Tuesday, June 8, 2021

SUBRAMANIA BUJANGAM


 ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN                                                                                                                                                                                  சுப்ரமண்ய புஜங்கம்            



 6.   சுகம் தரும் சுப்பிரமணியன் திருநீறு


25.   अपस्मारकुष्टक्षयार्शः प्रमेह_
ज्वरोन्मादगुल्मादिरोगा महान्तः ।
पिशाचाश्च सर्वे भवत्पत्रभूतिं
विलोक्य क्षणात्तारकारे द्रवन्ते ॥२५॥

Apasmaara-Kusstta-Kssaya-Arshah Prameha_
Jvaro[a-U]nmaada-Gulma-Adi-Rogaa Mahaantah |
Pishaacaash-Ca Sarve Bhavat-Patra-Bhuutim
Vilokya Kssannaat-Taaraka-Are Dravante ||25||

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமேஹ
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)

இந்த ஸ்லோகத்தில் என்னென்ன வியாதிகள் செந்தூர் ஷண்முகன் பன்னீர் இலைத் திருநீரால் குணமாகும் என்று பட்டியலிடுகிறார்  ஆதி  சங்கரர்.

'' ஹே ஷண்முகா, தாரகாசுர ஸம்ஹாரா, உன் திருநீற்றை கண்டதுமே , வலிப்பு, குஷ்டம், இருதய, நுரையீரல் நோய்கள், வயிற்று வலி, சரும கொடிய வியாதிகள், ஜுரங்கள், எல்லாவித நோய்களுமே ஓடிவிடுமே . பில்லி சூனிய ஏவல்கள் பறந்து விடும்.உன் புகழ் பாடினால் சகல பேய் பைசாசங்கள் ஆட்டமும் காணாமல் போகுமே'' என்கிறார் ஆதி சங்கரர்.

26. दृशि स्कन्दमूर्तिः श्रुतौ स्कन्दकीर्तिः
मुखे मे पवित्रं सदा तच्चरित्रम् ।
करे तस्य कृत्यं वपुस्तस्य भृत्यं
गुहे सन्तु लीना ममाशेषभावाः ॥२६॥

Drshi Skanda-Muurtih Shrutau Skanda-Kiirtih
Mukhe Me Pavitram Sadaa Tac-Caritram |
Kare Tasya Krtyam Vapus-Tasya Bhrtyam
Guhe Santu Liinaa Mama-Ashessa-Bhaavaah ||26||

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)

என் கண்ணைத்  திறந்தாலும் மூடினாலும் ஷண்முகா,  உன் திருவுருவம் ஒன்றே என் முன் தோன்றுகிறது. கந்தா,  உன் புகழ் ஒன்றே என் செவியில் என்றென்றும் ஒலிக்கட்டும். வேறு எதுவும் நான் என் காதால் கேட்க தயாரில்லை. என் கரங்கள் உன்னை எப்போதும் வணங்கி கொண்டே இருக்கட்டும். என் நாவால் என்றும் எப்போதும் உன் புகழ் பேசும் ஸ்தோத்திரங்கள் தொடர்ந்து நான் பாடிக்கொண்டே இருக்கவேண்டும்.. என்னுடைய இந்த தேகம் உன் சேவைக்கும் உன் அடியார் தொண்டுக்கும்  என்றும் பிரயோஜனமாக இருக்கவேண்டும். என் எண்ணங்கள் உன்னைப்  பற்றியே  வட்டமிட வேண்டும்.''

ஆதி சங்கரரின் விருப்பம் நமது விருப்பமாகவும் இருக்க வேண்டாமா?

ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரங்கள் 33. அவற்றை ஏழு பதிவுகளாக பிரித்து எளிய முறையில் நான் புரிந்து கொண்ட வரை, தமிழில், அந்த ஆறுமுகனுக்கு சமர்ப்பிக்க எண்ணி  அடுத்த பதிவோடு  ஒருவாறு நிறைவு செயகிறேன்.

ஸத் – சித் ஆனந்தம் என்று சொல்வார்கள். அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேசுவரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிற ‘சித்’ அம்பாள்; இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரம்மண்யர். சிவம் என்கிற மங்களமும் அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த பரம உத்கிருஷ்டமான ஸ்தானம் அவர். ஸச்சிதானந்தத்தையே ‘சோமாஸ் கந்தர்’ என்று தமிழ் நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம். ஈசுவரனுக்கும் அம்பாளுக்கும் நடுவே, இருவருக்கும் பொதுவான மத்ய ஸ்தானமாக, சுப்பிரமணியர் குழந்தை ரூபத்தில் இருப்பார். உமையோடும், ஸ்கந்தனோடும் கூடியவர் (ஸஹ உமா ஸ்கந்தர்) தான் ஸோமாஸ்கந்தரான பரமேசுவரன்.

விறகு கட்டையை அக்னி பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கர்மங்க
ளையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். திரு நீறு எனும் விபூதிபஸ்மம் , சாம்பல், நமது கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

‘விபூதிரைஸ்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. விபூதி என்றால் வற்றாத செல்வம், ஐஸ்வர்யம். .

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போய் சுத்த வெளுப்பாகும். அப்புறம் எவ்வளவு நேரம் தீயில் போட்டாலும் மாறாது. இப்படி முடிவில்லாமல் நீற்றுப்போனதே திருநீறு. பஸ்மம். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும், எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் சிவன், அவர் நெற்றிக் கண் தீப்பொறியிலிருந்து உருவானவர் ஷண்முகன், கார்த்திகேயன். 

பாவம் நியூட்டன், ரொம்ப லேட்டாக  எல்லா வர்ணங்களையும் கலந்து சுற்றினால் கிடைப்பது வெள்ளை என்றான். ரிஷிகள் பல யுகங்கள் முன்பே சகல மாயாஜாலங்கள், வர்ணங்கள் கடந்தது ப்ரம்மஞானம், ப்ராணவாகாரம், சுப்ரமண்யம் என்று எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்கள். ஞானம் என்னும் தீ மூண்ட  பின்  சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார். விபூதியைத் தேகம் முழுவதும் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

27. मुनीनामुताहो नृणां भक्तिभाजां
अभीष्टप्रदाः सन्ति सर्वत्र देवाः ।
नृणामन्त्यजानामपि स्वार्थदाने
गुहाद्देवमन्यं न जाने न जाने ॥२७॥

Muniinaam-Utaaho Nrnnaam Bhaktibhaajaam
Abhiisstta-Pradaah Santi Sarvatra Devaah |
Nrnnaam-Antya-Jaanaam-Api Sva-Artha-Daane
Guhaad-Devam-Anyam Na Jaane Na Jaane ||27||
 

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

சுப்ரமண்யா, ஞானத்தின் சிகரம் என்பதால் தானே உன்னை யோகிகளும், ஞானிகளும் முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் தவமிருந்து வேண்டு கிறார்கள். தேவர்களைக் காக்கும் தேவ சேனாபதியாக உன்னை வழிபடுகிறார்கள். வேண்டும் வரங்களை வாரித் தர பன்னிரண்டு கரங்கள் கொண்டவன் நீ ஒருவன் தானே. குலம் கோத்ரம் ஒன்றும் தேவையில்லாமல் மனதில் பக்தி ஒன்றே பிரதானம் என்று அருளும் ஞானகுரு அல்லவா நீ. மனக்  குகையில் வீற்றிருப்பதால் தானே குரு குஹன். உன்னையன்றி நான் வேறெவரையும் அறியேனே.

28. कलत्रं सुता बन्धुवर्गः पशुर्वा
नरो वाथ नारि गृहे ये मदीयाः ।
यजन्तो नमन्तः स्तुवन्तो भवन्तं
स्मरन्तश्च ते सन्तु सर्वे कुमार ॥२८॥

Kalatram Sutaa Bandhu-Vargah Pashurvaa
Naro Va-Atha Naari Grhe Ye Madiiyaah |
Yajanto Namantah Stuvanto Bhavantam
Smarantash-Ca Te Santu Sarve Kumaara ||28||

களத்ரம் ஸதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நா க்ருEஹு யே மதீயா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார (28)

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தா நீ ஒருவனே. பக்தர்கள் குறை கேட்கவென்றே பன்னிரு செவி கொண்டவனே. இதில் நீ உன் மாமனை மிஞ்சுபவன். அதனால் அல்லவோ மால் மருகோனே என்று அருணகிரியும் பாடினார். உற்றாரும் மற்றோரும்  எந்நேரமும் உன் நினைவில் ஆடி ஆனந்தமாக பாடி உன்னருள் பெற நீயே அருளவேண்டும்.


தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...