தாழம்பூ சாணக்யன் - நங்கநல்லூர் J K SIVAN
சாணக்கியனின் சத்ய வார்த்தைகள்.
கௌடில்யன் எனும் சாதாரண ஒரு வேதமோதும் வைதிக பிராமணன் ஒரு மஹா பெரிய சாம்ராஜ்யம் இந்த பாரத தேசத்தில் உருவாக காரணமானவன். அவனது தீர்க்கதரிசனமும், சந்திரகுப்தன் எனும் நந்தா வம்ச அரசனுக்கும் ஒரு மூரா எனும் தாதிக்கும் பிறந்த ஒரு க்ஷத்ரியனின் வீரமும் ஒன்று சேர்ந்து, மஹா வீரன் அலெக் சாண்டரின் படையையே வென்றது. சிற்றரசர்கள் பலரை இணைத்து மாபெரும் சக்தி ஒன்று உருவானது. குப்த சாம்ராஜ்யம் மூன்று நான்கு தலைமுறை ஆண்டு அன்னியர்களை இந்த தேசத்தில் கால் பாதிக்க விடாமல் விரட்டியடித்தது. அந்த விதத்தில் சாணக்யனுக்கும் சந்திர குப்த னுக்கும் நாம் என்றும் கடமைப் பட்டிருக் கிறோம்.
சாணக்கியன் சொல்லும் சில விஷயங்கள் அவன் எவ்வளவு ஆழ்ந்த சிந்தனையாளன், தத்துவ ஞானி என்று காட்டுகிறது.
* இந்திர லோக வாழ்க்கை இருந்தாலும், நல்ல பிள்ளைகள் பிறந்தாலும் தவறு செய்யும் மனைவி இருந்தால் ஒரு மகிழ்ச்சியும் வாழ்வில் இருக்க வழியில்லை.
*உண்ணுதல், இன விருத்தி செய்தல், உறங் குதல், அச்சம் அடைதல் ஆகிய அனைத்து குணங்களிலும் மிருகத்தை போல் தான் மனிதன் இருக்கிறான். அறிவு ஒன்று தான் அவனை மிருகத்திடம் இருந்து பிரித்து காட்டுகிறது. நம்மில் நிறையபேர் இந்த அறிவு சமாச்சாரத்தைபற்றி நினைக்கவே கூட நேரமில்லாமல் மிருக வாழ்க்கை வாழ்ந்து மடிகிறார்கள்.
* அரசன், விலை மகள், யமதர்மன், நெருப்பு, திருடன், குழந்தைகள் , பிச்சைக்காரன் ஆகியவர்கள் அடுத்தவர் படும் துன்பத்தை உணர மாட்டார்கள். இவர்கள் வரிசையில் எட்டாவதாக இருப்பவர் வட்டிக்கு பணம் வசூலிப்பவர். இந்த எட்டாம் இட ஆளைவிட அரசு காவல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்க சேவைகள் பெற மக்களிடம் லஞ்சம் பணம் பிடுங்குபவர்கள் முதல் இடத்துக்கு போனது சாணக்யனுக்கு தெரியாது. அவன்காலத்தில் அவர்கள் இல்லை.
* ஓ தாழம்பூவே, உன்னிடம் முட்கள் இருக்கிறது, பாம்புகள் வசிக்கும் இடத்தில் வளர்கிறாய், வளைத்து நெளிந்து வளர்கிறாய், உன்னை எளிதில் அடையா இடத்தில் வளர்கிறாய். இருந்தாலும் உன் ஒரு வாசனைக் காக அனைவரும் உன்னை போற்றுகின்றனர். அதுபோல் மனிதனுக்கு உள்ள ஒரு சிறந்த குணம் அவனுடைய எல்லா தவறுகளையும் மறைத்து அவனை போற்றச் செய்து விடும். எல்லா தீயகுணங்கள் இருந்தாலும் டிவியில் யூட்யூபில் நமக்குச் சேவை புரியவே தன்னு டைய உயிரை தியாகம் செய்ய தயாரா க இருப்பது போல் பேசுகிறவன் பேச்சில் தாழம்பூ மயக்கம் தேடி நம்புகிறவர்கள் பாவம். பரிதாபத்துக்குரியவர்கள்.
* ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். கௌடில்யா, பெண்களை மட்டும் குறை சொல்லிவிட்டாயே , எத்தனை நச்சுப்பாம்புகள், ஆண்கள் உருவத்திலும் இருந்து குடும்பத்தில் ஒரு புற்றுநோயாக இருப்பதை நீ அறியவில் லையா? அல்லது அறிந்தும் பேசாமல் விட்டாயா?
*ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திற்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் . வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம். கௌடில்யா எல்லோரும் உன்வாயில் ஒரு பிடி சர்க்கரை போடுகிறோம். வாயைத் திற.
* ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது . அரச குடும்பம் இப்போ து அரசாளும் தலைவர்கள் குடும்பம் என்று ஆகிவிட்டதை பாவம் நீ அறியமாட்டாய் கௌடில்யா.
*ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான் அறிவுள் ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தரு வான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்கா மலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங் களில் ஈடுபடா மலும் செல்ல வேண்டாம். நீ சொல் வதை தான் நாங்கள் இப்போது மேடையில் பலர் கத்துவதை யூட்யூபில் கேட்கிறோம். ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவை சொல்வது கூட அறிவு பூர்வ செயல் தான்.
* நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான். காசுக்கு கல்வி விற்கிறோம்டா கௌடில்யா, அப்படி எங்கள் குழந்தைகள் கற்கும் கல்வி உண்மையான கல்வியே இல்லையப்பனே.
No comments:
Post a Comment