Wednesday, June 16, 2021

geethanjali

 கீதாஞ்சலி  -   நங்கநல்லூர்  J K  SIVAN

 தாகூர் 


71  காலமெனும் சிற்பி செய்யும்...


71.  That I should make much of myself and turn it on all sides,
 thus casting coloured shadows on thy radiance---such is thy maya.
Thou settest a barrier in thine own being and then callest thy severed self in myriad notes.
This thy self-separation has taken body in me.
The poignant song is echoed through all the sky in many-coloured tears and smiles, alarms and hopes;
waves rise up and sink again, dreams break and form. In me is thy own defeat of self.
This screen that thou hast raised is painted with innumerable figures with the brush of the night and the day.
Behind it thy seat is woven in wondrous mysteries of curves, casting away all barren lines of straightness.
The great pageant of thee and me has overspread the sky.
With the tune of thee and me all the air is vibrant, and all ages pass with the hiding and seeking of thee and me.

புரியாத பாஷையில் பேசுபவன் நான் அல்ல.  என் மனதில் உதயமாகும் எண்ணம் எனக்கே முதலில் புரிபட்டால் தான் மற்றவர்களுக்கு எடுத்து சொல்பவன்.   ஆமாம் கிருஷ்ணா, நீயே  புரிபடாதவன் 

நான் என்னைப்பற்றியே  பெருமைப் படுவதில்  மகிழ்பவன். எல்லாவற்றிலும்   ''நான்  எனது, என் விருப்பம்'' என    தேடுபவன்.  என்னை  பல வண்ணங்களில் நிழலாக்கி  உன் ஒளியில்  சேர்ப்பது  வரை நடப்பது உன் மாயை.

கிருஷ்ணா,  நீ  உன்னையே  கூறு  போட்டு பல  தடுப்புகளைக்  கொண்டவன்.  எத்தனையோ  துண்டுகளாக காட்டி ஒவ்வொரு துண்டுக்கும் உன் எண்ணற்ற  நாமங்கள். வண்ணங்கள், உருவங்கள். அப்படி ஒரு கூறு  நானும். என்னுள் என் உடலில் நீ.  

ஏதோ ஒரு  நிறைவேறா  எண்ணம், விருப்பம்  சோகப்பாடலாக  காற்றில்  கரைந்து  ஒலிக்கிறதே, அது எங்கும்  சோகத்தால் பெறுகும் கண்ணீராகவும்   ஆனந்தத்தால்  நிரம்பும் கண்ணீராகவும் மாறி  மாறி  ரெண்டும் ஒன்று என்று  எதிரொலிக்கிறது,  எச்சரிக்கிறது.  அலைகள் என்றால் எகிறி எகிறி மேலே  கிளம்பும் தானே. அப்புறம் அதுவே அடங்கும்.  எண்ணத்தில்  தோன்றாத கனவுகளா.     என்னில் உள்ள நீ  எளிதில் கிட்டுபவனா, பல முறை விழுந்து எழுந்து  தோல்வியை தழுவியபின்  தான் உன் தோளைத் தழுவ முடியும்.   ‘தான்’  ''நான்''  என்பது நீ ஆகும் வரை.

பிரபஞ்சமே  நீ  வரையும்  வண்ண ஓவியம்.  இடைவிடாமல்  இதில்  உருவாகும்  சித்திரங்கள்  நீ  உபயோகிக்கும்   இரவு பகல் எனும்  தூரிகைகளால்   காலம் எனும் வண்ணத்தில் தோய்க்கப்பட்டு உருவாகிறவை.   ஓவியன் உனது  ஆசனம் ஓவியப்பலகை  எதிரே  உள்ளதே  அதன்  வளைவு,  நெளிவு, சுளிவு,  வட்டம்,  வெறுமையின் நேர்க் கோடுகள்  எல்லாம்  அதனதன் செயல் விளைவாகச் செய்பவன்.  கர்மபலன்.

‘நீயும் நானும்’ என்ற  இந்த  பிரமாண்டமான காட்சி எங்கும்  காண்கிறது.   ‘நீயும் நானும்’ என்ற இசை   காற்றில்  ஓய்வின்றி  ஒலிக்கிறது.    ‘நீயும் நானும்’ என்பதே  தோன்றி மறையும்  இந்த கண்ணாமூச்சி ஆட்டம்.  இதற்கே காலம் போதவில்லை.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...