ராமகீதை 2 -- நங்கநல்லூர் J K SIVAN --எழுத்தச்சன்.
ஸ்ரீ ராமன் லட்சுமணனுக்கு மலையாளத்தில் உபதேசிக்கும் இந்த ராமகீதையை ஒரு அபூர்வ மலையாள கவிஞர் ஸ்ரீ துஞ்சத்து எழுத்தச்சன் கேட்டு அனுபவித்து நமக்கு சொல்கிறாரே, நாமும் பயன்பெறுவோம்.
Yekan advayan paran avyayan jaganmayan,
Yogesan ajan akhiladaran niradharan,
Nithya Sathya Jnana aadhi lakshanan , brahmathmakan,
Budhyupadhikalil verittavan mayamayan,
Jnanam kondupagamyanyoginaam yekathmanam,
Jnanam acharya sasthrougha upadesa ikhya jnanam,
Aathmanorevam jeeva parayor moola vidhyaa,
Aathmani karya karanangalum koodi chernnu ,
Layicheedumbol ullor avathayallo mukthi,
Layathodasu verittiruppathu athmavonne.
லக்ஷ்மணா, மேலும் சொல்வேன் கேள்.
யார் தனித்திருப்பவனோ, எவன் இரண்டற் றவனோ, எவன் தெய்வீகமான பரமனோ, எவன் எந்த மாறுதலும் இல்லாதவனோ, எவன் எங்கும் நிறைந்தவனோ, எவன் யோகேஸ்வரனோ, எவன் பிறவி யற்றவனோ, எவன் இந்த அண்டத்தையே தாங்குபவனோ, எவன் எந்த பற்றுமில்லாத வனோ, ஸாஸ்வதன் , சத்தியத்தின் உருவான வன், பிரம்மத்தின் ஆத்மனோ, புத்தி போன்ற ஞானேந்திரியங்களில் கட்டுப் படாதவனோ, மாயையில் ஈடுபடாத மஹா மாயனோ, எவனை பரிசுத்த ஞானத்தால் அறியமுடியுமோ, எவனை ஞானிகள் மட்டுமோ அறிவார்களோ , எவன் அவர்கள் ஆத்மாவோடு இணைந்தவனோ, எவனை ஞானிகள், ஆசார்ய புருஷர்கள் உணர்வார்களோ, எவனை சாஸ்திரங்கள் வடிகட்டி காட்டுகிறதோ, எது ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை உணர்த்துகிறதோ, அவனே , அதுவே உன்னுள் இருக்கும் ஆதி காரண ஞானத்தை அறிந்துகொள்ள உதவும். அப்படி அதோடு ஐக்யமாவது தான் மோக்ஷம் . இந்த மோக்ஷ ஞானத் திலிருந்து தனித்து ஸ்வயமாக சாட்சியாக நிற்பது அந்த ஆத்மா ஒன்றே.
Jnana vijnana vairagyathodu sahithamaam,
Anandamayitulla kaivalya swaroopam
Ithulla vanname paravaanum itharivanum,
Ullam nallunarvorilla aarum jagathingal,
Madbhakthi illathavarkku yethrayum durlabham kel,
Madbhakthi kondu thanne kaivalyam varum thanum,
Nethram mundennakilum kanmathinnundu pani ,
Rathriyil thande padam deepamundennakile ,
Nerulla vazhiyarinjeetaavitha vanname,
Sri Rama bhakthiyundakile kanai varu.
லக்ஷ்மணா, இந்த ஞான விஞ்ஞான ஆத்ம விசாரம் ஒரு வித இனம் புரியாத தேவானந்தத்தை தரும். பகவானின் கைவல்ய ஸ்வரூபத்தை இந்த ஆத்ம விசாரம் ஒன்றே தரும். பற்று அகன்றால் தானே பற்றற்றவனைப் பற்ற முடியும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். எத்தனை தரம் சொன்னாலும் எழுதிக்காட்டினா லும் சர்க்கரையின் இனிப்பு அதை ஒரு துளி நாக்கில் தடவினால் தான் புரியும், தெரியும். அதுபோல தான் இந்த ஆத்ம விசாரம். ஈடுபடுப வனுக்கு மட்டுமே அதன் ருசி அனுபவிக்க இயலும்.
''லக்ஷ்மணா, என்னை பக்தியோடு நெருங்காதவனுக்கு முக்தி மோக்ஷம் கிடைக்க வழியே இல்லை. ;
ராமனின் பெயரே தாரக ராமன். பவசாகரத்தை கடக்க உதவுபவன். இரவில் கண்ணிருந்தால் மட்டும் போதாது பயண உதவிக்கு தீபமும் வேண்டும் அல்லவா? ஆத்ம ஞானம் தவிர என் மீது பக்தியும் கொண்டவன் தான் உய்வான் .இது தான் முக்தி அடையும் பாதை என்று கோடி காட்டினால் போதாது. என் மீது தூய்மையான பக்தி இருப்பவனே அதை அடைவான்.
Bhakthannu nannai prakasikkum atmavu noonam,
Bhathikku kanaum yenthennu kettalum nee,
Mad bhakthamaraodulla nithya sangama mathum,
Mad bhakthanmare kanivode devikkunnathum,
Yekadasyadhi vruthanushtanangalum punar-
Akulamenniye sadichu kolkayum Adha,
Mal kadha pada sravanangal cheykayum mudhaa,
Mal guna namangale keerthichu kollugayum,
SAntham ithamengil varthikkum janangalkku oru antharam,
Varathu oru bhakthiyum undai varum.
Bhakthi vardhichal pinnemathonnum varenda,
Athillathauthamothamanmarai ullavar allo,
Bhkthi yukthannuvijnana Jnana vairagyangal ,
Sadhya sambhavicheedum mennal mukthiyum varum.
Mukthi margam thavaka prasnanu sara vassal,
Ukthamayathu ninakennale darikke nee ,
Vakthvyamalla noonan yethrayum guhyam mama,
Bhakthanmarkkozhinju upadesichidaruthallo ,
Bhakthan yennakil avan chodicheelennakilum,
Vakthavyam avanodu viswasam varikayaal,
Bhakthi viswasa shuddha yukthanaam marthyannithu,
Nithyamai padam cheygil ajnanam akannu pom ,
Bhakthi samyukthanmaaram yogeendramaarkku noonam,
Hastha samsthithayallo mukthiyennarinjalum.
லக்ஷ்மணா, உண்மையான பக்தனுடைய ஆத்மா எப்போதும் பிரகாசிக்கும். அதற்கு காரணம், அவன் எந்நேரமும் என் பக்தர்களோடு மட்டுமே சத் சங்கத்தில் ஈடுபடுபவன். என் பக்தர்களுக்கு சேவை செய்வதும், ஏகாதசி விரதங்கள் போன்றவற்றை அவன் அனுஷ்டிப் பதும் காரணமாகும். துன்பம் அதனால் விலகும். விடாமல் தொடர்ந்து அனுஷ்டிப்பதில் ஒரு சுகம் தெரியும். தியானமும் மற்ற நேரத்தில் அவனை ஆனந்தமயமாக்கும். ஹோமம் யாகம் செய்யும் பிராமணர்களுக்கு அதற்கான ஸாமக்ரியை களை நிறைய வழங்கி, அவர்களுக்கும் மற்ற பக்தர்களுக்கும் அன்ன தானம் அளிப்பது, புனித சாஸ்த்ர , புராணங்களை பாராயணம் பண்ணு வது, அதை சிரவணம் பண்ணுவது, எனது நாமங்களை உச்சரிப்பது, கேட்பது, பாடுவது, போன்ற தொடர் நிகழ்ச்சிகள் என் மேல் ஈடிணை யற்ற பக்தியை அதிகரிக்க செய்யும். இப்படி வாழ்க்கை முறை அமைத்துக் கொண்டவர்களே மனிதருள் மாணிக்கங்கள். முக்தி அடையும் ஸ்ரேஷ்டர்கள். முக்தி அடைய வழி கேட்டாய் என்பதால் இதை விளக்கினேன். புரிந்துகொள். எதையாவது யாரிடமேனும் உபதேசமாகப் பெற்றால் அது புனிதம் என்பதால் பக்தி பூர்வமானவர்கள் அன்றி மற்றவரிடம் தெரிவிக்கலாகாது.
இதை உணர்ந்த பெரியோர்கள் அதனால் தான் ''உபதேச ரஹஸ்யம்' ' எனப் பெயரிட்டார்கள். இப்படிச் செய்வதால் அதன் புனிதம் கெட வழியில்லை.
இதை அறிபவன், பக்தியோடு, நம்பிக்கையோடு, ஆர்வமோடு படித்தால், அஞ்ஞானம் அவனை விட்டு அகலும். இதை விடாமல் பின்பற்று பவர் கள் ஞானிகள், யோகிகள். அவர்களுக்கு முக்தி, மோக்ஷம் கைக்கெட்டும் தூரத்திலேயே கிடைக்கும்'
இது தான் ஸ்ரீ ராமன் லட்சுமணனுக்கு உபதேசித் த எளிய ராம கீதை. .
No comments:
Post a Comment