Thursday, March 11, 2021

VAIRAGYA SATHAKAM


 வைராக்ய சதகம்  - நங்கநல்லூர்   J K SIVAN 

ராஜா பர்த்ருஹரி 

तुङ्गं वेश्म सुताः सतामभिमताः संख्यातिगाः सम्पदः
 कल्याणी दयिता वयश्च नवमित्यज्ञानमूढो जनः ।
मत्वा विश्वमनश्वरं निविशते संसारकारागृहे
 संदृश्य क्षणभंगुरं तदखिलं धन्यस्तु संन्यस्यति ॥ 20॥  

துங்க³ம் வேஶ்ம ஸுதா: ஸதாமபி⁴மதா: ஸங்க்²யாதிகா:³ ஸம்பத:³
கல்யாணீ த³யிதா வயஶ்ச நவமித்யஜ்ஞாநமூடோ⁴ ஜந: ।
மத்வா விஶ்வமநஶ்வரம் நிவிஶதே ஸம்ஸாரகாராக்³ருʼஹே
ஸந்த்³ருʼஶ்ய க்ஷணப⁴ங்கு³ரம் தத³கி²லம் த⁴ந்யஸ்து ஸம்ந்யஸ்யதி ॥ 20 ॥

அண்ணாந்து பார்த்தால்  கழுத்தை வலிக்கும் உயர மாளிகைகள், கூட கோபுரங்கள்,  ராஜாவின் பிள்ளைகளை ஆஹா  ஓஹோ என்று  எல்லோரும் புகழ்கிறார்கள்,  அவர்கள் செல்வத்திலும்  கல்வியிலும்  சிறந்தவர் களாம்.  ராஜாவுக்கு  தர்ம தானங்கள்  தளராமல் புரியும்  அழகிய ராணி--  இதெல்லாம்  சாஸ்வதம் என்று எந்த மடையன் சொன்னது? மறுபடியும்  உள்ளேயும் வெளியேயுமாக  வாசம் செய்யும்  உலக சிறைச்சாலை. மீண்டும் மீண்டும்   பிறப்பு இறப்பு மாறி மாறி  வரும்   வாழ்க்கை. விடிவு எப்போது?   புத்திசாலி இதைத் தெரிந்து கொண்டவன்.  இதிலிருந்து விடுபட்டவன்.   உலக மாயா  ஈர்ப்புக்கு மசியாதவன். வைராக்யன் அவன் தான். 

दीना दीनमुखैः सदैव शिशुकैराकृष्टजीर्णाम्बरा
क्रोशद्भिः क्षुधितैर्निरन्नविधुरा दृश्या न चेद्गेहिनी ।
याञ्चाभङ्गभयेन गद्गदगलत्त्रुट्यद्विलीनाक्षरं
को देहीति वदेत्स्वदग्धजठरस्यार्थे मनस्वी पुमान् ॥ २१॥

தீ³நா தீ³நமுகை:² ஸதை³வ ஶிஶுகைராக்ருʼஷ்டஜீர்ணாம்ப³ரா
க்ரோஶத்³பி:⁴ க்ஷுதி⁴தைர்நிரந்நவிது⁴ரா த்³ருʼஶ்யா ந சேத்³கே³ஹிநீ ।
யாஞ்சாப⁴ங்க³ப⁴யேந க³த்³க³த³க³லத்த்ருட்யத்³விலீநாக்ஷரம்
கோ தே³ஹீதி வதே³த்ஸ்வத³க்³த⁴ஜட²ரஸ்யார்தே² மநஸ்வீ புமாந் ॥ 21 ॥

இதோ ஒரு காட்சி.  வறுமையின்  அவதாரம், துன்பம் சோகம்  முகத்தின் ஒவ்வொரு கோட்டிலும் மஹா பாரதமாக தெரிகிறது.  பலநாள்  பட்டினி அவள். கிழிந்த புடவை, எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்க முடியாத ஆடைகளுடன்  தவிக்கிறாள் .அவளைச் சுற்றி, அந்த  கிழிசல் புடவையைப் பிடித்துக்கொண்டு தொங்கியவாறு சில  அழும்  ஒன்றிரண்டு  குழந்தைகள்,  தலை எண்ணெய் கண்டதேயில்லை. பசி, முக மெல்லாம்   அழுதழுது கண்ணீர்க்  கரை, வாசலில் நிற்கிறாள் '' அம்மா பசிக்குது. சோறு போடுங்க''   அவள் குரல்  தீனமாக சக்தியின்றி  கேட்கிறது. அவள்  வியாதி கணவன் அருகே நின்று பார்க்கிறான். அவனுக்கு குரல் எழுப்ப சக்தியோ த்ராணியோ இல்லை. கையில் கம்பு ஊன்றி  அருகே நிற்கிறான்.  ஒருவேளை  அந்த வீட்டு அன்னபூரணி   இவளுக்கு  உணவு தரா விட்டால்..??.  வேண்டுகோளை செவி மடுக்கா விடில் .?   சே.. என்ன உலகமடா இது?

अभिमतमहामानग्रन्थिप्रभेदपटीयसी
गुरुतरगुणग्रामाम्भोजस्फुटोज्ज्वलचन्द्रिका ।
विपुलविलसल्लज्जावल्लीवितानकुठारिका
जठरपिठरी दुष्पूरेयं करोति विडम्बनम् ॥ २२॥

அபி⁴மதமஹாமாநக்³ரந்தி²ப்ரபே⁴த³படீயஸீ
கு³ருதரகு³ணக்³ராமாம்போ⁴ஜஸ்பு²டோஜ்ஜ்வலசந்த்³ரிகா ।
விபுலவிலஸல்லஜ்ஜாவல்லீவிதாநகுடா²ரிகா
ஜட²ரபிட²ரீ து³ஷ்பூரேயம் கரோதி விட³ம்ப³நம் ॥ 22 ॥

சுய கெளரவம், மரியாதை  என்ற  முடிச்சு அவிழ்க்க  தெரிந்த கெட்டிக்காரன் தான் வைராக்யன். .  நற்குணங்கள் எனும் தாமரை மலர்கள் மொட்டுகளை அவிழ்க்கும்  சந்திரன் தான் சந்தேகமே இல்லை.  கூரான அரிவாள் எப்படி புதர்கள், கொடிகள், செடிகளை வெட்டிக் கழிக்குமோ அது போல் என் வயிறு என்கிற  புற்று இருக்கிறதே  அது  எதை வேண்டுமானாலும்  வாங்கி உண்டு அழிக்கிறது.  அடேயப்பா அதை திருப்திசெய்ய அலைவதற்கே வாழ்நாள் போதாது. முடிவில்லாத  பசி.... பசி தாகம் தேவைகள் ஆசைகள்  வென்றவன் புனிதன்.
 
पुण्ये ग्रामे वने वा महति सितपटच्छन्नपालिं कपालिं
ह्यादाय न्यायगर्भद्विजहुतहुतभुग्धूमधूम्रोपकण्ठे ।
द्वारं द्वारं प्रविष्टो वरमुदरदरीपूरणाय क्षुधार्तो
मानी प्राणैः सनाथो न पुनरनुदिनं तुल्यकुल्येषु दीनः ॥ २३॥

 புண்யே க்³ராமே வநே வா மஹதி ஸிதபடச்ச²ந்நபாலிம் கபாலிம்
ஹ்யாதா³ய ந்யாயக³ர்ப⁴த்³விஜஹுதஹுதபு⁴க்³தூ⁴மதூ⁴ம்ரோபகண்டே² ।
த்³வாரம் த்³வாரம் ப்ரவிஷ்டோ வரமுத³ரத³ரீபூரணாய க்ஷுதா⁴ர்தோ
மாநீ ப்ராணை: ஸநாதோ² ந புநரநுதி³நம் துல்யகுல்யேஷு தீ³ந: ॥ 23 ॥

நானும் ஒரு பிச்சாண்டி தான்.  பிக்ஷாடனன்.  நான் அலைவது   சாதாரண வீடுகள் இருக்கும் பக்கம் இல்லை.   காட்டில். எவரும் காணாத இடங்களில்.  அரண்யத்தில் விலங்கு பறவைகளோடு. எங்கும் ரிஷிகளின் ஹோம புகை  கருப்பு சாயம்  பூசி இருக்கிறதே, அந்த பக்கம்.      கையில்  ஒரு திருவோடு.  இடையில்  எக்காலத்திலோ  வெண்மையைப் பார்த்த  கோவண வஸ்திரம்.  இந்த திருவோடு நிறைந்தால் என் வயிறு நிறையும் என்ற நிலையோ?  பசிக்குப் புசிக்கிறவன்.  எதையும்  உண்ண வேண்டும்  என  ருசி  தேடுபவன் அல்ல வைராக்யன் . 

गङ्गातरङ्गकणशीकरशीतलानि
विद्याधराध्युषितचारुशिलातलानि ।
स्थानानि किं हिमवतः प्रलयं गतानि
यत्सावमानपरपिण्डरता मनुष्याः ॥ २४॥

க³ங்கா³தரங்க³கணஶீகரஶீதலாநி
வித்³யாத⁴ராத்⁴யுஷிதசாருஶிலாதலாநி ।
ஸ்தா²நாநி கிம் ஹிமவத: ப்ரலயம் க³தாநி
யத்ஸாவமாநபரபிண்ட³ரதா மநுஷ்யா: ॥ 24 ॥

எதையும் தன் மடியில் அள்ளித்தரும் ஹிமாசல மலைகள், கங்கையின் ப்ரவாஹ அலைகள் உறைந்து போய்  பனியாக படர்ந்து பசி தாகம் எல்லாம் மறக்கச்செய்யும்  அற்புத  அமைதி நிறைந்த  சூழ்நிலை,   வளமையான இந்த  மலைச்சரிவு   பள்ளத்தாக்கில் தான் எத்தனை  மஹநீயர்கள்  தேவர்கள்,  கந்தர்வ கானம் பொழிந்துள் ளனர். எல்லாம் மறந்துவிட்டதா?   ஒன்றுமில்லாத  மனிதர்களின் தயவிலா  இனி  அடுத்த  வேளை  உணவிற்கு  கையேந்தி நின்று வாழவேண்டும்?  
தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...