Monday, March 8, 2021

THIYAGARAJA SWAMIGAL

 

ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்

திரை விலகட்டும் -- நங்கநல்லூர் J K SIVAN

எதிரே பெரிய மலைகளின் தொடர்ச்சி. ஏழு மலைகள். எப்படி, எதற்கு அதன் உச்சியில் போய் அமர்ந்து கொண்டிருக்கிறான் வரதராஜன். யார் சொன்னது அவன் அமர்ந்தான் என்று. நம்மைப்போல் அவனும் கால் கடுக்க நின்று கொண்டிருக்கிறான். நாம் அவனைக் காண நிற்பதோ அதிக பக்ஷம் ஓரிரு மணிநேரங்கள் தான். மற்ற நேரம் அங்கங்கே இருக்கும் பெஞ்சுகளில் அமர்ந்து தான் வரிசையில் நகர்கிறோம். அவனோ? பலயுகங்களாக நம்மைக் காண்பதற்கு இரவு பகல் தூக்கமின்றி நிற்கிறான். கல்லாகவே கற்சிலையாகவே மாறி விட்டான். காட்சி தருகிறான். நம்மைப் பார்த்ததில் அவனுக்கு மகிழ்ச்சி.

''இந்தா உன்னைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி, என்னைப் பார்த்ததில் உனக்கு இனிப்பு என்று எல்லோர் கையிலும் ஒரு அற்புதமான லட்டு தந்து அனுப்புகிறான். உள்ளம் உடல் ரெண்டிற்கும் இனிப்பு வழங்கும் ஒரே தெய்வம் உலகில் அவன் தான். சீனி சக்கரை சீனிவாசன்.

இப்போது நாம் அவனைக் காண்பது சுலபமாகி விட்டது. மலைகளில் பாதை, ஏறுவதற்கும் இறங்கவும் சௌகர்யம். நடக்கவேண்டாம். ஊர்திகள் செல்கிறது. ஏற இறங்க தனி வழி. அங்கங்கே நடந்து போக நிழல், குடிநீர், இலவச உணவு. ஆனால் நம் முன்னோர்கள் , எண்ணற்ற பக்தர்கள், வயதானவர்கள் நடந்து தான் ஏழுமலையும் தாண்டி ஏழுமலையானை தரிசித்தவர்கள். அப்போது மணிக்கணக்கில் நிற்கவேண்டாம், நடந்தாலே போதும்.

இப்படித்தான் ஒரு வயதானவர் அவனைக் காண நடக்க முடியாமல், அடக்கமுடியாத ஆசையோடு வந்தார். மெதுவாக மலை ஏறுகிறார். இது தான் முதல் முதலாக அவர் அவனைக் காண ஆசைப் பட்டு அது நிறைவேறும் சமயம். எத்தனை காலம் காத்திருந்தார்?. மனதில் நிறைந்ததை மகோன்னதமான நேரில் காணும் பாக்யம் ...காஞ்சிபுரம் சென்றார். வரதராஜர், காமாட்சி, ஏகாம்பர நாதரையும் தரிசித்துப் பாடினார். அதன்பின் வாலாஜாபேட்டை வெங்கட் ரமண பாகவதர் பஜனை மடத்தில் 12 நாட்கள் தங்கிப் பாடினார். பின்னர் கோவூர் சென்றார். அங்கே ஒரு பக்தர் வீட்டில் தங்கி இருந்து கோவூர் சுந்தரேசன் மேல் கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனை கள் பாடினார். அந்த பக்தர் ஏற்பாட்டில் இப்போது திருப்பதி திருமலை யாத்திரை. மேலே ஏழாவது மலை வந்தாயிற்று. வேங்கடேசன் ஆலயத்துக்குள் ஆவலாக சென்றார்.

அடாடா... பூஜை நேரம் ஆகிவிட்டதாம். இனி அவனை காண முடியாதாம். அர்ச்சகர்கள் நிறுத்தினார்கள்
.
''யார் நீர் இந்த நேரம் வந்து தரிசனம் கேட்கிறீர்?''
கூட இருந்தவர்கள் அவரை யார் என்று அறிமுகம் செயதும் அர்ச்சகர்களுக்கு அவரைத் தெரியவில்லை.
முதியவருக்கு மனம் நெகிழ்ந்து. வருத்தமும் ஏமாற்றமும் தாங்க முடியவில்லை. காண வேண்டும் என்ற ஆசையோடு வந்தும் கண்ணுக் கினியனைக் காண முடியவில் லையே. கண்களில் நீர் வழிந்தது. இரு கரம் கூப்பினார். அவர் தெலுங்கர். அவர் உணர்ச்சி கள் தெலுங்கில் தான் சரளமாக வெளிப்படுத் துவது சாத்தியம்.
அவர் உணர்ச்சி பொங்கப் பாடுவார். ராகம் தானாகவே அவன் அருளால் அர்த்த பாவத்துக்குப் பொருத்தமாக விழும். அது தான் அவர் பெருமை.

திரைக்கு வெளியே அமர்ந்து உள்ளே இருக்கும் வேங்கடேசனை மனதால் நினைத்து பாடுகிறார். தெலுங்கு மொழியில் ப்ரவாஹம் .

தெர தீயகராதா நா ல்லோனி .. திருப்பதி வெங்கட்ரமணா மத் சரமுனு ,
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தொலுசுன்னதி நாலோனி - தெர ..
மத்ஸ்யமு யாகலி கோணி காலமுஸே மக்னமைன ரீதி நுன்னதி அக்கமமைன டிப சந்நிதி மறுகத்தபதி சேரசி ந்த்துனதி . ( தெர ...)
இரவொண்டக பூஜியுஞ்சு சமயமுன இக டகுலு ரீதி நுன்னதி
ஹரி த்யானமு சேயு வேளா சித்தமு அந்த்யஜு வாடகு போயி ந துன்னதி
வாகுரமனி தெலியக ம்ருக கணமுலு வச்சி தகுலு ரீதி நுன்னதி வேகமே நீ மதமு அனுசாரின்சீனா தியாகராஜ நுத மத மத் சரமனு (தெர )

இந்த தெலுங்கு பாட்டுக்கு என்ன அர்த்தம்?
ஆஹா திருப்பதி வேங்கடரமணா, திரையை கொஞ்சம் விலக்கக் கூடாதா? எந்த திரையை சொல்லுகிறாய்?என் கண் பார்வையை மறைக்கும், காண வேண்டியதைக் காணா மல் தடுக்கும் இந்த திரையை மட்டும் சொல்ல வில்லை. என் புத்தியை, என் நடுநிலையை மறைக்கும் ஆங்கார , கோபத்திரையை சொல்கிறேன், கர்வ, ஆணவத் திமிர் திரை யை சொல்கிறேன், பொறாமைத் திரை யை சொல்கி றேன், இந்த திரைகள் தான் ஐயா, என்னுள் தலை தூக்கி நின்று மறைக்கிறது. தர்மத்தை, புருஷார்த்தத்தை, மோக்ஷ மார்கத்தை மறைக் கிறது ஸ்வயம்புவாக என்னுள் மிளிரும் ஞான தீபத்தின் ஒளியை என் ஊனக்கண் ணின் பார்வையிலிருந்து மறைக்கிறது. இந்த திரையி னால், என் மனதை தீய சக்திகள் உன்னிடம் வராமல் பிடித்திழுக்கின்றது. அல்ப ஆகாரத்தை வைத்து தப்ப முடியாமல் முட்டாள் விலங்கு களை பறவைகளை வேடன் விரித்த வலையில் சிக்க வைப்பது போல் மாயத் திரைகள் என் அறிவை மழுங்கடிக் கிறதே.

என்னப்பனே வேங்கட ரமணா, ஸ்ரீனிவாஸா , உன்னை பக்தியோடு வழிபடுபவன் அல்லவா நான்? எனக்கும் உனக்கும் இடையே எதற்கு இந்த திரை.? கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் எனக்கு. உள்ளேயும் வெளியேயும் இருக்கும் திரைகள் விலகட்டும். இந்த பாடல் அவர் மனதில் பொருத்த மாக தோன்றிய கௌளி பந்து எனும் அருமையான நெஞ்சை உருக்கும் ராகத்தில் வெளிவவந்தது. பாட்டு முடிந்தது, காற்று நின்றது. ஆடிக்கொண்டிருந்த திரை தானாகவே கொக்கி களிலிருந்து கழன்று கீழே விழுந்தது. கர்ப கிரஹத்தில் நெய் தீபத்தில் ஒளி வீசி ஸ்ரீனிவாசன் காட்சி தந்தான். அர்ச்சகர்கள் அதிசயித்து தாங்க ளும் சிலையானார்கள். கண்களில் ஆனந்த பாஷ்பத்தோடு சிரமேற் கரத்தோடு தியாக ராஜ ஸ்வாமிகள் எனும் அந்த முதியவர் வணங்கி நிற்க அவருக்கு ஸ்ரீனிவாச னின் ப்ரசாதம் அளித்து மகிழ்ந்தார்கள். வணங்கி னார்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...