ஆயர்பாடி கண்ணன் - நங்கநல்லூர் J K SIVAN
SPB என்ற மனிதரை பற்றிய ஞாபகம் நேற்று இரவு அவர் பாடிய ''ஆயர்பாடி மாளிகையில்'' என்ற பாடலைக் கேட்டபோது கண்ணீராக வெளி வந்தது. கிருஷ்ணன் கொன்ற ராக்ஷஸர்களைவிட இந்த கொரோனா ராக்ஷஸன் சக்தி வாய்ந்த வனாக இருக்கிறானே. அவனை வெல்லத்தானே நான் ஊசி போட்டுக்கொண்டு படுத்துக் கொண் டி ருக்கிறேன். ஆயர்பாடி என்ற வார்த்தை என்னை மற்றவைகளை மறக்கச் செய்து விட்டது .
நான் வடக்கே ஆயர்பாடி போனதில்லை. இங்கே யே இருக்கும் ஒரு ஆயர்பாடிக்கு ரெண்டு மூன்று தடவை சென்றிருக்கிறேன். ரெண்டு மணி நேரத்தில் ஆயர்பாடி போகலாம். இங்கிருக்கும் கிருஷ்ணனும் கருப்பு தான். கிருஷ்ணன் என்றாலே கருப்பு தான். இருந்தாலும் அவன் பெயர் இங்கே கரி கிருஷ்ண பெருமாள். க்ரிஷ்ணன் நம் கடவுள். நம்மை கறுப்பர்கள் என்று தானே எல்லோரும் ஒருகாலத்தில் அழைத்தார்கள். நமது ஊரே ப்ளாக்டௌன் BLACKTOWN என்று இருந்து அப்புறம் ஜார்ஜ் டவுன் ஆக மாறி இன்னும் GT என்கிற வார்த்தை வழக்கத்தில் இருக்கிறதே.
இந்த ஆயர்பாடி சென்னையிலிருந்து ரொம்ப தூரம் கிடையாது. பொன்னேரிக்கு ரெண்டு மணி நேரத்தில் போய் சேர முடியும். சொந்த வண்டியில் போகும்போது இன்னும் கொஞ்சம் சீக்கிரமே போகலாம். பொன்னேரி என்பது ஜக ஜக என்று நெரிசல் உள்ள ஒரு இடம் தான். இருந்த போதிலும் எதிரே எந்த வண்டியிலும் மாட்டிக்கொள்ளாமல் ஒரு சிறு பாலம் அடியே நுழைந்து நீண்ட தெருவில் சற்று இடப்பக்கமாக போனால் ஒருவர் சாய்ந்து நின்று நமக்காகக் காத்துக் கொண்டி ருக்கிறார். அவர் பெயர் கரி கிருஷ்ண பெருமாள். சில கிலோ மீட்டர்கள் தான் பொன்னேரி யிலி ருந்து.
தலையிலே பால் சட்டி. வலது கையில் பசுக்களை விரட்டும் குச்சி. இடது கை இடுப்பின் மேல். நாலு கை சங்கு சக்ரம் எல்லாம் இங்கே கிடையாது. தரையில் தான் கால். மற்ற கோவில்களில் போல் பீடம் கிடையாது. வலது பக்கமாக சாய்ந்து நின்று கொண்டிருப்பவர். அந்த ஊர் பெயர் அழகாக இருக்கிறது. ஆய்ப் பாடி. திரு பட்டம் சேர்த்து திரு ஆய்ப்பாடி. சென்னைக்கு பக்கத்திலேயே இப்படி ஒரு ஆயர்பாடி.! கோப கோபியர்கள் பசு மேய்த்து வாழும் ஊர். ஆயர்பாடி என்றாலே கோபர்கள் மாதிரி பசு மேய்ப்பவர்கள் வாழும் ஊர். நான் சென்ற பொது சுற்றி முற்றி பார்த்தபோது பசு எதுவும் தென்படவில்லை, . ஒன்றிரண்டு எருமைகளும் தெருநாய்களும் தான் கண்ணில் பட்டது.
இந்த கோவிலை கட்டியவர் யார் என்ற வினாடி வினாவுக்கு விடை கரிகால் சோழன். ஆகவே பால் மாறாமல் பல நூற்றாண் டுகளுக்கு முன்பு, அல்லது வழக்கமாக சொல்வது போல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு கட்டிய கோவில் எனலாம். கிருஷ்ணனுக்கு கரி கிருஷ்ணன் என்ற பெயரில் பாதி கரிகால் சோழனுடையது. புரிகிறதா? புற்றிலிருந்து தோன்றியவர் என்று சொல்கி றார்கள். ஒரு பெரிய புற்று ஒன்று இருக்கிறது. இன்னும் கோவிலில் அதை பார்க்கலாம்.
மற்ற விஷ்ணு கோவிலில் இல்லாத ஒரு சிறப்பு இங்கு என்ன தெரியுமா?
இரு பக்கத்திலும் ஒருவர் என்று இல்லாமல் ஸ்ரீ தேவி பூதேவி இருவருமே அவருக்கு இடப் பக்கத்தில் நிற்கிறார்கள். இன்னொரு சங்கதி.ராம லக்ஷ்மணர்கள் எப்போதும் எங்கேயும் ஆளுக் கொரு வில் வைத்துக் கொண்டு நிற்பதை பார்த்தி ருக்கிறோம். இந்த கோவிலில் லக்ஷ்மணன் இரு கை கூப்பி ராமனை வணங்கி நிற்கிறார். பாரத்வாஜ மகரிஷி வழிபட்ட ஸ்தலம். தாயார் சௌந்தரவல்லி. இந்த ஒரு கோவிலில் தான் வருஷத்திற்கு ஒரு தரம் சிவனும் விஷ்ணுவும் சந்திக்கிறார்கள்.
பதினாறு கால் மண்டபம். வெளியே பெரிய ராஜ கோபுரம். ஆச்சர்யமாக கரி கிருஷ்ண பெருமாள் போலவே, எல்லா தூண்களுமே சாய்ந்து நிற்கிறது. விழுவது போல் கட்டியிருக்கிறார்கள். விழவே விழாது.
ஒரு தரம் போய் பார்க்க வேண்டியது தானே. மார்கழி ஸ்ரீ ஜெயந்தி என்ற விழா காலங்களுக்கு காத்துக்கொண்டு இருக்காமல் இப்போதெல் லாம் கோவில்கள் திறந்து தானே இருக்கிறது. ஒரு தொல்லையுமில்லாமல் கரி கிருஷ்ணனை முடிந்தபோது ஒரு முறையாவது கண்டிப்பாக தரிசியுங்கள்.
No comments:
Post a Comment