Saturday, June 19, 2021

SRIMAN NARAAYANEEYAM



 


ஸ்ரீமன்  நாராயணீயம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN
 8வது   தசகம்

8.  பத்மநாபா சரணம்.


एवं तावत् प्राकृतप्रक्षयान्ते
ब्राह्मे कल्पे ह्यादिमे लब्धजन्मा ।
ब्रह्मा भूयस्त्वत्त एवाप्य वेदान्
सृष्टिं चक्रे पूर्वकल्पोपमानाम् ॥१॥

ēvaṁ tāvatprākr̥taprakṣayāntē
brāhmē kalpē hyādimē labdhajanmā |
brahmā bhūyastvatta ēvāpya vēdān
sr̥ṣṭiṁ cakrē pūrvakalpōpamānām || 8-1 ||

ஏவம் தாவத்ப்ராக்ருதப்ரக்ஷயாந்தே
ப்³ராஹ்மே கல்பே ஹ்யாதி³மே லப்³த⁴ஜன்மா |
ப்³ரஹ்மா பூ⁴யஸ்த்வத்த ஏவாப்ய வேதா³ன்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வகல்போபமானாம் || 8-1 ||

சென்ற  அத்தியாயத்தில்  ஸ்ரிஷ்டிகர்த்தா  பிரம்மன்  ஸ்ரீமன் நாராயணனிடம் முறையாக  சிருஷ்டி சங்கல்பம் பெற்று அவரது அருளாசி யோடு,   சிருஷ்டியைத்  தொடங்கியதை அறிந்தோம்.   சிருஷ்டி என்பது புதிதாக உயிர்கள் ஒரு யுகமுடிவிலும்  தோன்றுவது.  சிருஷ்டிக்கு முன்  பிரளயம் எனும்  பிரம்மாண்ட அழிவு,  நீரினால் எங்கும்  எல்லாவற்றையும் அழிக்கும்.  ப்ரம்மா மீண்டும் சிருஷ்டியை யுக ஆரம்பத்தில்  துவங்குவார். அப்படி முதலில் தோன்றிய பிரளயத்திற்கு, ப்ரக்ரித் பிரளயத்திற்கு  பின் தோன்றியது  ப்ரம்ம கல்பம் என்று பெயர்.   குருவாயூரப்பா, நாராயணா, உன்னிடம் தானே பிரம்மன்  சிருஷ்டி ரஹஸ்யம் கற்று உயிர்க ளைப்  படைத்தான்.  

 चतुर्युगसहस्रमितान्यहानि
तावन्मिताश्च रजनीर्बहुशो निनाय ।
निद्रात्यसौ त्वयि निलीय समं स्वसृष्टै-
र्नैमित्तिकप्रलयमाहुरतोऽस्य रात्रिम् ॥२॥

sō:’yaṁ caturyugasahasramitānyahāni
tāvanmitāśca rajanīrbahuśō nināya |
nidrātyasau tvayi nilīya samaṁ svasr̥ṣṭai-
rnaimittikapralayamāhuratō:’sya rātrim || 8-2 ||

ஸோ(அ)யம் சதுர்யுக³ஸஹஸ்ரமிதான்யஹானி
தாவன்மிதாஶ்ச ரஜனீர்ப³ஹுஶோ நினாய |
நித்³ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை-
ர்னைமித்திகப்ரலயமாஹுரதோ(அ)ஸ்ய ராத்ரிம் || 8-2 ||

பிரளயம் முடிந்து  அடுத்த கல்பம் துவங்கு  முன் காலப்ரமாணம் அறியப்படவேண்டும்.  நம்முடைய கடிகாரம் காட்டும் நேரம்  சென்னையில் வேறு,  அமெரிக்கா ஜப்பானில் வேறு  என்று இப்போதே நமக்குத் தெரியும்  போது  எண்ணமுடியாத,  அளக்கமுடியாத தூரத்தில் உள்ள  ப்ரம்மலோகத்தில் ப்ரம்மாவின் கடிகாரம் வேறு அளவுகோல்.  நமது காலண்டர்  12 மாதங்கள் ஒரு வருஷம் என்று  யாரோ கற்பித் ததை நம்புகிறோம். பின்பற்றுகிறோம்.   ஆயிரம் சதுர்யுகம் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு பகல் நேரம்.  அதே அளவு  ஒரு இரவு.  பகலில் ஸ்ரிஷ்டிக்கிறான். இரவில் தூங்குகிறான்.  அவனது இரவுக்கு  என்ன பெயர் தெரியுமா  நைமித்திக பிரளயம்.  அப்போது  அவன்  எல்லா உயிர்களோடு  தானும் கிருஷ்ணா,   உன்னில் கலக்கிறான்.  இப்படி பல இரவுகள் பகல்கள் பிரம்மன் கழிக்கிறான்.  

अस्मादृशां पुनरहर्मुखकृत्यतुल्यां
सृष्टिं करोत्यनुदिनं स भवत्प्रसादात् ।
प्राग्ब्राह्मकल्पजनुषां च परायुषां तु
सुप्तप्रबोधनसमास्ति तदाऽपि सृष्टि: ॥३॥

asmādr̥śāṁ punaraharmukhakr̥tyatulyāṁ
sr̥ṣṭiṁ karōtyanudinaṁ sa bhavatprasādāt |
prāgbrahmakalpajanuṣāṁ ca parāyuṣāṁ tu
suptaprabōdhanasamā:’sti tadā:’pi sr̥ṣṭiḥ || 8-3 ||

அஸ்மாத்³ருஶாம் புனரஹர்முக²க்ருத்யதுல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோத்யனுதி³னம் ஸ ப⁴வத்ப்ரஸாதா³த் |
ப்ராக்³ப்³ரஹ்மகல்பஜனுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்தப்ரபோ³த⁴னஸமா(அ)ஸ்தி ததா³(அ)பி ஸ்ருஷ்டி꞉ || 8-3 ||

காலையில் நாம் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி காப்பி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள்.  பிரம்மாவுக்கும் அதே போல் விடிந்ததும்  சில வேலைகள் உண்டு.  சிருஷ்டி அப்படி ஒரு நித்ய அனுஷ்டானம். ப்ரம்ம கல்பத்துக்கு முன்னால்  பிறந்தவர்கள், மற்றும் நித்ய ஆத்மாக்கள், ஆகியோருக்கு புது கல்பத்தில் மீண்டும் பிறப்பது  தூங்கி எழுந்திருப்பது போல.  

पञ्चाशदब्दमधुना स्ववयोर्धरूप-
मेकं परार्धमतिवृत्य हि वर्ततेऽसौ ।
तत्रान्त्यरात्रिजनितान् कथयामि भूमन्
पश्चाद्दिनावतरणे च भवद्विलासान् ॥४॥

pañcāśadabdamadhunā svavayō:’rdharūpa-
mēkaṁ parārdhamativr̥tya hi vartatē:’sau |
tatrāntyarātrijanitānkathayāmi bhūman
paścāddināvataraṇē ca bhavadvilāsān || 8-4 ||

பஞ்சாஶத³ப்³த³மது⁴னா ஸ்வவயோ(அ)ர்த⁴ரூப-
மேகம் பரார்த⁴மதிவ்ருத்ய ஹி வர்ததே(அ)ஸௌ |
தத்ராந்த்யராத்ரிஜனிதான்கத²யாமி பூ⁴மன்
பஶ்சாத்³தி³னாவதரணே ச ப⁴வத்³விலாஸான் || 8-4 ||

ஹே, ஸாஸ்வதனே ,  இப்போது  நீ கொடுத்த  சிருஷ்டி வேலையில் பிரம்மன்  ஈடுபட்டிருப்பது கிட்டத்தட்ட  ஐம்பது வருஷங்களோ?  இது நாம்  போடும் வயசு கணக்கு இல்லை.  பல லக்ஷம் வருஷங்கள்.  இந்த ஐம்பது வருஷங்களை ஒரு  பரார்த்தம்  என்று சொல்வார்கள்.   ஒரு ராத்திரியில்,   அப்புறம் அடுத்த  காலைப் பொழுதில் நடப்பது பற்றி மட்டும் சொல்கிறேன்.  .

दिनावसानेऽथ सरोजयोनि:
सुषुप्तिकामस्त्वयि सन्निलिल्ये ।
जगन्ति च त्वज्जठरं समीयु-
स्तदेदमेकार्णवमास विश्वम् ॥५॥

dināvasānē:’tha sarōjayōniḥ
suṣuptikāmastvayi sannililyē |
jaganti ca tvajjaṭharaṁ samīyu-
stadēdamēkārṇavamāsa viśvam || 8-5 ||

தி³னாவஸானே(அ)த² ஸரோஜயோனி꞉
ஸுஷுப்திகாமஸ்த்வயி ஸன்னிலில்யே |
ஜக³ந்தி ச த்வஜ்ஜட²ரம் ஸமீயு-
ஸ்ததே³த³மேகார்ணவமாஸ விஶ்வம் || 8-5 ||

பகவானே,  எல்லாம்  நீ சொல்லி தான் சாஸ்திரங்கள், வேதங்களில் நான் தெரிந்து கொள்கிறேன்.  ஒரு  நாள் சிருஷ்டிக்கு பிறகு  அந்த  நாளின் முடிவில்  ப்ரம்மா  படுக்கைக்கு தூங்கச்  செல்கிறான்.  அவன் மட்டுமா?  இந்த பிரபஞ்சமே அவனுடன் சேர்ந்து உன் நாபிக்குள்  செல்கிறது.   அம்மா  வயிற்றுக்குள்  குழந்தை சுருண்டு படுக்குமே  அது போல.  சூக்ஷ்ம  உருவில்.  அப்போது  இந்த பிரபஞ்சம் ஒரு எல்லையில்லாத சமுத்ரமாகிறது.  பிரளயம்.

तवैव वेषे फणिराजि शेषे
जलैकशेषे भुवने स्म शेषे ।
आनन्दसान्द्रानुभवस्वरूप:
स्वयोगनिद्रापरिमुद्रितात्मा ॥६॥

tavaiva vēṣē phaṇirāji śēṣē
jalaikaśēṣē bhuvanē sma śēṣē |
ānandasāndrānubhavasvarūpaḥ
svayōganidrāparimudritātmā || 8-6 ||

தவைவ வேஷே ப²ணிராஜி ஶேஷே
ஜலைகஶேஷே பு⁴வனே ஸ்ம ஶேஷே |
ஆனந்த³ஸாந்த்³ரானுப⁴வஸ்வரூப꞉
ஸ்வயோக³னித்³ராபரிமுத்³ரிதாத்மா || 8-6 ||


எண்டே  குருவாயூரப்பா,  அப்போது  இந்த  முழு  பிரபஞ்சமும்  அகண்டாகார,  காரண  ஜலமயம்.  எங்கும்  இருள்.  அதில் காணப்படுவது நீ மட்டுமே.  ஜம்மென்று  ஆதிசேஷன் மேல்  மிதந்து கொண்டி ருப்பவன்.  ஆதிசேஷன் வேறு யாரோ அல்ல,  அதுவும்   நீயே தான்.  அது தான் உன் யோக நித்திரை.  அரைக்கண் விழித்த தூக்கம்.  ஆனந்தமய ஸ்திதி..

कालाख्यशक्तिं प्रलयावसाने
प्रबोधयेत्यादिशता किलादौ ।
त्वया प्रसुप्तं परिसुप्तशक्ति-
व्रजेन तत्राखिलजीवधाम्ना ॥७॥

kālākhyaśaktiṁ pralayāvasānē
prabōdhayētyādiśatā kilādau |
tvayā prasuptaṁ parisuptaśakti-
vrajēna tatrākhilajīvadhāmnā || 8-7 ||

காலாக்²யஶக்திம் ப்ரலயாவஸானே
ப்ரபோ³த⁴யேத்யாதி³ஶதா கிலாதௌ³ |
த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்தஶக்தி-
வ்ரஜேன தத்ராகி²லஜீவதா⁴ம்னா || 8-7 ||

நாராயணா,  உன் உத்தரவின் படி,  உன் சங்கல்பத்தின் படி,  பிரளயம்  மறைகிறது.  காலம்  உன் மூலம்  விழித்துக் கொண்டு தோன்றுகிறது. பிரளயத்தின்  ஆரம்பத்தில் நீ  சகல சக்திகளும் ஜீவன்களும் உன்னில் அடக்கமாக நீ  உறங்கப்போனவன் அல்லவா ?

चतुर्युगाणां च सहस्रमेवं
त्वयि प्रसुप्ते पुनरद्वितीये ।
कालाख्यशक्ति: प्रथमप्रबुद्धा
प्राबोधयत्त्वां किल विश्वनाथ ॥८॥

caturyugāṇāṁ ca sahasramēvaṁ
tvayi prasuptē punaradvitīyē |
kālākhyaśaktiḥ prathamaprabuddhā
prābōdhayattvāṁ kila viśvanātha || 8-8 ||

சதுர்யுகா³ணாம் ச ஸஹஸ்ரமேவம்
த்வயி ப்ரஸுப்தே புனரத்³விதீயே |
காலாக்²யஶக்தி꞉ ப்ரத²மப்ரபு³த்³தா⁴
ப்ராபோ³த⁴யத்த்வாம் கில விஶ்வனாத² || 8-8 ||

ஈடு இணையற்ற  பரமாத்மா,  லோகேஸ்வரா,  இவ்வாறு    ஆயிரம்  சதுர் யுகங்கள் கொண்ட ஒரு  நைமித்திக  பிரளயத்தின் போது   கண்ணா, நீ கண்ணுறங்குகிறாய்.   உனது  கால சக்தியே  உன்னை எழுப்புகிறது. சுப்ரபாதம். 

विबुध्य च त्वं जलगर्भशायिन्
विलोक्य लोकानखिलान् प्रलीनान् ।
तेष्वेव सूक्ष्मात्मतया निजान्त: -
स्थितेषु विश्वेषु ददाथ दृष्टिम् ॥९॥

vibudhya ca tvaṁ jalagarbhaśāyin
vilōkya lōkānakhilānpralīnān |
tēṣvēva sūkṣmātmatayā nijāntaḥ-
sthitēṣu viśvēṣu dadātha dr̥ṣṭim || 8-9 ||

விபு³த்⁴ய ச த்வம் ஜலக³ர்ப⁴ஶாயின்
விலோக்ய லோகானகி²லான்ப்ரலீனான் |
தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த꞉-
ஸ்தி²தேஷு விஶ்வேஷு த³தா³த² த்³ருஷ்டிம் || 8-9 ||

சகல ஜீவ ஆதார  காரண  ஜலத்தில்  நீ  பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரமானந்த ஸ்வரூபன்.  விழித்தபோது உன்னுள் சர்வ லோகமும்  அடங்கியிருப்பதை உணர்பவன்.  அவற்றை நோக்குகிறாய்.

ततस्त्वदीयादयि नाभिरन्ध्रा-
दुदञ्चितं किंचन दिव्यपद्मम् ।
निलीननिश्शेषपदार्थमाला-
संक्षेपरूपं मुकुलायमानम् ॥१०॥

tatastvadīyādayi nābhirandhrā-
dudañcitaṁ kiñcana divyapadmam |
nilīnaniśśēṣapadārthamālā-
saṅkṣēparūpaṁ mukulāyamānam || 8-10 ||

ததஸ்த்வதீ³யாத³யி நாபி⁴ரந்த்⁴ரா-
து³த³ஞ்சிதம் கிஞ்சன தி³வ்யபத்³மம் |
நிலீனநிஶ்ஶேஷபதா³ர்த²மாலா-
ஸங்க்ஷேபரூபம் முகுலாயமானம் || 8-10 ||

பரந்தாமா,  நாராயணா,  உன் நாபியிலிருந்து  ஒரு தெய்வீக தாமரைக் கொடி  எழும்புகிறது. மொட்டு விடுகிறது, அவிழ்கிறது. அதனால் தானே உனக்கு  பத்ம நாபன் என்றே பெயர்.   சகல ஜீவன்களும்  சூக்ஷ்ம ரூபத்தில் அதில் அடக்கம்.  

तदेतदंभोरुहकुड्मलं ते
कलेवरात् तोयपथे प्ररूढम् ।
बहिर्निरीतं परित: स्फुरद्भि:
स्वधामभिर्ध्वान्तमलं न्यकृन्तत् ॥११॥

Tadētadaṁbhōruhakuḍmalaṁ tē
kalēbarāttōyapathē prarūḍham |
bahirnirītaṁ paritaḥ sphuradbhiḥ
svadhāmabhirdhvāntamalaṁ nyakr̥ntat || 8-11 ||

ததே³தத³ம்போ⁴ருஹகுட்³மலம் தே
கலேப³ராத்தோயபதே² ப்ரரூட⁴ம் |
ப³ஹிர்னிரீதம் பரித꞉ ஸ்பு²ரத்³பி⁴꞉
ஸ்வதா⁴மபி⁴ர்த்⁴வாந்தமலம் ந்யக்ருந்தத் || 8-11 ||

பகவானே,  அந்த தாமரை மொட்டு உன் நாபியிலிருந்து எழும்பி,  ஜலத்திற்கு மேலே  எங்கும் சூழ்ந்திருந்த இருளை  விலக்கி ஒளிமய மாக்குகிறது.

संफुल्लपत्रे नितरां विचित्रे
तस्मिन् भवद्वीर्यधृते सरोजे ।
स पद्मजन्मा विधिराविरासीत्
स्वयंप्रबुद्धाखिलवेदराशि: ॥१२॥

samphullapatrē nitarāṁ vicitrē
tasminbhavadvīryadhr̥tē sarōjē |
sa padmajanmā vidhirāvirāsīt
svayamprabuddhākhilavēdarāśiḥ || 8-12 ||

ஸம்பு²ல்லபத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மின்ப⁴வத்³வீர்யத்⁴ருதே ஸரோஜே |
ஸ பத்³மஜன்மா விதி⁴ராவிராஸீத்
ஸ்வயம்ப்ரபு³த்³தா⁴கி²லவேத³ராஶி꞉ || 8-12 ||

என் ப்ரபோ,  இவ்வாறு  உன்  எல்லையற்ற சக்தியால், உன்  நாபிக்கமலத்திலிருந்து உதித்த  தாமரை இதழ்கள் மேல் ப்ரம்மா தோன்றுகிறான்.  அவன் வேதமயம்.  சர்வ சாஸ்த்ர  வேத ஸ்வரூபன். 

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥

  asminparātman nanu pādmakalpē
tvamitthamutthāpitapadmayōniḥ |
anantabhūmā mama rōgarāśiṁ
nirundhi vātālayavāsa viṣṇō || 8-13 |  

அஸ்மின்பராத்மன் நனு பாத்³மகல்பே
த்வமித்த²முத்தா²பிதபத்³மயோனி꞉ |
அனந்தபூ⁴மா மம ரோக³ராஶிம்
நிருந்தி⁴ வாதாலயவாஸ விஷ்ணோ || 8-13 |  

பரம தயாநிதி, பத்மநாபா,  விவரிக்கமுடியாத சக்தி கொண்ட  வேதநாயகா,  அப்போது தோன்றிய கல்பத்தின் பெயர் தான் பாத்மகல்பம்.  பிரம்மனை உருவாக்கி விட்டாய்.  ஹே  மஹா விஷ்ணு,  குருவாயூரப்பா, குட்டி நாராயணா, என்  வாதனைகளை, நோயை  அகற்றுவாயாக''  என்று  இந்த 8வது   தசகத்தை  மேல்பத்தூர் நாராயண நம்பூதிரி நிறைவு செய்கிறார்.

தொடரும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...