Saturday, March 13, 2021

CHANAKYAN


 

சாணக்கியன் -- நங்கநல்லூர் J K SIVAN

அற்புதமான ராஜ தந்திரி கௌடில்யன். அவன் வாக்கு என்றும் பொய்த்ததில்லை. ஆயிரம் வருஷங்க ளுக்கு முன் எவ்வளவு ஆச்சர்யமாக மக்களை கணித்திருக்கி றான் இந்த சமஸ்க்ரித வல்லுனன் .!!

* வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது. நம்மிடம் பணம் இல்லையென்றால் நம்மை எவ்வாறெல்லாம் இழிவு படுத்துவார்கள் நம்மைச் சேர்ந்தவர் களே என்று நன்றாக உணர்ந்தவன் இவன்.

*பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப் படாமல் வாழ வேண்டும். ஆஹா எவ்வளவு அருமையான எல்லோருக்கும் தெரிந்த தத்துவம். ஆனால் நாம் அதை புரிந்து கொள்வ தில்லையே.

* பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்கு கிறது, பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது. இது நூற்றுக்கு ஆயிரம் சதவிகிதம் உண்மை. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. பெரிய ஆசாமிக்கு சின்ன புத்தி, பெரிய மாளிகை இருந்தாலும் சின்ன வீடு இருக்கிறது என்று தெரிந்தவன் சாணக்கியன்.

*வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்பு தன்மை போய்விடுமா? அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது. ஒரு பழமொழி உண்டே. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் வாலைக் குழைத்துக் கொண்டு.........

*சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது. மனத்தூய்மையை புறத்தில் எந்த பொருளாலும் பெறமுடியாது.
மனம் தான் ஆதார காரணம்.அதை சுத்தமாக வைத்துப்பார். பிறகு நீ ராஜா.

*கல்வி கற்கும் மாணவன் எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. தானாகவே வாட்ஸாப் யூட்யூப் இதெல்லாம் கற்றுக் கொடுக்கப் போகிறது என்று சாணக் கியன் காலத்தில் யாருக்குமே தெரியாதே.

* உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித் தனை பாராட்டுகிறோம். அவர்களைப் பற்றி வாய் கிழிய பேசினாலும் நமது பர்ஸை திறப்பதில்லை. ஏட்டுச்சுரைக் காய்கள் கறிக்கு உதவுமா?

*தேனீக்களைப் பாருங்கள். எக்காலத்திலும் அதன் குணம் மாறவில்லை. கஷ்டப்பட்டு தேடிய தேனை அது தனக்கென்று வைத்துக் கொண்டு உண்பதில்லை. யாரோ ஒருவன் ஒரு நாள் அவைகளை தீயிட்டு கொளுத்தி கொன்று விட்டு அவை சேர்த்து வைத்த தேன் அடையைத் தூக்கிக் கொண்டு போய் விற்று சாப்பிடு கிறான்.ல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களைச் செய்யுங் கள், நல்லவனை தேர்ந்தெடுங்கள்.

*தர்மம் சந்தோஷத்தைக் கொடுக்கும். கொடுப் பதில் கிடைக்கும் சுகம் பெறுவதில் இல்லை யப்பா.

*பணம் நம் ஒவ்வொருவரிடமும் நல்லவழி யில் சேர்ந்து இருந்தால் நாடும் வீடும் லக்ஷ்மிகரமாக சுபிக்ஷமாக இருக்கும். உலகமே வணங்கும். அப்படித்தான் அக்காலத்தில் இருந்தோம்.

* புலனடக்கம் ஒவ்வொருவரிடமும் இருந்தால் ஆஹா இந்த நாட்டின் கௌரவம் எப்படி மேன்மை பெரும். தலைவன் எப்படியோ அப்படித்தான் மக்கள் இருப்பார்கள்.... இருக்க வேண்டும். இது நம் கையில் இருக்கும் முடிவு எடுக்கும் சக்தி. ஓட்டுரிமை. வீணாக்காதீர்.
*பணிவு இருந்தால் புலனடக்க முடியும். மனக் கட்டுப்பாட்டில் தான் உடல் கட்டுப்பாடு இருக்கிறது. முதியோர் களுக்கு, பெரியவர்க ளுக்கு, மூத்தோருக்கு பணிவிடை செய்பவன் ஆசி பெறுவான். பெருமையடைவான்.

*பாமர ஜனங்களின் கோபம் எல்லாக் கோபங் களையும் விட மோசமானது. சக்தி வாய்ந்தது. அவர்களை சமாளிக்க எவனோ ஏதோ கொடுத்து மயக்குவான். மதி இழக்கக் கூடாது. தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு தவிக்கும் மீனாக இருந்தால் எப்படி முன்னேற முடியும்?. எவன் முன்னேற்றத்துக்கோ நாம் உதவவா இந்த உரிமை?

*ஒரு சக்கரம் மட்டும் இருந்தால் ஒரு வாகனத் தை இழுத்துச் செல்ல முடியாதே. குடை சாயும். வாழ்விற்கு அறிவும் செல்வமும் அவசியம்.
* நான் இதைச் செயகிறேன், அதைத் தருகி றேன் என்றால் நம்பாதே. விவாதத்திற்கும் ஆலோச னைக்கும் பிறகே எல்லாக் காரியங்களையும் ஆரம்பி. வானத்திலிருந்து நாம் கேட்பதெல்லாம், தேவையானவற்றை எல்லாம் காமதேனு நம் வீட்டில் கொட்டி நிரப்பாது. கலிகாலத்தில் உழைத்தால் மட்டும் தான் உயர்வும் ஊதிய மும் கிடைக்கும்.

*.அதிர்ஷ்டம் என்பது என்ன தெரியுமா? கடுமை யான உழைப்புக்கு கிடைக்கும் பரிசு. வெறும் வாயை மெல்லு பவன், உன்னைத் தேடி எல்லாம் வரும் என்பவனை நம்பி உன்னிடம் இருப்ப தையும் இழந்துவிடாதே. அதிர்ஷ்டம் என்பது நாம் எதிர்பார்த்து எங்கிருந்தோ வருவதில்லை.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...