Monday, March 15, 2021

SURDAS

 ஸூர்தாஸ் -- நங்கநல்லூர் J K SIVAN


25. உன் மேலே சத்தியமா......

அம்மாவை இவ்வளவு பேச்சு பேசுகிறோமே . நாம் எப்படி வளர்ந்தோம் என்பது ஞாபகம் இருக்கிறதா? எப்படி சாப்பிட்டோம் தெரியுமா? எப்படியெல்லாம் படுத்தி இருக்கிறோம் என்று நினைவிருக்கிறதா? நாம் நன்றாக வளர வேண்டும் என்று பார்த்து பார்த்து புஷ்டியான ஆகாரத்தை தனது சக்திக்கு முடிந்தவரை வழங்கி நம்மை சாப்பிட வைத்து வளர்த்தவள் தாய் எனும் கடவுள்..அவள் இப்படி நம்மைச் சாப்பிடச் செய்தது நமக்குத் பிடிக்கவில்லை, அவளை உதைத்தோம், கடித்தோம், தள்ளினோம், பிராண்டினோம் . என்றோ ஒருநாள் அல்ல. ஒவ்வொருவேளை உணவு ஊட்டும்போதும். அதெல்லாம் சிரித்துக் கொண்டே பொறுத்துக்க கொண்டு நம் மீது ஆசையோடு, நாம் சாப்பிட வேண்டுமே என்ற கவலையோடு உணவு ஊட்டியவள் அம்மா எனும் தெய்வம்.
இதோ இந்த யசோதை படும் பாட்டை அறிந்து கொண்டு, தெரிந்துகொண்டு, அதில் கொஞ்ச மாவது நமதுஅம்மாக்கள் பட்ட அவஸ்தையை உணர்வோம். நம்மைவிட மிகவும் விஷம கொடுக்கு, முரட்டுப் பையன் அந்த கிருஷ்ணன்.

என்றாவது ஒரு நாளாவது அவன் தரையில் அமர்ந்து தட்டில் சாப்பிட்டவனா? ஹுஹும். அம்மா யசோதை மடியில் ஆடிக் கொண்டும் அசைந்து கொண்டும் ஓடுவான். இழுத்துப் பிடித்து மடியில் மறுபடியும் அமர்த்திக் கொள் வாள். ஒரு வாய் ரெண்டு வாய் சாதம் ஊட்டுவதற் குள் அவள் படும் பாடு... அப்பப்பா.. என்னால் சொல்லவோ எழுதவோ முடியாத ஒரு காரியம். பாதி உள்ளே போகும். பாதி துப்பி விடுவான். ஒவ்வொரு வேளையும் யசோதை புடவை யெல்லாம் பருப்பு சாத அபிஷேகம்..

எத்தனை கதை சொல்ல வேண்டும். எத்தனை மரம், செடி, காக்கை குருவி, சூரியன் சந்திரன் நக்ஷத்ரம் எல்லாம் காட்ட வேண்டும். ஆடவேண்டும். பாடவேண்டும்.

அவனுக்கு என்ன தோணுமோ? வாயிலிருந்து கொஞ்சம் சாதத்தை எடுத்து எதிரே அப்பா நந்த கோபன் வாயில் போடுவான். எதிரே நந்த கிராமம் கோபி எவள் வாயிலாவது கொஞ்சம். ஆஹா எவ்வளவு புண்யம் பண்ண ஆத்மாக்கள் அவர் கள். அதில் அவனுக்கு எத்தனை சந்தோஷம். காக்கும் கடவுள் அல்லவா? மற்றவர் சாப்பிட்டால் அத்தனை திருப்தி அந்த வள்ளலுக்கு. கொடுத்து வைத்தவர்கள் அவர்கள். கடவுள் கொடுத்த உணவை வாங்கிச் சாப்பிட்டவர்கள். நாம் கடவுளுக்கு உணவைக் காட்டிவிட்டு சாப்பிடுப வர்கள். பிரசாதம் என்கிறோம். அவர்கள் கடவுளே கொடுத்த சாதத்தை பிரசாதமாக பெற்றவர்கள்.

ஒரு கையில் எப்போதும் கொஞ்சம் வெண்ணை இருக்கும். அப்பப்போ நக்கி விழுங்குவான். ஒரு சட்டியில் கெட்டித் தயிர் அருகே இருக்கும். அதில் ஒரு கை துழாவிக் கொண்டிருக்கும். இப்படி அவனுக்குப் பாடிக் கொண்டே ஊட்டும் போது யசோதையின் சந்தோஷத்துக்கு மூன்று உலகைக் கொடுத்தாலும் ஈடாகாது.

ஒருநாள் அந்த சந்திரன் எனக்கு விளையாட வேணும் அப்போ தான் சாப்பிடுவேன்'' என்பானே . இல்லா விட்டால் தரையில் விழுந்து புரளுவான்.
''போ உன் மடியில் உட்கார மாட்டேன்'' என்று கோபிப்பான்.

''கிட்ட வராதே, தலை வாரி பின்ன விட மாட்டேன்''

''நான் உனக்கு குழந்தை இல்லை. நீ வேண்டாம் போ''
''அதோ அந்த அப்பாவுக்கு மட்டும் தான்நான் புள்ளை'' என்று நந்த கோபனை பிஞ்சுக் கை யால் சுட்டிக்காட்டு வான்.
''இல்லேடா கிருஷ்ணா. வா, உனக்கு ஒரு நல்ல கதை, ரகசியம் சொல்றேன் வா. சாப்பிடு.'' என்பாள் யசோதை
''என்ன ரகசியம் சொல்லு?''
''ஒரு அழகான பொண்ணை உனக்குக் கல்யா ணம் பண்ணி வைக்கப் போறேன்''
''சீக்கிரம் சாப்பிட்டாவா?''
''ஆமாம்டா கண்ணா''
''சரி எனக்கு கல்யாணம் பிடிக்கும்.
''அப்படின்னா சாப்பிடறியா''
''உன் மேலே சத்யம் ஒழுங்கா அப்படின்னா சாப்பிடறேன்'' என்று வாயை த் திறப்பான்''
ஸூர்தாசரை மிஞ்சிய கற்பனா சக்தி எனக்கு இல்லையே!!

Kanha eats in Yasoda's lap.
some he eats, some he drops,
as the ladies of Nandgaon watch,
some he eats and some he puts
in Nanda's mouth,
this joy is beyond recount.
some he eats, some gives to gopas,
butter in his hands, curd in doniyas.
The joy of Yasoda
the three worlds cannot account.
the meal is over, Kanha washes,
for Sur the left-overs count.

other, the moon I want as my toy.
I will roll on the floor,
Not come to your lap,
Nor have my hair-braid combed.
No longer will I be your child
I will only be Nand baba's boy.
Listen son, come to me
There's a secret from bal we can hide.
Hiding her smile, Yasoda said,
I'll give you a brand new bride.
Quick then, Mother, I swear by you
A wedding is what I'd like.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...