Thursday, June 17, 2021

CHANAKYA

 சகல கலா வல்ல  சாணக்கியன்  -    நங்கநல்லூர்   J K  SIVAN

சாணக்ய  நீதி.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு இன்று சற்று நேரம் கிடைத்தபோது சாணக்யனைத்  தேடிப்  பிடித்தேன். அற்புதமானவனின்  அருமையான  வாக்கு

विषादप्यमृतं ग्राह्यममेध्यादपि काञ्चनम् ।
अमित्रादपि सद्वृत्तं बालादपि सुभाषितम् ॥ 1-16

விஷாத³ப்யம்ரு’தம் க்³ராஹ்யமமேத்⁴யாத³பி காஞ்சநம் ।
அமித்ராத³பி ஸத்³வ்ரு’த்தம் பா³லாத³பி ஸுபா⁴ஷிதம் ॥

 விஷம் தான் விஷத்தை முறிக்கும்.  நம்மைப் பிடித்து  ரெண்டு  டோஸ்  கொரோனா  வைரஸ் உள்ளே அனுப்புகிறார்கள். அது உள்ளேபோய் நமது உடலில் இடம்பிடித்து,  கொரோனா நம்மை அணுகாது பாதுக்காக்கிறது. IMMUNITY.    பாற்கடலை  தேவர்கள்  அசுரர்கள் கடைந்தபோது  அம்ருதம் வரும்  முன்பு   வாசுகியின்  விஷம் தான்  ஹாலஹாலமாக  வந்தது. அதை விழுங்க தான்  சிவன் அகப்பட்டார்  
 திரு 
நீலகண்டனாக. விஷத்திலிருந்து தான் அம்ருதம் .சேற்றில் விழுந்தால்  தங்கத்தை எடுத்து கழுவி சுத்தம் செய்து  வைக்கிறோம்.  தாழ் குலத்தில் பிறந்தாலும் ஒருவனுடைய  அற்புதமான  ஞானத்தை மெச்சி ஏற்கிறோம்.  மரியாதை, சமூக அந்தஸ்து, மதிப்பு இல்லாத  குடும்பத்தில்பிறந்தாலும்  அற்புதமான  மெச்சக்கூடிய பெண்ணை  ஸ்த்ரீ ரத்னமாக ஏற்கிறோம்..

स्त्रीणां द्विगुण आहारो लज्जा चापि चतुर्गुणा ।
साहसं षड्गुणं चैव कामश्चाष्टगुणः स्मृतः ॥  1-17

ஸ்த்ரீணாம் த்³விகு³ண ஆஹாரோ லஜ்ஜா சாபி சதுர்கு³ணா ।
ஸாஹஸம் ஷட்³கு³ணம் சைவ காமஶ்சாஷ்டகு³ண: ஸ்ம்ரு’த: ॥ 01-17

சாணக்கியன் எங்கே தெரிந்து  கொண்டானோ தெரியவில்லை.  ஆண்களை விட பெண்களுக்கு  பசி ரெண்டு மடங்கு,  வெட்கம் நான்கு மடங்கு,   தைர்யம்  சாகசம்   ஆறு மடங்கு , ஆசை  எட்டு  மடங்கு...இப்போது சாணக்கியன் இருந்து இதைச் சொன்னால்  பெண்கள் சங்கம்,  மகளிர் அணி  அவனை சும்மா விடுமா? கேட்டால் என்ன சொல்வான். ''நான் சொன்னது   ஆயிரம் வருஷத்துக்கு முன்னால்  எங்கள் காலப் பெண்களைப் பற்றி தானே''.

अनृतं साहसं माया मूर्खत्वमतिलोभिता ।
अशौचत्वं निर्दयत्वं

அந்ரு’தம் ஸாஹஸம் மாயா மூர்க²த்வமதிலோபி⁴தா ।
அஶௌசத்வம் நிர்த³யத்வம் ஸ்த்ரீணாம் தோ³ஷா: ஸ்வபா⁴வஜா: ॥ 02-01

சரளமாக  சாதுர்யமாகப்   பொய் சொல்வது,  வேகம், அசட்டு தைர்யம்,  சிரித்து மழுப்புவது, கருணையின்மை, அறியாமை,  பொறாமை, பேராசை, கொடுமை படுத்துவது    இதெல்லாம்  பெண்களின் இயற்கை ஸ்வபாவம் என்கிறான் சாணக்கியன். என்னய்யா சொல்கிறாய் நீ என்று கேட்டால்  மேலே சொன்ன பதில் தான் தயாராக வைத்திருப்பான். 

भोज्यं भोजनशक्तिश्च रतिशक्तिर्वराङ्गना ।
विभवो दानशक्तिश्च नाल्पस्य तपसः फलम् ॥  2.2

போ⁴ஜ்யம் போ⁴ஜநஶக்திஶ்ச ரதிஶக்திர்வராங்க³நா ।
விப⁴வோ தா³நஶக்திஶ்ச நால்பஸ்ய தபஸ: ப²லம் ॥ 02-02

இலையில்  பதினாறு பதினேழு  அயிட்டங்கள் வைத்தாலும், ஒன்றையும் விடாமல் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுபவர்களும் உண்டு.  ஆண்மையோடு,  கம்பீர  உடல் திண்மையோடு ,  வசதி இருந்தபோது வாரிக் கொடுக்கும்  மனஉறுதி  இதெல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

यस्य पुत्रो वशीभूतो भार्या छन्दानुगामिनी ।
विभवे यश्च सन्तुष्टस्तस्य स्वर्ग इहैव हि ॥  2.3

யஸ்ய புத்ரோ வஶீபூ⁴தோ பா⁴ர்யா ச²ந்தா³நுகா³மிநீ ।
விப⁴வே யஶ்ச ஸந்துஷ்டஸ்தஸ்ய ஸ்வர்க³ இஹைவ ஹி ॥ 02-03

எவன்  இந்த உலகத்திலேயே  கஷ்டப்படாமல்  ஸ்வர்கத்தில் இருப்பதுபோல் சுகமாக இருப்பவன் தெரியுமா? அவன் வேறு யாருமில்லை,   எவனுடைய  மகன் அவன் சொல் தட்டாமல் சொன்னபடி கேட்கிறானோ,  எவன் மனைவி அவன் மனம் கோணாமல் அவன் விருப்பங்களை  நிறைவேற்றுகிறாளோ, எவன் தனது செல்வத்தை இருப்பதே போதும் இனி வேண்டாம் என்று திருப்தியோடு  உள்ளவனோ அவன் தான் ஸ்வர்கவாசி.

ते पुत्रा ये पितुर्भक्ताः स पिता यस्तु पोषकः ।
तन्मित्रं यत्र विश्वासः सा भार्या यत्र निर्वृतिः 2.4

 தே புத்ரா யே பிதுர்ப⁴க்தா: ஸ பிதா யஸ்து போஷக: ।
தந்மித்ரம் யத்ர விஶ்வாஸ: ஸா பா⁴ர்யா யத்ர நிர்வ்ரு’தி: ॥ 02-04

அப்பா சொல் தட்டாதவர்கள் தான் பிள்ளைகள்.  பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்குபவன் தான் அப்பா.  எவன் நம்பிக்கைக்கு பாத்திரமோ அவன் தான் உண்மை நண்பன்,   கணவன் மனம் கோணாமல் திருப்த்தியாகவும், அவன் அமைதியோடு வாழவும்  உதவுகிறாளோ அவளே  நல்ல மனைவி என்கிறான் சாணக்கியன். அந்த காலத்திலும்   ஏதேதோ  ப்ராப்ளம்  இருந்ததால் தான் இந்த சாணக்ய நீதியோ?

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...