அறுபத்து மூவர் --- நங்கநல்லூர் J K SIVAN
கோட்புலி நாயனார்.
''யாருமே என் வாளுக்குத் தப்பமுடியாது''
சாதாரண மக்கள், நம்மைப் போலவே ராஜாக் களுக்குள்ளும் சொத்தைப் பிரித்துக் கொள்வ தில் சண்டை வரும். நாம் ஒரே ஒரு வீட்டை நான்கு துண்டாக்கி சுவர் எழுப்பிக் கொள்வோம். அவர்கள் நாட்டை, கஜானாவை, ராஜாவின் அரண்மனைகளை எனக்கு இது உனக்கு அது என்று பிரித்துக் கொள்வார்கள். நிறைய கொள்ளை அடித்த அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் கூட இதில் விதிவிலக்கல்ல. எவனை யோ எங்கோ கொள்ளையடித்த திருடனின் குழந் தை களும் தமக்குள் யாருக்கு எது, எவ்வளவு என்பதில் கைகலக்கும் .
சோழ ராஜாக்களின் ஒருவன் இரத்னேந்திர சோழ மன்னனும், அவனது தம்பியும் அப்பாவின் விலை யுயர்ந்த இரத்தினங்களை மதிப்பிட்டுப் பிரித்து கொள்வதற்கு, பல நவரத்ன வியாபாரி களை மதிப்பீடு செய்ய அழைத்தார்கள். மதிப்பி டுவதில் குழப்பம் தான் மிஞ்சியது என்பதால் ரெண்டு பிள்ளைகளும் அந்த ஊர் சிவன் கோவி லுக்கு சென்று ஈஸ்வரா நீ மதிப்பிட்டு யாருக்கு எவ்வளவு என்று சொல் ? என்று வேண்டி னார்கள்.
ஈஸ்வரன் ஒரு ரத்ன வியாபாரியாக வந்து மாணிக்கங்களை எடை போட்டு, மதிப்பிட்டு, நாட்டையும் திருப்திகரமாக ரெண்டு பேருக் கும் பிரித்துக் கொடுத்தான். அந்த சிவனின் பெயர் மாணிக்க வண்ணர், இரத்னபுரீஸ்வரர்” இவர் இருக்கும் ஊர் நாட்டியத்தான் குடி . காவிரி தென்கரை சிவஸ்தலங்களில் 118வது.
அறுபத்து மூவர்களில் ஓருவரான கோட்புலி நாயனார் இங்கே வேளாள சிவபக்த குடும்பத் தில் பிறந்தவர். சோழனின் படைத்தலைவர். எதிரிகளை புலி போல் வேட்டையாடி கொல்பவர் என்பதால் கோட்புலி என்று பெயர். அவரது செல்வம் இவர் சேர்த்து வைத்த நெல் மூட்டைகள். அவற்றை விற்று சிவாலய திருப்பணி செய்பவர்.
ஒரு சமயம் ஊரில் பஞ்சம். எங்கும் பசி பட்டினி, நிறைய நெல் மூட்டைகள் இருந்தாலும் அவை சிவன் திருப் பணிக்கு மட்டுமே என்று உறுதி யாக கண்டிப்பாக இருந்தார். அவர் ராஜாவோடு போருக்கு சென்ற சமயம் ஊரில் பஞ்சம் அதிகமாகி பசியில் மக்கள் வாடி, கோட்புலி சேமித்து வைத்திருந்த நெல் மூட்டைகளை பசிக்கு உணவாக எடுத்துச் சென்று விட்டார்கள்.
வெற்றிகரமாக ராஜாவும் கோட்புலியும் ஊர் திரும்பியதும் , கோட்புலிக்கு பிரத்யேகமாக சிவாலய திருப்பணிக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள உறவினர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள் என்று தெரிந்தது. கோபம் உச்சிக் கேறியது. சொந்த பந்தம், குழந்தைகள் யாவ ரையும் ஒருவர் விடாமல் எல்லோரையும் வாளால் வெட்டி கொன்றார். ஒரே ஒரு ஆண் பிள்ளை மட்டும் எப்படியோ தப்பிவிட்டது. .
காவலாளிகள், ''தலைவா, இந்த சிறு சிசு ஆகாரம் சாப்பிடாத பால் குடிக்கும் குழந்தை, சிவபெருமானுக்கென நீங்கள் வைத்த நெல்லை உபயோகிக்க வில்லை. இவனையாவது கொல் லாமல் விடுங்கள்.'' என்கிறார்கள்.
''இவன் குடித்த பால் இவன் தாயாரிடமிருந்து தானே, அவள் இந்த நெல்லை அரிசியாக சமைத்து தானே உண்டாள். ஆகவே இந்த குழந்தையும் தப்பக்கூடாது. ரெண்டு துண்டாக குழந்தையும் வெட்டப்பட்டது. கோட்புலியின் சிவபக்தியை கண்டு மெச்சிய சிவன் குழந்தை முதல் அனைத்து இறந்த உறவினர்களையும் மீண்டும் உயிர்ப்பித்தார். கோட்புலியையும் தன்னோடு அழைத்துச் சென்றார்.
ஒரு முறை சுந்தரர் இக்கோயிலுக்கு வந்த போது சிவனையும், அம்மையையும் காணாமல் திகைத்து விநாயகரை வணங்கினார். விநாய கரோ, ஈசானத்திசையில் கையை காட்டி வாய் பேசாதிருந்தார். சுந்தரர் அந்த திசையில் சென்று பார்த்த போது சிவனும் பார்வதியும் நடவு நட்டுக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த சுந்தரர்,
“நட்ட நடாக்குறை நாளை நடலாம்
நாளை நடாக்குறை சேறுதங் கிடவே
நட்டது போதும் கரையேறி வாரும்
நாட்டியத்தான்குடி நம்பி“
சுந்தரர் வேண்டுகோளுக்கிணங்கி அம்மையும் அப்பனும் கோயிலுக்குள் எழுந்தருளினர் . கோட்புலி நாயனார் தனது பெண்களான சிங்கடி, வனப்பகை இருவரையும் இந்த ஸ்தலத்தில் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு பணிப்பெண் களாக அளித்தபோது சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களைத் தன் புதல்விகளாக ஏற்றுக் கொண்டார்.
யானை ஒன்று இத்தலத்தில் தீர்த்தமுண்டாக்கி நீராடி இறைவனை வழிபட்டு முக்தி அடைந்தது. யானையால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் “கரி தீர்த்தம்” என்றும், கரிக்கு அருள்புரிந்த இறைவன் “கரிநாலேசுரர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
இன்னொரு விசேஷம் நாட்டியத்தான்குடியில் எல்லா மூர்த்திகளுக்கும் ஆபரணம் மகர கண்டிகை என்ற உருத்ராட்சமாலை. கிழக்கு நோக்கிய கோயில், நகரத்தார் திருப்பணி செயது பராமரிக்கும் ஆலயம். கிழக்குக் கோபுர வாயிலின் முன் சுந்தரருக்கு கைகாட்டிய விநாயகர் சந்நிதி மேற்கு நோக்கியுள்ளது. ஐந்துநிலை இராஜகோபுரம். உட் பிராகாரத்தில் வழிகாட்டிய விநாயகர், முருகன், விசுவநாதர், கஜலட்சுமி, நவக்கிரக சந்நிதிகள். கோஷ்டத்தில் தக்ஷிணா மூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, கோட்புலி நாயனார் ஆகியோர் மூர்த்திகள் உள்ளது. மகாமண்டபத்தில் நடராஜ பெருமான் சபையில் காட்சி தருகிறார்.
கல்லேன் அல்லேன் நின்புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன் நில்லேன் அல்லேன் நின்வழி நின்றார் தம்முடை நீதியை நினைய வல்லேன் அல்லேன் பொன்னடி பரவ மாட்டேன் மறுமையை நினையநல்லேன் அல்லேன் நானுனக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ. - சுந்தரர்.
ஆடி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் கோட்புலி நாயனார் குருபூஜை விசேஷமாக நடைபெறும்
No comments:
Post a Comment