Tuesday, March 2, 2021

vairagya sathakam


வைராக்ய சதகம்       -   நங்கநல்லூர்  J   K  SIVAN
ராஜா  பர்த்ருஹரீ


आदित्यस्य गतागतैरहरहस्संक्षीयते जीवितं
व्यापारैर्बहुकार्यभारगुरुभि: कालोऽपि न ज्ञायते।
दृष्ट्वा जन्मजराविपत्तिमरणं त्रासश्च नोत्पद्यते
पीत्वा मोहमयीं प्रमादमदिरां उन्मत्तभूतं जगत् ॥

ஆதித்யஸ்ய கதா கதைரஹரஹ  ஸம்க்ஷீயதே ஜீவிதம் 
வ்யாபாரைர் பஹூ கார்ய பார குருபிஹ்  காலோபிண ஜிநாயதே 
திரிஷ்ட் வா  ஜென்ம  ஜராவிபத்தி மரணம் த்ராஸாஸ்ச   நோத்பத்யதே   
பீத்வா மோஹமயீம்  ப்ரமாத  மாதிராம் உன்மத்தபூதம் ஜகத்   (7)

ஒவ்வொரு  நாளும்  அதிகாலை சூரியன் எழுகிறான், சாயந்திரம் மறைகிறான். அது மாதிரியே  என் வாழ்விலும்  எழுச்சி,  வீழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக நான்  விடாமல் மரணத்தை நோக்கி செல்கிறேன். மக்கள்  எல்லோருமே உலக வாழ்க்கையில்  எதிலெல்லாமோ செயலில் ஈடுபட்டு,   சுமையில்  மூழ்கி, பொன்னான நேரம்  பாழாவதை உணரவில்லையே.  கண்ணுக்கு நேராக எத்தனை பிறப்பு, இறப்பு, முதுமை, வியாதி, அத்தனையும் பார்த்தும் இன்னும்  கொஞ்சம் கூட, ''ஐயோ இப்படி  வாழ்க்கை நிலையாமை உணராமல் இருக்கிறோமே'' என்று பயப்படவே இல்லையே . இந்த மாதிரி அலட்சியம்,  உண்மையை  உணராமை, ஏதோ குடிவெறியில் புத்தி இழந்து தடுமாறும் குடிகாரனாக அல்லவா  நம்மை  மாற்றிவிட்டது?.

ब्रह्मज्ञानविवेकनिर्मलधियः कुर्वन्त्यहो दुष्करं 
यन्मुञ्चन्त्युपभोगभाञ्ज्यपि धनान्येकान्ततो निःस्पृहाः ।
सम्प्राप्तान्न पुरा न सम्प्रति न च प्राप्तौ दृढप्रत्ययान्
 वाञ्छामात्रपरिग्रहानपि परं त्यक्तुं न शक्ता वयम् ॥ १३॥

ப்³ரஹ்மஜ்ஞாநவிவேகநிர்மலதி⁴ய: குர்வந்த்யஹோ து³ஷ்கரம்
யந்முஞ்சந்த்யுபபோ⁴க³பா⁴ஞ்ஜ்யபி த⁴நாந்யேகாந்ததோ நி:ஸ்ப்ருʼஹா: ।
ஸம்ப்ராப்தாந்ந புரா ந ஸம்ப்ரதி ந ச ப்ராப்தௌ த்³ருʼட⁴ப்ரத்யயாந்
வாஞ்சா²மாத்ரபரிக்³ரஹாநபி பரம் த்யக்தும் ந ஶக்தா வயம் ॥ 13 ॥

குளித்து,பட்டையாக  விபூதி  தரித்து, பஞ்சகச்சம் கட்டி கழுத்தில் ருத்ராக்ஷமணிந்து,  ஒரு இடத்தில் கண்மூடி உட்கார்ந்தால்  ஞானம் வந்துவிடாது.  உடலை,  அதன் விருப்பங்களை, வென்று, உள்ளத்தை ஒருமுகமாக்கி  இறைவனைத் தேடினால் கிடைப்பதை எளிதில் பெற இயலாது.  ஞானம் என்பதே எது தேவை, எது வேண்டாம் என்று பகுத்து உணர்வது. அதற்கு தான் புத்தியை பகவான் கொடுத்திருக்கிறான்.  கடினமான பயிற்சி வேண்டும்.  ஆசைகளைத்  தியாகம் செய்வது  சுலபமல்ல.  பழைய நினைவுகள் வாசனைகள் இழுக்கும்.  அதை ஓரம் கட்டி, ஒரேயடியாக வீட்டில் கரப்பாம்பூச்சியை ஒழிப்பதுபோல் இரக்கமின்றி அழிக்கவேண்டும். திருமூலர் அனுபவித்து தானே   ''ஆசை அறுமின்கள்'', ஆசைபட்டால் துன்பம் தான் மிஞ்சும்  ஆனந்தம் வேண்டுமானால்  ஆசையை விட்டால் தான் கிடைக்கும் என்று  பாடினார்.
 

धन्यानां गिरिकन्दरेषु वसतां ज्योतिः परं ध्यायतां
आनन्दाश्रुकणान्पिबन्ति शकुना निःशङ्कमङ्केशयाः ।
अस्माकं तु मनोरथोपरचितप्रासादवापीतट-
क्रीडाकाननकेलिकौतुकजुषामायुः परं क्षीयते ॥ १४॥

த⁴ந்யாநாம் கி³ரிகந்த³ரேஷு வஸதாம் ஜ்யோதி: பரம் த்⁴யாயதாம்
ஆநந்தா³ஶ்ருகணாந்பிப³ந்தி ஶகுநா நி:ஶங்கமங்கேஶயா: ।
அஸ்மாகம் து மநோரதோ²பரசிதப்ராஸாத³வாபீதட-
க்ரீடா³காநநகேலிகௌதுகஜுஷாமாயு: பரம் க்ஷீயதே ॥ 14 ॥

இந்த  சகவாசமே வேண்டாம்  என்று தானே  உலக வாழ்க்கையிலிருந்து  தனித்து  எங்கோ மலைக் குகை, காடுகளில் போய் தனியாக உட்கார்ந்து கொண்டார்கள்  நமது முன்னோர்கள், ரிஷிகள்.  தியானத்துக்கு இடம் ஒரு முக்கிய அம்சம்.

புத்தர்  லும்பினி வனத்தில்  இரவுபகல் அன்னாகாரமின்றி  ஞான ஒளியைத் தேடி பிடித்தார். புலி,  
 பாம்பு, 
பறவைகள் எல்லாம் மேலே வந்து  தைரியமாக உட்காரும். இவன் நம்மை துன்புறுத்தும் சாதாரண மனிதன் இல்லை என்று அவை நன்றாக தெரிந்தவை.  எத்தனை போட்டோக்களில் ரமணரைச்  சுற்றி மிருகங்கள், பறவைகள் பார்த்தோம்.  எவ்வளவு சந்தோஷம் அவற்றின் முகத்தில்.   அரண்மனையில்  அந்தப்புரத்தில்,  நந்தவனங்களில், தடாக கரைகளில்  கிடைத்தவையை விட எத்தனையோ மடங்கு  ஆனந்தம் தரும் அனுபவம் ஞானம் பெற்றால்  கிடைக்கிறதே

भिक्षाशनं तदपि नीरसमेकवारं
शय्या च भूः परिजनो निजदेहमात्रम् ।
वस्त्रं विशीर्णशतखण्डमयी च कन्था
हा हा तथापि विषया न परित्यजन्ति ॥ १५॥  

பி⁴க்ஷாஶநம் தத³பி நீரஸமேகவாரம்
ஶய்யா ச பூ:⁴ பரிஜநோ நிஜதே³ஹமாத்ரம் ।
வஸ்த்ரம் விஶீர்ணஶதக²ண்ட³மயீ ச கந்தா²
ஹா ஹா ததா²பி விஷயா ந பரித்யஜந்தி ॥ 15 ॥

உணவு எதற்கய்யா?  உடலை வாடாமல்,   உயிரைப்  பாதுகாக்க,  பெட்டகமாக உழைக்க,  மட்டும் தான்.   உடலை விட உள்ளே இருக்கும்  ஆத்மா தான் முக்கியம். அதற்கு உதவும் உபகரணம்  தான் இந்த உடல். இதற்கு தீனி போடுவதில்  எதற்கு ருசி?  கிடைப்பதே  பிக்ஷை, பிச்சை எடுத்தது ,  அடுத்த  வேளை  வரை அதை பாதுகாக்க.    அதில் எங்கே வந்தது ருசி?  கட்டாந்தரை தான்   பெரிய  சுகமான  படுக்கை, பதினாயிரம் ஒட்டு போட்ட கந்தல் தான் போர்வை.  ஒரு வேடிக்கை என்ன தெரியுமா, இவ்வளவு கட்டுப்பாட்டிலும்   ஐம்புலன்கள் ஒடுங்கவில்லை, அவ்வப்போது தலை தூக்கி என்னை திருப்தி படுத்து என்று பிடுங்குகிறதே!

தொடரும் 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...