Thursday, June 3, 2021

RASKHAN


 

நான்  ரஸ்கான்  ரசிகன்.  -    நங்கநல்லூர்  J K  SIVAN 

''திருடனும் திருட்டு காக்கையும்''

அக்பர் டில்லி பாதுஷாவாக  ஆண்ட காலத்தில் நமது சூர்தாஸ் வாழ்ந்தார்.  அதே சமயம்  இன்னொரு  முஸ்லீம்   சுஃபி SUFI  ஒருவரும்  அருமையான கவிஞர் இருந்தார்.   ஸயீத்  இப்ராஹிம் கான்  ஒரு  பஷ்ட்டூன் சர்தார்.  பாரசீகத்தவர் .அவர் சுருக்கமான பெயர்  ரஸ்கான்.  (1534-1619) .    டில்லி பக்கத்தில் அம்ரோஹாவில் வாழ்ந்தவர்.  அவர்  கவிஞர் என்பதால் எனக்கு அவர் மேல் நாட்டம் இல்லை. அவரும் ஆச்சர்யமாக, ஒரு சிறந்த  கிருஷ்ண பக்தர் என்பதால் அவரைப் பிடித்தது.   இந்த அக்பர் காலத்து   முஸ்லீம் ஸுபி,  பிற்காலத்தில் பிரிந்தாவனம் சென்று  வாழ்ந்து  வைஷ்ணவ னாக மாறி,  கிருஷ்ணன் மேல்  சிறந்த பாடல்க ளை இயற்றியிருக்கிறார்.   அவரது சமாதி  மஹாபன் எனும் இடத்தில் உள்ளது.  மதுராவுக்கு  6  மைல்  கிழக்கே.இதுவரை பிரிந்தாவனம்  சென்று வந்த எத்தனையோ நண்பர்கள்  ஏன் இதுவரை ரஸ்கான் எனும் பரம கிருஷ்ண பக்தரைப் பற்றி ஒன்றுமே  சொல்லவில்லை.  அல்லது அவர்கள் எழுதி சொல்லி, பேசி, நான் அறியாமல் போய்விட்டேனா.    அப்படி இருக்க முடியாதே.    இன்று தான் அவரைப் பற்றி ஒரு  முகநூல் நண்பர் குறிப்பிட்டிருந்தார்  உடனே தேடினேன்  

அவரது பக்திப் பாடல்களை இன்று  தான் முதன்முதலாக   ஆங்கில மொழிபெயர்ப்பில்  கொஞ்சம் படித்தேன்,  ரசித்தேன்,  சொல்கிறேன். 
பக்த கல்பத்ருமா என்று ஒரு நூல்.  அதில் ஒரு சம்பவம்.  ரஸ்கான்  தனது குருவோடு  பிருந்தா வனம்  சென்றுவருவோம் என்று புறப்பட் டார்.  அங்கே  அவர் மனம் பூரா  கிருஷ் ணன் மேல்  வியாபித்திருக்க  அப்படியே மூர்ச்சையாகி விழுகிறார்.   அப்போது கிருஷ்ணன் அவருக்கு தரிசனம் தருகிறான் . அவ்வளவு தான், அப்புறம் அவர்  பிரிந்தாவனத்தை  விட்டு பிராணன்  போகும் வரை  எங்கும் நகரவே இல்லை. 

17ம் நூற்றாண்டு நூல்  பாவப்ரகாஷ் என்ன சொல்கிறது? ரஸ்கான்   ஒரு ஹிந்து நண்பனோடு  வெகு அன்பாக இருந்தான். இருவரும் ஒரே தட்டில் சாப்பிடுவார்கள்..அருகில் இதை கவனித்த சில முஸ்லிம்கள்  அவரை இஸ்லாம் மதத்துக்கு  எதிரியாக கருதினார்கள். ரஸ்கான் இதற்கெல் லாம் கவலைப்படவில்லை. லக்ஷியம் பண்ணவில்லை. அவருண்டு, அவர் மனதில் கிருஷ்ணனுண்டு.  அவனைப்பற்றிய கவிதை உண்டு.கடவுள் பக்தி என்பது,  மதம், இனம், சமூகம் குடும்பம்  இதெல்லாம் கடந்தது. 
ரஸ்கான்  பாடல்களில் சில:

prana vahi ju rahain rijhi va para rupa vahi jihi vahi rijhayau
sisa vahi jina ve parase pada anka vahi jina va parasayau
dudha vahi ju duhayau ri vahi, dahi su sahi ju vahi dharakayau
aura kahan laun kahaun rasakhani ri bhava vahi ju vahi mana bhayau

தம்பி,   உனது தெம்பு,  புத்துணர்ச்சி,  மனதில்  ஆர்வம்  எல்லாம்  நல்ல  செயல்களைத்   தூண்டும்  எண்ணங்களாக, சொல்லாக அமைந்து விட்டால்  கிருஷ்ணனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கிறது என்று அர்த்தம்.  அவனுக்கு  உன்னைப் பிடித்து விட்டால், நீ அழகனாக மாறிவிடுகிறாய். இது தான் உண்மை அழகு.  
ஒரு சிரத்துக்கு எப்போது மதிப்பு தெரியுமா, அது  கண்ணன் காலடியில் குனிந்து வணங்கும்போது.   அவனைத் தொடும்படியாக  உன் செயல்கள் எண்ணங்கள்  அமைந்துவிட்டால் அப்போது தான் உன் ஹ்ருதயம் தான் உண்மையிலேயே  மனித ஹ்ருதயம்.  பசுக்களோடு எப்போதும் காணும்  கண்ணன் தருவது தான் உண்மையான பால்.  அவன் தரும்  தயிர் தான் கெட்டியான  கட்டித்தயிர் எனும்  உயிர்களனைத்திடமும் காட்டும்  பேரன்பு.   ரஸ்கானுக்கு  வேறொன்றும் சொல்லாத தெரியவில்லை.  அவனுடைய   இந்த மனோநிலை கிருஷ்ணனுக்கு  பிடித்திருந்தால்    அந்த ஆனந்தத்தைத்  தவிர  வேறென்ன வேண்டும்?

sesa, ganesa, mahesa, dinesa, suresahu jahi nirantara gavain
jahi anadi ananta akhanda acheda abheda su veda batavain
narada se suka vyasa rahain paci hare tau puni para na pavain
tahi ahira ki chochariyan chachiya bhari chacha pai naca nacavain

இந்த கடவுளுக்கு, கிருஷ்ணனுக்கு   தான்   எவ்வளவு  இனிய பெயர்கள்  .... சேஷன், கணேசன், மகேசன், சுரேசன், தினேசன்,  எளிதில் சொல்ல முடிகிறதே.  அவர்களை பற்றி விடாமல்  பாடினால் இன்பம்  ஊற்றாக  பெருகுகிறதே.   அடேயப்பா  அவன்  ஆரம்பமோ , முடிவோ, அளவோ,  எல்லை  இல்லாதவனாக, அழிவற்ற வனாக  இருக்கிறானே.  வித்தியாசமில்லாதவன். வேதங்களில்  உட்பொருளாகியவன்.  அவனைத் தேடி  அலைந்து காணாமல் களைத்தவர்கள் ஒருவரா இருவரா? ,  இதோ  நாரதர், சுகர், வியாசர்  இவர்களையே கேட்டுப்பாருங்கள் சொல்வார்கள்.  அவனது   ஆழம்,  விளிம்பு, எல்லை எது எனத் தேடி  தோற்றவர்கள்.   அதேசமயம் ஒரு ஆச்சர்யம் கண்ணில் படுகிறதே.  இந்த பிரிந்தாவனத்து  ஆய்ச்சிமார்,  அவனை ஆடவைக்கிறார்கள், பாடவைக்கிறார்கள், தங்கள் உள்ளங்கை  குழுவில்  கொஞ்சம்  மோர், தயிர், வெண்ணையை காட்டினால் போதும்,  அவர்கள் சொன்னபடி யெல்லாம் செயகிறவனாக இருக்கிறானே இந்த கிருஷ்ணன். 
.
dhuri bhare ati sobhita syamaju taisi bani sira-sundara coti
khelata khata phirai angana paga painjani bajati piri kachoti
va chabi ko rasakhani bilokata varata kama kala nija-koti
kaga ke bhaga bade sajani hari-hatha so lai gayau makhana roti

அந்தப் பயல்  ஷ்யாமுக்கு  தலையைப் பின்னி கொண்டை  போட்டு விட்டிருக்கிறாள் அவன் தாய்.  அதைப் பார்த்தால் எவ்வளவு காந்த சக்தியோடு கண்ணையும் மனத்தையும் கவர்கிறது.   பிருந்தாவனத்தில் இருக்கும்  மொத்த மண்ணில்  பாதிக்கு  மேல்  அவன் உடம்பில் தான். அத்தனை விளையாட்டு, புரண்டு ஓடி விழுந்து. அவன் ஓடும்போதும், விளையாடும்போதும்,  முற்றத்தில்  ஏதாவது பக்ஷணத்தை  சாப்பிடும் போதும்,  அவன் கால் சிலம்பு ஒலித்துக்கொண்டே இருக்கிறதே. அதற்கு தான் எத்தனை  செவிக்கி னிய  நாதம் தர முடிகிறது. அவன் அழகுக்கு அழகு செய்வது எது என்று தேடினேன். இதோ அவன் இடுப்பில் தரித்திருக்கும்  பீதாம்பர த்தை  நழுவி விழாமல்  இடுப்போடு இறுக்கிப்பிடித்து  அதன் மேல்  அவன்  வரிந்து கட்டியிருக்கும்  வஸ்திரம்., BELT மாதிரி.   அது தான்.,  

இந்த அழகைப் பார்த்த எனக்கு  மன்மதன் தான் அழகன்  எல்லோரையும் வசீகரிக்கிறவன் என்று பலர் சொல்லும்போது  ஏற்க முடியவில்லை,  சரிதான்  போங்கய்யா, என்று சொல்ல தோன்றுகிறது. 
எனக்கு கொள்ளைச் சிரிப்பு  வந்தது.  அவனே கருப்பு,  அவன் கையில்  இருக்கும்  ரொட்டித் துண்டில் நிறைய  வெண்ணையைத் தடவிக் கொடுத்து  அவன்  கையில் வைத்திருப்பதை  அருகே மரத்தில் பசியோடு இருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது . கிருஷ்ணன்  எப்போது  கொஞ்சம்   அசருவான் ,  கவனக்குறைவாக இருக்கிறான் என்று கணித்து  சரியான சமயம் பறந்து வந்து ஒரு ரொட்டியை  ''லபக்''  செய்து விட்டதே.   திருடனிடமே திருடிய  அதிர்ஷ்டம் செய்த காக்கை.''   

ரஸ்கான்   ரசனை நன்றாக இருக்கிறது இல்லை யா?


தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...