Monday, March 8, 2021

NATARAJA PATHTHU

 இப்படிச் செய்யலாமே. J K SIVAN 


  ''நடராஜ பத்து ''

நான்  எழுதிய  எல்லாமே  புத்தகமாகுமா?  தேவையில்லை.  எது  எல்லோரிடமும் அவசியமாக இருக்க வேண்டுமோ 
அந்த
 விஷயங்களை மட்டும் புத்தகமாக்கி  விலையில்லாமல்  அன்பளிப்பாக்கவேண்டும் என்பது தான்  எங்கள் திட்டம். இலவசமாக விலையிலில்லாமல் புத்தகம் எப்படி அச்சிடமுடியும், வெளியிடமுடியும்?  ஆகவே  அதற்கு குறைந்த ஒரு தொகையை நன்கொடையாக பெற்று  நன்கொடை மூலம் பெரும் தொகையை வங்கி மூலம்  அச்சிடுவோர்க்கு, வெளியிடுவோர்க்கு தரவேண்டிய தொகையை தருகிறோம்.  இது போல் இதுவரை  32 புத்தங்கங்கள் வெளியாகி  விநியோகமாகிறது.  இன்னும்   40 புத்தகங்கள் வரிசையில் உள்ளன.

சமீபத்திய  வெளியீடு   1000  பிரதிகள்.  ''நடராஜ பத்து''   30 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம்  ரூபாய் 20 நன்கொடை அளிப்போருக்கு  எவ்வளவு பிரதிகள் வேண்டுமோ அவ்வளவு தர இயலும்.   அற்புதமான நூல் இது.  முகநூல்  வாட்ஸாப்ப்பில் ஏற்கனவே பலமுறை  வெளியிட்டிருக்கிறேன். இதை நண்பர்கள் பெற்று என்ன செய்யலாம்?

*அருகில் உள்ள பள்ளி, பொது    நூலகங்களுக்கு இலவசமாக தரலாம்.

*மருத்துவ மனையில்  வரவேற்பறையில் வைத்தால்  நிர்வாகிகள் அங்கே காத்திருப்போர் நேரம் வீணாக்காமல் நல்ல விஷயங்களை அறிய வாய்ப்பு.  சில  நோயாளிகள் நோய் மறந்து, வலி மறந்து படிக்கவும் உதவும். இலவசமாக அந்த நிறுவனங்கள் அவர்களுக்கு வழங்க நாம் உதவலாம்.

*தமிழ் தெரிந்த குழந்தைகளுக்கு  பரிசாக கொடுக்கலாம்.  

*படிக்க விரும்பும்  மற்றவர்களுக்கு  தரலாம்.  எதையும்  இலவசமாக அளித்தால் அதன் மதிப்பீடு குறைகிறது என்பதால்  இருபது  ரூபாய்  நன்கொடை பெறலாம். இந்த தொகை  அந்த புத்தகம் மீண்டும் வெளியிட  வங்கியில் காத்திருக்கும்.  

ஒவ்வொருவரும் குறைந்தது  25 புத்தகங்களாக  விநியோகிக்கலாம்.  என் வீட்டில் அத்தனை பிரதிகளையும் வைத்துக்கொண்டு இடம் பிரச்னை குறைய உதவலாம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...