சாணக்கியன். -- நங்கநல்லூர் J K SIVAN --
சகலகலா வல்லவன் சொற்கள்
சாணக்யரே , உடலெல்லாம் மூளையை உமக்கு மட்டும் எப்படி அந்த பிரம்மதேவன் நிரப்பி விட்டான். ஒருவேளை படைத்தல் தொழிலில் ஈடுபடும்போது கவனக்குறை வோ? அல்லது உமக்கு மட்டும் வேண்டு மென்றே அப்படி ஒரு அதிசயத்தைக் கொடுத்தானோ? அப்படியும் இருக்கலாம்,
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் மழை கிடைக்குமே என்ற அடிப்படையில் தனித்தனியே நிறைய மூளையை அடைத்து மனிதர்களை படைத்து பூமிக்கு அனுப்பி, அவர்கள் அதை ஜார்க்கிரதையாக உபயோகிக்காமல் வீணாவதைத் தடுக்க அத்தனையும் உம்மைப் போன்ற சிலருக்கு கொடுத்து அனுப்பினால் ஊருக்கே, நாட்டுக்கே, உலகுக்கே அது பயனாகும் என்ற எதிர்கால நோக்குடன் தீர்க்க தரிசியான உம்மை படைத்தி ருக்கிறான். ப்ரம்மதேவனுக்கு நன்றி சொல்கிறோம்.
சகல கலா வல்லவன் சாணக்கியன் வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் சில இன்று:
* பழசை நினைத்து காலத்தை வீணாக்காதே. .கடந்த காலத்தை நினைத்து நடந்ததைப் பற்றி எண்ணி வருந்தக் கூடாது.அதேபோல் எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படக் கூடாது. வருவது வரட்டும். வரும்போது எதிர்கொள்ளுவோம். இப்போது அதற்கென்ன அவசரம். புத்திசாலிகள் நிகழ் காலத்தை மட்டும் நினைத்துத் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள். நான் அடிக்கடி சொல்லும் பிடித்த வார்த்தைகள். ''ஒவ்வொரு நிமிஷத்தையும் அனுபவித்து வாழக் கற் றுக்கொள்'' வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக வாழ்ந்த அனுபவம் பெறுவாய்.
*எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் கால் கீழே சொல்லப்பட்டவை மீது படவேண்டாம். தப்பு. அவை என்னென்ன?
நெருப்பு, ஆசிரியர், பிராமணர், பசு, கன்னிப் பெண், வயதானவர்கள்,குழந்தைகள். இது மரியாதையாலும், மற்றவர்களை ,மற்றவர்க ளையும் நம்மைப்போல் மதிக்க வேண்டும் என்ற பதவிசு என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
*ஒரு தனிமனிதனைக் குடும்ப நலத்திற் காகவும், ஒரு குடும்பத்தைக் கிராம நலத்திற் காகவும், ஒரு கிராமத்தை தேசநலத்திற் காகவும், மனச்சாட்சிக்காக உலகத்தையும் தியாகம் செய்யலாம்.
அடப்பாவிகளா சாணக்யனை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டீர்களே. ஒரு தனி மனிதனுக் காகவும் அவன் குடும்ப நலத்திற் காகவும் நாட்டையும் கூட எல்லாவற் றையும் அது இழக்கச்செய்யும் ''தியாகம்'' பண்ண வைக்கிறீர்களே.
*.எதிலும் அளவோடு செயல்பட வேண்டும். எல்லாமே ஒரு அளவோடு இருக்க வேண்டும். ரொம்ப அருமையான அறிவுரை சாணக்யா. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம். எல்லை கடந்த செயல்கள் எண்ணங்கள் ஆபத்தில் தவிப்பதை அறிந்தும் புத்திக் கெட்டா மல் எத்தனையோ ஜீவன்கள் அவஸ்தைப் படுகிறதே. 'சீதையின் மிக அதிகமான அழகு அவள் கடத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தது. ராவணனின் அளவுகடந்த திமிர் அவன் மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. மகாபலியின் அளவுக்கதிகமான தானம் செய்யும் புத்தி அவன் ஏமாறுவ தற்கு வழி செய்து கொடுத்தது.
ஆமாம் கௌடில்யா. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு எனும் அறிவுரை அதனால் தான் வந்தது.
*மனிதன் தனியாகவே இந்த உலகத்திற்கு வருகிறான். தனியாகவே உலகத்தை விட்டுச் செல்கிறான். தனியாகவே, தான் செய்த நல்லது- கெட்டது காரியங்களின் பயனை அனுபவிக் கிறான். பின்னே என்ன? உன் செயலுக்கு பக்கத்து வீட்டுக்காரனா அனுபவிக்க முடியும்?
ஒவ்வொருவனும் தனியாகவே தனக்கு உண்டான முடிவான நிலையை அடைகிறான்.
*.கடவுள் இருப்பிடம் கல்லிலோ, மரக் கட்டையி லோ, மண்ணிலேயோ இல்லை. மனிதர்களின் உணர்ச்சிகளிலும் (feelings) எண்ணங்களி லும்தான். நியாயமான வார்த்தை.
*எப்படி பூக்களில் நறுமணம் இருக்கிறதோ, எண்ணெய் விதைகளில் எண்ணெய் இருக்கி றதோ, மரக் கட்டையில்ெருப்பு இருக்கிற தோ, பாலில் நெய்யும், கரும்பில் சர்க்கரை யும் இருக்கிறதோ, அப்படித்தான் கடவுள் நம்முடைய உடம்பில் வாசம் செய்கிறார். புத்தியுள்ள மனிதன் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment