Saturday, March 13, 2021

SURDAS


 ஸூர்தாஸ்   ---     நங்கநல்லூர்  J K  SIVAN



          24   நான்சொல்வதெல்லாம்உண்மை...''

''அம்மா  நீ  அப்படி என்னைப்  பார்க்காதே.    நான் பொய் சொல்லலே. உண்மை. உண்மையேதான். நான் வெண்ணை கிட்டேயே போகலே. எடுக்கவும் இல்லையே, சாப்பிடவும் இல்லே. எனக்கு  வெண்ணை  அவ்வளவா பிடிக்காது.''  

நீ  தான் பார்க்கறேயே. நான்  விடிஞ்சதும் இந்த பசு கும்பலோடு, கன்னுக் குட்டிகளோடு, மேச்சலுக்கு போயிடறேனே. காட்டிலே வெண்ணை ஏது? யார் கொடுப்பா?

அம்மா, நான் வெண்ணெய் சாப்பிடறதில்லேம் மா. பேசாமல் காட்டிலே போய் ஒரு மரத்தடியில் இதோ இந்த புல்லாங்குழலை ஊதிண்டு உட்காருகிறவன். பொழுது  சாஞ்சுதுன்னா  நேராக வீட்டுக்குதிரும்பறவன்.
அதுவும் இல்லாமல்  நானோ சின்னவன். மற்ற   பையன்களை விட  குள்ளமானவன். நான் எப்படி மேலே கட்டியிருக்கிற உறியிலே இருக்கிற வெண்ணெயை  எடுக்க முடியும்?

வேணுமின்னே  மற்ற பையன்கள்  தாங்கள்  செய்த காரியத்துக்கு  என் மேல் பழி போடறான்கள். அவன்கள்  சாப்பிட்டவெண்ணையை  என் முகத்திலே பூசுவானுங்க. பாவம்  உனக்கு  ஒண்ணுமே தெரியலே அம்மா. அவங்க பேச்சைஅப்படியே நம்பிடுறே.

நீ  என்னை பெத்த பிள்ளையாகவே  பாக்கறதில்லே. வேறே  யாரோ  பெத்த பிள்ளைன்னு  தானே பார்க்கறே. அதாலே  நான்  சொல்றது  எதையும் நீ  நம்பறதில்லே. அது தான் உன் கிட்டே பெரிய குறை.

இந்தா  பிடி. என் கிட்டே இருந்து இந்த உன்னுடைய மாடு மேய்க்கிற குச்சி, போர்வை எல்லாத்தையும் எடுத்துக்கோ. நீ சொல்றபடியெல்லாம்  இனிமேயும் நான் டான்ஸ் ஆடப்  போறதில்லை.
அம்மா நிச்சயம்  நான் வெண்ணையைத் தொடவே இல்லை.''

இந்தப்   பேச்சைக் கேட்டு யசோதா சிரித்தாள். எவ்வளவு நிஜம் போல இந்தப் பயல் பொய் சொல்லு கிறான். பண்றதை யெல்லாம் பண்ணி விட்டு ஒன்னும் தெரியாதவன்மாதிரி எப்படி  நாடாகமாடுகிறான் !!.. பலே வேஷக்காரன்.....

கிருஷ்ணனை அப்படியே வாரிஅணைத்தாள். அந்த அன்பை எழுத, ஸாரி, எனக்கு வார்த்தை வரல்லே சார்.என்கிட்டே  வார்த்தை இல்லை.    ஸூர்தாஸ்சொல்லறார். அவராலே  முடியும் நான் ஸூர்தாஸ் இல்லையே..

''O mother mine, I did not eat the butter
come dawn, with the herds,
you send me to the jungle,
o, mother mine, I did not eat the butter.
all day long with my flute in the jungles
at dusk do I return home.
but a child, younger than my friends
how could I reach up to the butter?
all the gopas are against me
on my face they wipe the butter,
you mother, are much too innocent,
you believe all their chatter.
there is a flaw in your behaviour,
you consider me not yours,
take you herd-stick and the blanket
I'll dance to your tune no longer.
Surdas, Yasoda then laughed,
and took the boy in her arms,
mother mine I did not eat the butter.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...