Monday, March 1, 2021

SURDAS


 ஸுர்தாஸ்  --      J K  SIVAN 

20.  ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல....

''அப்பப்பா, இந்த கிருஷ்ணன் இருக்கிறானே அவனது செயல்களை, லீலைகளை, சொல்லி மாளாது.

''நான் இந்த பசுக்களை எல்லாம், கன்றுக் குட்டிகளோடு சேர்த்து ஜாக்கிரதையாக மேய்ச்சலுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டு ஜாக்கிரதையாக அழைத்துக் கொண்டு வருவேன்'' என்கிறானே ,  இந்த சிறு பயலால் இது முடியுமா?  என  எல்லா கோபர்களுக்கும் கோபியர்களுக்கும் சந்தேகம் தான். ஆனால் அங்கே காடுகளில் அவன் மாடு கன்றுகளை மட்டுமா மேய்த்தான் . எண்ணற்ற ராக்ஷஸர் களையும்  அல்லவோ கொன்று மற்ற கோபர் களையும், பசுக்களையும் காப்பாற்றினவன். ஒவ்வொருநாளும் அவனைப் பற்றிய செய்தி ஏதாவது வந்து கொண்டே தான் இருக்கும்.
ஒருமுறை நண்பர்  ISKCON ஸ்ரீனிவாசன் நாங்கள் நடத்திய  தாமோதர தீப விழாவில்   ''கண்ணன் மேய்த்தது ஒன்றிரண்டு பசுக்கள் அல்ல. ஒன்பது லக்ஷம் பசுக்கள். அத்தனையும் நந்தகோபன் சொத்து. அந்தக் காலத்தில் சொத்து மதிப்பு  பசுக்களின் எண்ணிக்கையை வைத்து தான். அதனாலேயே பெரும் தன வந்தனான நந்த கோபன் கோகுலத்தில் கோபர்களின் தலைவனாக  இருந்தவன்'' என்றார். .

இந்த கிருஷ்ணன் சாதுவாக நந்தகோபன் மகனாக கோகுலத்தில் இருப்பவன் மட்டும் இல்லை. ஒரு காலத்தில் கொடிய ராக்ஷசன், எண்ணற்ற வரங்கள் கொண்டு எவராலும் எந்த நிலையிலும் மரணம் நெருங்காத கொடிய வன் ஹிரண்ய கசிபுவை அவன் வரத்தின் படியே எவரும் எதிர்பார்க்காத வகையில் கொன்ற நரசிம்மன். கோகுல மெங்கே அஹோபிலம் எங்கே. அடேயப்பா உண்மை யிலே மலைக்கும் மடுவுக்கும் உள்ள சம்பந்தம்.

எனக்கு நினைவுக்கு வருகிறது. இன்னுமொரு மஹா சக்தி வாய்ந்த ராக்ஷஸ அரசன் மஹா பலி சக்கரவர்த்தி.  அவனது சக்தியால் மூன்று உலகங்களையும் தனது ஆளுமைக்குள் கொண்டு ஆண்டுவந்த அரசன்.

அவனது அதீத சக்தியில் பயந்த தேவர்களும் விண்ணோர்களும்   இந்த கிருஷ்ணன் எனும்  நாராயணனிடம் முறையிட வந்தபோது என்ன செய்தான் தெரியுமா?  ஒரு சிறு வாமனனாக - குறளனாக- வடிவெடுத்து மஹாபலியிடம் செல்கிறான். இந்த  வேடிக்கை உருவ  குள்ள பிராமணனை  மஹாபலி கேட்கிறான்:

''யாரப்பா நீ விசித்திரமாக இருக்கிறாய்?''
''ஆமாம் அரசே நான் விசித்ரமானவன் என்று எனக்கே அடிக்கடி தோன்றுவதுண்டு' என்று சிரித்தான் வாமனன்.
''இங்கே எதற்கு வந்தாய், மற்ற பிராமணர்கள் போல் நீயும் ஏதாவது யாசகம் கேட்க உத்தேசமா?''
''நீங்கள் தான் என்னை விசித்ரமானவன் என்கிறீர்களே, நான் விசித்திரமாக அல்லவோ உங்களிடம் யாசகம் கேட்க வேண்டும். கேட்கட்டுமா?'' 
''ஆஹா ,  நான் இல்லையென்று  சொல்லி,  இன்று யாருமே எதுவுமே பெறாமல் இங்கிருந்து போக முடியாது வாமனா. தாராளமாக நீ விரும்பியதை கேளப்பா''.
''நான் கேட்பதெல்லாம் வேறொன்றுமில்லை. என் சிறிய காலடி நீள அகலத்துக்கு உண்டான மண் மட்டுமே. மூன்றே மூன்று  காலடி  மண் மட்டும் தந்தால் அது ஒன்றே போதும். ''
'' பைத்தியமாக இருக்கிறாயே,  வெறும் மூன்றடி மண் கேட்கிறாயே,  வேறு நல்லதாக  பிரயோஜனமாக ஏதாவது கேள்  தாராளமாக தருகிறேன்.''
''இல்லை மஹாராஜா, உங்கள்  தாராளமானதை போற்றுகிறேன் எனக்கு  மூன்றடி மண் தந்தாலே போதும்.''
எங்கே  ஜல பாத்திரம்?. கொண்டுவாருங்கள், இவருக்கு மூன்றடி மண் தாரை வார்த்து கொடுக்கிறேன்.
அசுர குரு சுக்ராச்சாரியார் அந்த நேரத்தில் தடுக்கிறார். 
''மஹாபலி,   அவசரமாக வாக்கு கொடுக்கா தே.  வந்திருப்பவன் வாமனன் அல்ல, மஹா விஷ்ணு, வேண்டாம் இந்த விஷ பரிக்ஷை .  தானம் தராதே.   அவன் உன்னை அழித்திடு வான்''
''குருநாதா, இந்த மஹாபலி ஒரு தரம் வாக்க ளித் தால் மீறமாட்டான்''
ஜலபாத்ரத்தில் இருந்து நீர் தாரை வார்க்க முடியாமல் சுக்ராச்சாரியார் ஒரு சிறு வண்டாக மாறி தடை செய்ததை   வாமன விஷ்ணு அறிந்து ஒரு தர்ப்பை நுனியால் அந்த பாத்திரத்தில் ஜலம் சொட்டும் இடத்தில் செருக அது வண்டாக இருந்து உள்ளே அடைத்து கொண்டிருந்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண்ணுக்குள் பட்டு அவர் ஒரு கண் பார்வை இழந்தார் என்று ஒரு கதை உண்டு.

மூன்றடி மண் வரம் பெற்ற வாமனன் அடுத்த கணமே திருவிக்ரமனாய் உருவெடுத்து முதலடியால் மண், இரண்டாம் அடியால் விண் என மூவுலகும் அளந்து மூன்றாம் அடிக்கு இடமெங்கே என, மகாபலியின் சிரமே  அதுவாக, மகாபலியை  கீழே அழுத்தி அவன் பாதாளத்தில் மறைந்தான்.

கிருஷ்ணன்  காக்கும் கடவுள்.  மனிதர்கள் தேவர்களை மட்டுமா காப்பாற்றினான்?. விஷ்ணுவாக கருடன் மேல் பறந்து வந்து கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றியது நினைவிருக்க வேண்டாமா? ''ஆதிமூலமே''என்ற ஒரு குரல் போதுமே அவனுக்கு ஓடி வந்து உதவ.
வேதங்களும் புராணங்களும் கடலளவு சொல்கிறதே அவன் மஹிமையை.
கண்ணற்ற இந்த சூர்தாஸாகிய நான்   அப்படியே அவன் லீலைகளில் மயங்கிப்போய் அவன் திருவடிகளில் விழுந்து வணங்குகிறேன்.

There is no end to the deeds of Krishna:
true to his promise, he tended the cows in Gokula;
Lord of the gods and compassionate to his devotees,
he came as Nrisingha
and tore apart Hiranyakashipa.
When Bali spread his dominion
over the three worlds,
he begged three paces of land from him
to uphold the majesty of the gods,
and stepped over his entire domain:
here too he rescued the captive elephant.
Countless such deeds figure in the Vedas and the Puranas,
hearing which Suradasa
humbly bows before that Lord]

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...