''கர்மா தான் காரணம்''
''மஹா பெரியவா, நான் எப்படி சொல்றதுன்னே தெரியல. நீங்க தொடாத, உங்களுக்குத் தோணாத விஷயம் எதுவுமே இல்லை. எல்லாத்தையுமே , ஆராய்ந்து சிந்திச்சு அது அதுக்கு ஒருஅர்த்தம் உங்களாலே மட்டும் தான் சொல்லமுடியும். ஆஹா அதெல்லாம் எவ்வளவு எளிமையா புரியறது. எவ்வளவு உன்னத விஷயங்கள், புதிதாக, அதீதமாக இருக்கு.
அதை யெல்லாம் நினைச்சுப் பார்க்கறேன். என் போன்ற உங்கள் பக்தர்களுக்கும் பரிமாறுகிறேன்.'
மஹா பெரியவா வாக்கு மெதுவா மிருதுவா காதில் ஒலிக்கிறது. கேளுங்கள்:
++
''துக்கம் யாருக்கு இல்லை? ஆனால் நமக்கு ஒரு குணம். ஒவ்வொரு இன்ப துன்பத்துக்கும் ஏதோ ஒன்றை அல்லது யாராவது ஒருத்தரை காரணம் காட்டுகிறோம் அல்லது நினைக்கிறோம். இந்த பழக்கத்தை விட்டு விட்டு எப்படி அதை அணுக வேண்டும்? ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைச் சொல்லுவா.
தாது வித்தியாசம் இருக்கு உடம்புலே அதனால் தான் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர்.
இங்கிலீஷ் டாக்டர், முதல்லே ஸ்கேன் எனக்கு தெரிஞ்ச இடத்திலே எடுத்துண்டு வா, லிவர், பிரெய்ன், ஸ்பைனல் கார்டு பிராப்ளமா என்று பார்க்கணும் என்பார்.
அதெல்லாம் இல்லை. இதுக்கு ஸைகலாஜிகல் காரணம் ஒன்று பேர் தெரியாமல் இருக்கு'' என்பார் மனோதத்வ நிபுணர்.
மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றில் இந்த வியாதி உண்டாயிற்று என்பார்.
ஜோசியர் இதெல்லாம் இல்லவே இல்லை. இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார் .
தர்ம சாஸ்திரம் அறிந்தவர்கள் எல்லாம் பூர்வ கர்ம பலனாகத்தான் இந்த வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
வியாதிக்கு மட்டுமில்லை. நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவித காரணங்கள் சொல்றோம்.
இங்கிலீஷ் டாக்டர், முதல்லே ஸ்கேன் எனக்கு தெரிஞ்ச இடத்திலே எடுத்துண்டு வா, லிவர், பிரெய்ன், ஸ்பைனல் கார்டு பிராப்ளமா என்று பார்க்கணும் என்பார்.
அதெல்லாம் இல்லை. இதுக்கு ஸைகலாஜிகல் காரணம் ஒன்று பேர் தெரியாமல் இருக்கு'' என்பார் மனோதத்வ நிபுணர்.
மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றில் இந்த வியாதி உண்டாயிற்று என்பார்.
ஜோசியர் இதெல்லாம் இல்லவே இல்லை. இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பார் .
தர்ம சாஸ்திரம் அறிந்தவர்கள் எல்லாம் பூர்வ கர்ம பலனாகத்தான் இந்த வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.
வியாதிக்கு மட்டுமில்லை. நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவித காரணங்கள் சொல்றோம்.
ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்காதா? நம் சுக துக்கங்களுக்கு கிரகங்கள்தான் காரணமா? ஜோதிடர் சொல்கிறபடி க்ரஹப்ரீதி செய்வதா அல்லது ஏதோ ஒரு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபச்சாரம் காரணமா?. அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா. நோய் நொடி என்றால் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோது தான் தீரும் என்று வெறுமே இருந்துவிட வேண்டியதுதானா. இப்படிக் குழப்பம் வருது..
இப்படிப் பல காரணங்களில் எது சாத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாகத் தான் தோன்றும். ஆதி காரணம் நம் கர்மம் தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது. மழை ஒன்றுதான். ஆனால் அதிலிருந்து எத்தனை விளைவுகள் உண்டாகிறது. பூமி முழுவதும் ஈரம் ஆகிறது. ஈசல் உண்டாகிறது. தவளை கத்துகிறது. அதைப் பிடிக்க பாம்பு. சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன. வேறு சிலது அதிக தண்ணியாலே, அழுகிப்போகிறது. இத்தனையும் ஒரே மழைக்குப் பல அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பல விதமான பிரச்சனைகள். பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவு சக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கே. இந்தப் பிரச்னைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause)இருந்தேயாக வேண்டும். There is no cause without effect and no effect without cause.
ஜகத் முழுதும் காரணம் - விளைவு, செயல் - பிரதிச் செயல் ( Action and Reaction) என்று ஒரு நியதிக்குள் தான் கட்டுண்டிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் ( Physics ) முழுதும் இந்த உண்மையைத் தான் விளக்குகிறது. ஜகம் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலி ருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித மனித வாழ்விலும் உண்டு.
நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி விளைவு உண்டு. இன்று நாம்அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்பே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள் தான். சில சமயங்களில் நாம் செய்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதாக சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப் படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்று கூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.
No comments:
Post a Comment