மாண்டூக்ய உபநிஷத் -- நங்கநல்லூர் J K SIVAN --
ராமாயணத்தில் மோக்ஷத்தை பற்றி பேசும்போது ராமன் ஹநுமானுக்கு ''நீ 108 உபநிஷதங்களில் முதலில் மாண்டூக்ய உபநிஷத் தெரிந்துகொள்'' என்று அறிவுரை தருவதாக வருகிறது.
இது ரிக் வேத சம்பந்தமா அல்லது அதர்வ வேத சம்பந்தமா என்பது நமக்கு அவசியம் இல்லை. மண்டூகம் என்றால் தவளை என்றும், குதிரைக் குளம்பு, மனதின் துக்கம் என்றும் அர்த்தம் சொல்கிறார்கள். 6ம் நூற்றாண்டில் கௌடபாதர் இதற்கு வியாக்கியானம் எழுதி இருக்கிறார். முதலில் தோன்றிய உபநிஷதங் களில் மாண்டூக்ய உபநிஷத் ஒன்று. இருப்பதற்குள் ரொம்ப சின்ன உபநிஷத் என்பதால் அதை எடுத்துக்கொண்டேன்.அத்வைத வேதாந்த நூல்களில் ஒன்று.
ॐ इत्येतदक्षरमिदꣳ सर्वं तस्योपव्याख्यानं
भूतं भवद् भविष्यदिति सर्वमोङ्कार एव
यच्चान्यत् त्रिकालातीतं तदप्योङ्कार एव ॥ १॥
ௐம் இத்யேதத³க்ஷரமித³ꣳ ஸர்வம் தஸ்யோபவ்யாக்²யாநம்
பூ⁴தம் ப⁴வத்³ ப⁴விஷ்யதி³தி ஸர்வமோங்கார ஏவ
யச்சாந்யத் த்ரிகாலாதீதம் தத³ப்யோங்கார ஏவ ॥ 1॥
ஓம் என்ற மந்திரத்தின் சக்தி நாம் பெரும்பாலும் அறிந்ததே. ஆனாலும் அந்த ஒலியின் பல்வேறு வடிவங்களும் அதிலிருந்து வரும் அதிர்வுகளைப் பற்றியும் விளக்கமாகத் தெரிந்து கொண்டு உச்சரித்தோமானால் அந்த மந்திரத்திற்கான முழு பயனையும் உங்களால் பெற முடியும். இதெல்லாம் வாழ்வில் நிகழ்ந்ததோ, நிகழ்கிறதோ, நிகழுமோ அதெல்லாம் ஓம் எனும் மந்திர சக்தியின் பலன். மூன்று நிலையில் நாம் வாழ்கிறோம், விழிப்பு, கனவு, தூக்கம்,, ஓம் எனும் சக்தி இம்மூன்றையும் கடந்தது.
ஓம் (A +U +M) '' என்னும் மந்திரம் ஓம். ஹவ்ம். அம் போன்ற மந்திர ஓசைகள் எங்கும் காற்றில் உலகில் பரவி இருக்கிறது. பிரபஞ்சமே உள்ளடங்கிய வார்த்தை அது. ஹிந்து சனாதன தர்மத்தில் ஓம் அன்று ஆரம்பிக்காமல் எந்த மந்திரமும் இல்லை. ஞாபகம் இருக்கிறதா நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்ற சந்திரனில் முதலில் கால் வைத்த மனிதன் விண்ணிலே பார்க்கிறபோது ஓம் என்ற இடைவிடாத பெரும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவனுக்கு உள்ளே ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்று சொன்னார்.
அமெரிக்கர் ஆர்ம்ஸ்ட்ராங் ''ஓம்;; அறியாதவர். ஓம் சப்தம் நம் உடலில் உள்ள சக்ரங்களை குண்டலினி முதல் ஸஹஸ்ராரம் வரை அதிரச்செய்யும் மந்திரம். ஓம் எனும் சப்தம் ஆடியோ வீடியோவில் கேட்கும்போதே நம்மை ஒருமாதிரி சிலிர்க்க வைக்கும்போது ஆலயங்க ளில் ஹோமம் யாகம் செயது மந்திர ஒலிகளி டையே ப்ரணவமந்த்ரம் சொல்லும்போது தெய்வம் பேசாதா? ஓம் என்ற மந்திரத்துக்கு எத்தனையோ அர்த்தங்கள். அதற்குள் போனால் இந்த சின்ன கட்டுரை பெரிதாகிவிடும். நிறைய பேர் படிக்க மாட்டீர்கள்.
மாண்டூக்ய உபநிஷத்தில் ''அ'' விழித்திருக்கும் நிலையைக் குறிக்கிறது, எல்லாவற்றையும் நம் மனம் மற்றும் உணர்வு உறுப்புகள் மூலம் வெளிப்புறமாக அனுபவிக்கிற நிலை. ''உ'' கனவு நிலையை குறிக்கிறது, கனவு நிலையில் தான் நமது உள்ளார்ந்த அனுபவங்கள் எல்லாமே இருக்கிறது. `ம்` , என்ற ஒலி ஆழ்ந்த தூக்கத்தின் இருப்பைக் குறிக்கிறது, அங்கு ஆசை, விருப்பம், எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. நனவு தன்னைத்தானே நிரப்பிக் கொள்வது.
सर्वं ह्येतद् ब्रह्मायमात्मा ब्रह्म सोऽयमात्मा चतुष्पात् ॥ २॥
ஸர்வம் ஹ்யேதத்³ ப்³ரஹ்மாயமாத்மா ப்³ரஹ்ம ஸோऽயமாத்மா சதுஷ்பாத் ॥ 2॥
ப்ரம்மம் என்கிறோமே அது ஒன்று தான் எல்லாமே. ப்ரம்மம் தான் ஆத்மா என்பதும். அதற்கு நான்கு எல்லைகள், வாசல்கள் உண்டு. மூன்று நிலைகள் மேலே சொன்னேன், நாலாவது மூன்றையும் கடந்த துரீயம் .
जागरितस्थानो बहिष्प्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः
स्थूलभुग्वैश्वानरः प्रथमः पादः ॥ ३॥
ஜாக³ரிதஸ்தா²நோ ப³ஹிஷ்ப்ரஜ்ஞ: ஸப்தாங்க³ ஏகோநவிம்ஶதிமுக:² ஸ்தூ²லபு⁴க்³வைஶ்வாநர: ப்ரத²ம: பாத:³ ॥ 3॥
மேலே சொன்ன ஸ்லோகத்தில் முதல் நிலையான விழிப்புணர்வு, ஜாக்ரதா பற்றி சொல்கிறது. வெளியுலக தொடர்பு இதன் மூலம் தான். இதற்கு 7 உறுப்புகள் உண்டு. 19 வாய்கள். இது தான் எல்லா ஜீவராசிகளிடமும் காணப்படும் பொது நிலை.
நான்கு பாகங்களில் முதல் பாகம் வைச்வாநரம் இது தான் நம்மை விழித்திருக்க செய்யும் சக்தி. அதன் கட்டுப்பாட்டில் உள்ளது தான் விழிப்புணர்வு, ஜாக்ரதா அவஸ்தை எனும் நிலை. இது நம்மை வெளியே காணும் எதுவோடும் இயங்க செய்வது. வெளியுறவு மந்திரி.
स्वप्नस्थानोऽन्तःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः
प्रविविक्तभुक्तैजसो द्वितीयः पादः ॥ ४॥
ஸ்வப்நஸ்தா²நோऽந்த:ப்ரஜ்ஞ: ஸப்தாங்க³ ஏகோநவிம்ஶதிமுக:² ப்ரவிவிக்தபு⁴க்தைஜஸோ த்³விதீய: பாத:³ ॥ 4॥
இந்த ஸ்லோகம் ஜீவாத்மாவின் ரெண்டாம் நிலையான ஸ்வப்னம் எனும் கனவு நிலையை குறிப்பிட்டு சொல்கிறது. இது தான் 7 உறுப்பு, 19 வாய் அல்லது முகம் கொண்ட சமாச்சாரம் என்கிறது. ஜீவனை உலக ருசியில் சந்தோஷமாக வைத்திருக்கும் தன்மை உள்ளது. சுகமான கனவு தைஜஸ நிலையில், அதாவது பளிச்சென்ற ஒளி வீசும் முகத்தினனாக காண்கிறது.
यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं
पश्यति तत् सुषुप्तम् । सुषुप्तस्थान एकीभूतः प्रज्ञानघन
एवानन्दमयो ह्यानन्दभुक् चेतोमुखः प्राज्ञस्तृतीयः पादः ॥ ५॥
யத்ர ஸுப்தோ ந கஞ்சந காமம் காமயதே ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதி தத் ஸுஷுப்தம் । ஸுஷுப்தஸ்தா²ந ஏகீபூ⁴த: ப்ரஜ்ஞாநக⁴நஏவாநந்த³மயோ ஹ்யாநந்த³பு⁴க் சேதோமுக:² ப்ராஜ்ஞஸ்த்ரு’தீய: பாத:³ ॥ 5
தன்னை மறந்த நிலையில் மரக்கட்டையை போல சுகமாக தூங்கினேன் என்று சொல்லும் போது தூங்கியவன் எங்கிருந்தான். பேசாமல் இருந்த இடத்திலேயே தான் இருந்தான். தூர தேசத்துக்கு எல்லாம் பிரயாணம் செய்தது யார்,? தூக்கம் அனுபவித்தது, ஸ்வப்னம் கண்டது, விழித்துக் கொண்டிருந்தவன், எல்லோருமே ஒன்றே தான். வேறு வேறு போல் தோன்றுவது கண், புத்தி என்று இந்திரியங்களை நினைக்க வைக்கும் மாயையின் தோற்றங்கள். உள்நோக்கிய பிரஞை
एष सर्वेश्वरः एष सर्वज्ञ एषोऽन्तर्याम्येष योनिः
सर्वस्यप्रभवाप्ययौ हि भूतानाम् ॥ ६॥
ஏஷ ஸர்வேஶ்வர: ஏஷ ஸர்வஜ்ஞ ஏஷோऽந்தர்யாம்யேஷ யோநி: ஸர்வஸ்ய ப்ரப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம்
மூன்றாவது நிலை ஆழ்ந்த தூக்க நிலைப்பாடு. காரண சரீரத்தின் அனுபவம். நான்காவது ஸ்டேஜ் முதல் சொன்ன மூன்று நிலையும் கடந்த அப்பால் நிலை. ஆனந்த மயம். பகவானோடு ஐக்கியமாகும் நிலை. துரீயம் என்று பெயர்.
இன்னும் சொல்கிறேன்..
No comments:
Post a Comment