்கு கிடைத்தது. அதை என்ன செய்வது என்று தெரியாமல் வைத்திருக்கிறேன். வா காட்டுகிறேன் வேண்டுமானால் தருகிறேன் என்கிறான்.''.. கனவு கலைகிறது.
மறுநாள் எப்போது விடியும் என்று காத்திருந்து இறைவன் கோவிலுக்கு ஓடுகிறாள் அல்மிட்ரா . அங்கே சில மணி நேரம் காத்திருந்த பின் சுப்ரமணிய சுவாமியை சந்திக்கிறாள்.
''உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும்''
''என்ன சொல்லும்மா''
''சில தினங்களுக்கு முன்பு என்னை தேடி வந்தீர்களே. ஒரு குவார்ட்ஸ் பளிங்கு கிரிஸ்டல் லிங்கம் கிடைக்குமா என்று கேட்டீர்களே.?''
''ஆம் ஞாபகம் இருக்கிறது. கிடைத்துவிட்டதா? எங்கே?
''என் கனவிலும் நேற்று இரவு ஒரு பெரிய ஸ்படிக லிங்கம் தோன்றியது. அது எங்கே இருக்கிறது என்றும் எப்படி போவது என்றும் ஏதோ வழி காட்டியது. இப்போதே நான் அர்கான்சாஸ் மாநிலம் புறப்படப்
போகிறேன். அந்த ஊருக்கு போய் வர எனக்கு ஆகாய விமான டிக்கெட் வாங்கித்தருவீர்களா? அங்கே தான் நாம் தேடும் ஸ்படிக லிங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை வாங்கி உங்களிடம் கொண்டு வருகிறேன்.''
''சில தினங்களுக்கு முன்பு என்னை தேடி வந்தீர்களே. ஒரு குவார்ட்ஸ் பளிங்கு கிரிஸ்டல் லிங்கம் கிடைக்குமா என்று கேட்டீர்களே.?''
''ஆம் ஞாபகம் இருக்கிறது. கிடைத்துவிட்டதா? எங்கே?
''என் கனவிலும் நேற்று இரவு ஒரு பெரிய ஸ்படிக லிங்கம் தோன்றியது. அது எங்கே இருக்கிறது என்றும் எப்படி போவது என்றும் ஏதோ வழி காட்டியது. இப்போதே நான் அர்கான்சாஸ் மாநிலம் புறப்படப்
போகிறேன். அந்த ஊருக்கு போய் வர எனக்கு ஆகாய விமான டிக்கெட் வாங்கித்தருவீர்களா? அங்கே தான் நாம் தேடும் ஸ்படிக லிங்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை வாங்கி உங்களிடம் கொண்டு வருகிறேன்.''
குருநாதர் முன் பின் தெரியாத அந்நியருக்கு இதுவரை டிக்கெட் வாங்கி தந்ததில்லை. நம்பி பணமும் கொடுத்ததில்லை. அவ்வளவு பெரிய தொகையும் கைவசம் இல்லை.
''எப்படி தனக்கு கனவில் தோன்றிய ஸ்படிக லிங்கம் இவள் கனவிலும் தோன்றி யுள்ளது. எங்கிருக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறதே. எனக்காக அதை கொண்டு வருகிறேன் என்கிறாளே . மகாதேவா. ''
ஓரிரு நாட்களில் குருநாதர் விமான டிக்கெட் கைச்செலவுக்கு, ஸ்படிக லிங்கம் வாங்க பணம் எல்லாம் நம்பி அவளிடம் கொடுத்தார்.
அல்மிட்ரா அர்கன்சாஸ் போனதில்லை. அங்கே நிலக்கரி குவார்ட்ஸ் சுரங்க ஆசாமிகள் வியாபாரிகளை தெரியாது. ஆனால் கனவு சரியாக அடையாளம் காட்டியதே!
1987 ஜூலை மாதம் அல்மிட்ரா ஜியான் என்ற அந்த பெண் அர்கான்சாஸ் ஊருக்கு வருகிறாள்.
அர்கன்சாஸில் இறங்கி பல பேர்களை விசாரித்து சில நாளில் ஜேம்ஸ் கோல்மன் பற்றி தெரிந்து கொண்டு அவனிடம் சென்றாள்.
அர்கன்சாஸில் இறங்கி பல பேர்களை விசாரித்து சில நாளில் ஜேம்ஸ் கோல்மன் பற்றி தெரிந்து கொண்டு அவனிடம் சென்றாள்.
கோல்மன் ஆச்சர்யப்படுகிறான். தான் அதிசயமாக கண்டுபிடித்த குவார்ட்ஸ் லிங்கத்துக்கு டிமாண்ட் வந்துவிட்டதா?
ஜீப்பில் அவளை ஏற்றிக்கொண்டு நிலக்கரி சுரங்கத்துக்கு அழைத்து சென்றான் கோல்மன். காட்டு வழி பாதையில் தனியாக ஒரு உயரமான மர வேலி போட்ட தொழிற் சாலைக்குள் அழைத்து சென்றான். உள்ளே ஒரு இடத்தில் ஒரு பெரிய ஷெட். . அதில் மரப்பெ ட்டிகள் பார்சல் செய்யப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு பெரிய மர பெட்டியிடம் அழைத்துப் போய் அதை திறந்தான்.
அதன் உள்ளே, நிறைய மெத்து மெத்தென் று கனமான கம்பளங்கள், கோணிகள் சுற்றி கயிற்றினால் இருகக்கட்டிய ஒரு வஸ்து. பொறுமையாக ஜாக்கிரதையாக எல்லாவற் றையும் பிரித்தான். ஸ்படிக லிங்கம் கண்ணை பறித்தது. ஆறு பட்டை, 300 கிலோ எடை. மூன்றரை அடி உயரம். பருமன்.
வியாபாரம் படிந்து, ஸ்படிகலிங்கத்தை ஹவாய்க்கு கொண்டுவந்து விட்டாள் அல்மிட்ரா. குருநாதரிடம் சேர்ப்பித்து விட்டாகிவிட்டது.
நண்பர்களே, தற்போதைக்கு ஹவாய் இறைவன் கோவிலில் ஒரு இடத்தில் ஸ்படிக லிங்கம் வைக்கப்பட்டு விரைவில் ஒரு பெரிய தனி கோவில் தயாராகி பக்தர் களுக்கு உலகத்திலேயே பெரிய ஸ்படிக லிங்க மஹாதேவர் காட்சி தருவார்.
பெரிய 16 டன் எடையுள்ள கருப்பு ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கிய நந்தி தயாராகிவிட்டதாம். அந்த புதிய சிவன் கோவிலில் கார்த்திகேயன், கணேசர், சிவனின் 108 தாண்டவ சிலைகள், 16 அங்குல உயர பஞ்சலோக சிலைகள் எல்லாம் பிரதிஷ்டை செய்யப்போகிறார்கள்.
பெரிய 16 டன் எடையுள்ள கருப்பு ஒற்றை கிரானைட் கல்லில் செதுக்கிய நந்தி தயாராகிவிட்டதாம். அந்த புதிய சிவன் கோவிலில் கார்த்திகேயன், கணேசர், சிவனின் 108 தாண்டவ சிலைகள், 16 அங்குல உயர பஞ்சலோக சிலைகள் எல்லாம் பிரதிஷ்டை செய்யப்போகிறார்கள்.
ஒரு சிறு குளம் தயாராகி அதன் கரையில் பஞ்சலோகத்தில் நர்த்தனமாடும் ஞான சம்பந்தரையும் வழிபடலாம். கொரோனா முடிந்ததும் ஹவாய் செல்ல விமானத்தில் பறக்க தயாராகுங்கள்.
ஒரு சின்ன விஷயத்தோடு முடிக்கிறேன்.
ஒரு சின்ன விஷயத்தோடு முடிக்கிறேன்.
ஸ்படிகம் எப்படி உண்டாகிறது தெரியுமா? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் புதைந்து போன நீர், பாறைகளாக உருமாறி இருக்கும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்குகள், தூசிகள், கம்பிகள் மற்றும் உடைசல்கள் இல்லாத தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் பட்டை தீட்டி தயாரிக்கலாம். உருண்டையாக தயாரிக்கப் பட்ட ஸ்படிகத்தில் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம்.
இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சி யான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். என்னிடம் காஞ்சி மடத்தில் எனக்கு உபதேசித் துக் கொடுத்த ஸ்படிக மாலை ஒன்று இருக்கிறது.
ஸ்படிகப் பாறைகள் ஆறு மற்றும் ஏழு பட்டை கள் கொண்ட தூண்கள், குச்சிகள் போல பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி , ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்து வதும் உண்டு.
இப்படி 6 பட்டை கொண்ட ஸ்படிக ஸ்வயம்பு தான் மேலே சொன்ன ஹவாய் மஹாதேவர். சிவன் அபிஷேகப்
பிரியர் அபிஷேகம் குளிர்ந்த ஜலத்தால் தான். வாலாஜாபாத் அருகே மட்டுமே வெந்நீரில் அபிஷேகம் செய்யப்படுகிற சிவனை பார்த்தேன்.
குளிர்ந்த ஜலமே உறைந்து கல்லாகி அதில் சிவனே உருவானால் எவ்வளவு குளிர்ச்சி. எவ்வளவு காருண்யம் நமக்கு கிடைக்கும். இந்தியாவில் நிறைய கோவில்களில் ஸ்படிக லிங்கங்கள் பூஜை செய்யப்பட்டு தரிசனம் செயகிறோம். ஆனால் மூன்றரை அடி உயர ஸ்படிக லிங்கம்...... இது தான் நான் முதல் முறையாக எண்பத்தி ரெண்டு வருஷங்களில் கேள்விப்படுவது. ஸ்வயம்புவாகி பூமியில் கிடைத்த லிங்கத்தை படத்தில் பார்த்து வணங்கினேன்.
No comments:
Post a Comment