சகல கலா வல்ல சாணக்கியன் வார்த்தைகள் - - நங்கநல்லூர் J K SIVAN --
* மனிதனுக்கு எத்தனையோ தரம் புகட்டினாலும் மண்டையில் ஏறாத பாடம் : ''இந்த உலகில் எதுவும் சாஸ்வதம் இல்லை"'.
* நமது சனாதன தர்மத்தின் சின்னம் எது? அஹிம்ஸை தான்'' ..
* ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஐந்து முக்கிய விஷயங்கள் அவன் கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறதே அவை என்ன தெரியுமா? ''அவனுக்கு எவ்வளவு வயது? என்ன வேளையில் ஈடுபடுவான்? அவனுடைய பொரு ருளாதார வசதி எப்படி இருக்கும்?, அவன் படிப்பு எந்த அளவு? அவன் மரணம் எப்போது?''
* இந்த உலகத்தை ஜெயிக்க ஆசைப்பட்டால் அது முடியும் . ஒரே ஒரு காரியத்தினால் தான் முடியும். மற்றவர்களை அவமரியாதையாக, தூஷணையாக பேசத் துடிக்கும் உன் நாக்கை அடக்குவதால். வள்ளுவர் அதனால் தானே ''நா காக்க'' என்கிறார்.
* உன் வீட்டை விட்டு வெளியேறி எங்கோ வெளிதேசம் செல்லும்போது எது எனக்கு அவசியமான துணைவன்? பணமா? இல்லை, உன் அறிவும் படிப்பும் தான். அதேபோல் வீட்டுக்குள் உன் மனைவிதான்உண்மையான நண்பன். நோயாளிக்கு மருந்து தான் நண்பன். நீ செய்த தர்ம காரியங்கள் தான் உன் மரணத்திற்குப் பின் உன் நண்பன்.''
*.ஒருவனை அப்படியே கொன்று எரிக்க எது இன்ஸ்டன்ட் நெருப்பு.? '' ரொம்ப ஆசையோடு இருந்தவர்களிடமிருந்து பிரிவு,
ரொம்ப ரொம்ப நெருங்கிய உறவினன் சொன்ன அவமானமான, அவமதிப்பாக வார்த்தைகள், தீர்க்க முடியாத கடன் சுமை, கொடுங்கோல் அரசனுக்கும், கெட்டவனாக எஜமானனுக்கும் சேவை செய்வது. ரொம்ப தீயவர்களின் நட்பு '' இவை போதும் ஒருவனை தீர்த்துக் கட்ட.''-
*வயோதிக காலத்தில் மனைவியின் மரணம், சகோதரர்கள், சகோதரிகளின் கையில் பண அதிகாரம், அன்றாட சோற்றுக்கு எவரிடமாவது கையேந்தி நிற்கும் நிலை. இது தான் நரகம், துக்கத்திற்கு காரணங்கள்.
*வயோதிக காலத்தில் மனைவியின் மரணம், சகோதரர்கள், சகோதரிகளின் கையில் பண அதிகாரம், அன்றாட சோற்றுக்கு எவரிடமாவது கையேந்தி நிற்கும் நிலை. இது தான் நரகம், துக்கத்திற்கு காரணங்கள்.
*வாழ்க்கை படித்து முன்னேற விரும்பும் மாணவன் இதைச் செய்ய கூடாது தெரியுமா? மனதில் காமம், குரோதம், லோபம்,
தன்னை சிங்காரித்துக்கொள்ள நினைப்பு, தேவையற்ற விழங்களில் பொழுது போக்கில் நேரம் செலவழிப்பது, அதிக தூக்கம் எல்லா விஷயங்களில் பெரியோர் சொல் மீறி, தான்தோன்றியாக எல்லை மீறி நடப்பது. இவை போதாதா?''
தன்னை சிங்காரித்துக்கொள்ள நினைப்பு, தேவையற்ற விழங்களில் பொழுது போக்கில் நேரம் செலவழிப்பது, அதிக தூக்கம் எல்லா விஷயங்களில் பெரியோர் சொல் மீறி, தான்தோன்றியாக எல்லை மீறி நடப்பது. இவை போதாதா?''
* பகவான் நமக்கு தந்த இந்த அழகிய உலகம் ஒரு கனிதரும் மரம். அது தரும் அற்புத சுவைமிக்க பழம் ரெண்டு. ஒன்று அழகான அளவான பேச்சு. ரெண்டாவது பேசுவதை மிருதுவாக பேசுவது. சத் சங்கம்''
* ரொம்ப ரொம்ப அவசியமான ஒரு பாடம் நாம் கற்க கௌடில்யன் எனும் சாணக்கியன் சொன்னதை டயரியில் குறித்து வைத்துக்கொண்டு அடிக்கடி பார்த்து அதன் படி நடப்போம். அது என்ன"? ''பாம்பிற்குப் பல்லில் விஷம். விஷப் பூச்சிக்கு அதன் தலையில் விஷம். தேளுக்கு அதன் வாலில் விஷம். கெட்ட குணம் படைத்த மனிதனுக்கு, அடேயப்பா, உடல் பூரா விஷம்''
தொடரும்
No comments:
Post a Comment