Friday, June 18, 2021

YOU AND I


 

''நீயே உனக்கு  என்றும்  நிகரானவன்''     -  நங்கநல்லூர்  J .K. SIVAN

தலைப்பில் சொன்ன  சினிமா பாட்டை கேட்ட போது  அந்த ட்யூன் பிடித்தது.  அப்படியே  உள்வாங்கியபோது வார்த்தையின் அர்த்தம் யோசிக்க வைத்தது. யார்  அவனுக்கே நிகரானவன். யோசித்து பார்த்தேன். எனக்கு தெரிந்து எந்த மனிதனையும் அப்படி சொல்ல முடியவில்லையே.  யாரோ ஒருவனுக்கு மட்டும் அது நன்றாக் பொருந்தியது. அவன் தான் கிருஷ்ணன். அவனைப் பற்றி நினைத்ததை கை  கம்ப் யூட்டரில் எழுத்துக்களை தட்டியது.  இங்கிலீஷில் தட்டிய எழுத்து  தமிழாக  எதிரில் தோன்றியது.
சந்திரனுக்கு சோமன் என்று பெயர்.அவன் வம்சத்தில் வந்தவர்கள் யாதவர்கள். கிருஷ்ணன் அவதரித்த வம்சம் யாதவகுலம்.  ''யாதவ குல முரளி''  என்று எவ்வளவு பாட்டுகளில் பாடுகிறோம். க்ஷத்ரியர்கள் ஒன்று சூரியவம்சம் ரவிகுலம் அல்லது சந்திரகுலம், சோம வம்  என்று தான் அடையா ளம் கொள்வார்கள்.  ''ராமா ரவிகுல சோமா''   என்று ராமனைப்   பாடுகிறோம். ராமர் சூரியவம்சம். கிருஷ்ணன் சந்திர வம்சம்.
பிருந்தாவனம் ஒரு ஆன்மீக உலகம்.கோலோக பிருந்தாவனம், வ்ரஜ பூமி என்று அதற்கு பெயர்.
இந்த யாதவ குல கிருஷ்ணனாக பிறக்க மஹா விஷ்ணு சங்கல்பித்தார். பலராமனோடு கிருஷ்ணனும் அவதரித்த ஒரு அதிசயம் இந்த பிறவி.   கிருஷ்ணன் அவதாரம் ஒன்றே   பூர்ண அவதாரம். கிருஷ்ணன் விஷ்ணு தத்துவத்தின் ஆதி காரணம். 
கோவிந்தன் என்ற பெயர் கொண்ட தெய்வீக பிறவி. மஹாவிஷ்ணுவின் மூச்சில் தான் கோடானுகோடி ஜீவன்கள் தோன்றுகிறது. கிருஷ்ணனை விளக்கி சொல்ல ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலேயே கூட முடியாது. கிருஷ்ணனாக அவதரித்து கண்ணன் சொன்னது,  செய்தது,  எல்லாமே  மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே. 
கிருஷ்ணனை ப்பற்றி எவ்வளவு சொன்னாலும் எழுதினாலும், பாடினாலும் ஏன்  எனக்கு  அலுக்கவே இல்லை.   3500  கட்டுரைகளுக்கு மேல்  எழுதியும் இன்னும்  நிறைய  விஷயம் சொல்லவேண்டியிருக்கிறதே. அது மட்டும் எப்படியடா  கிருஷ்ணா?  மேன்மேலும் ஆர்வம் பெருகுகிறதே  எதனாலே?.

'அர்ஜுனா , என்னை விட உயர்ந்த பெரிய உண்மை எதுவும் இல்லையடா"     " mattah parataram nanyat kincid asti dhananjaya: 'என்று பகவத் கீதையை உபதேசிக்கும்போது போர்க் களத்தில் கிருஷ்ணன்     ரொம்ப எளிமையாக தான் பரமாத்மா என்பதை உணர்த்தியது  அர்ஜுனக்காக இல்லை.  அவனுக்கு தெரியும்   பல ஆயிரம் வருஷங்கள் கழித்து பிறக்கப் போகிற மனிதனும் என்னை நினைப்பான். அவன் வாழ்வும் மலரவேண்டும்.  அப்போ தைக்கு  இப்போதே  சொல்லி வைக்கிறேன் என்று  த்வாபர யுகத்தில் குருக்ஷேத்திர யுத்தகளத்தில் கூட  நமக்காக  சொன்ன வார்த்தைகள். எத்தனை கோடி பெண்களுக்கு  கீதா  என்ற பெயர் சூட்டி வருகிறோம்.  அவனை நினைத்து தானே.  இல்லை யென்றா ல் அந்த பெயர் எப்படி பிரபலமாயிருக்கும்?
நமக்கும் புரியும்படியாகவே. கீதையையோ, பாகவதத்தையோ, கிருஷ்ணன் சரித்ரத்தை யோ சொல்பவன், எழுதுபவன் விஷ்ணு தத்துவத்தை கொஞ்சமாவது அறிந்திருந்தால், தெரிந்திருந்தால் தான்   அவனது சொல், எழுத்து எடுபடும் . இல்லாவிட்டால் சர்க்கரை தேன் என்று ஆயிரம் பக்கம் எழுதி, நூறு நாள் சொன்னாலும் இனிக்காது.

வாழ்க்கையை வாழத் தெரியாதவன், பசுவைக் கொல்பவனுக்கு   சமம்.  அவனுக்கு  கிருஷ்ணன் புரியாது. ரசிக்காது. கிருஷ்ணன் பசு இரண்டையும் பிரிக்க முடியாது. கோபாலன், கோவிந்தன் என்ற பெயர்கள் அற்புதமானவை. 1000 புத்தகங்கள் எழுதியும்  சொல்லி  எழுதி மாளாது.
 கிருஷ்ணனை அறியாமல் வாழ்வது தற்கொலைக்கு சமானம் என்று சொல்வேன்.  அற்புதமான இந்த மானுட வாழ்க்கையை வாழத் தெரியாதவன் தானே உயிரை மாய்த்துக்கொள்ள, தற் கொலைக்கு தயாராகிறான். மஹான்கள் கிருஷ்ணனை ஸ்மரித்து, பாடி, படித்து, பேசி, நமக்கு எத்தனையோ பேரின்ப வழிகளைக்  காட்டி இருக்கிறார்கள். ஏன்?
 பவ ரோகம் எனும் இந்த பிறவி  நோயினின் றும் விடுபட கிருஷ்ணனின் நாமம் சொல்வது நினைப்பது,   பாடுவது  ஒன்றே வழி.   சில  வெள்ளைக்கார  பெண்கள் ஆண்கள் ஹார்மோனியம் டோலக், வாத்யம் வாசித்துக்கொண்டு  ஆடி  பாடி தெருவில் குட்டிக்கரணம் அடித்து  கிருஷ்ணனைப் பஜிப்பதை பார்க்கும் போது என்னை அறியாமல்  ஆனந்தக்  கண்ணீர் வடித்தேன்.   நெற்றியில் சந்தன திலகத்தோடு தான் எத்தனை குழந்தைகள்   அவர்கள் குடும்பங் களில்   கிருஷ்ணனாக  ராதையாக  தயாரா கிறார்கள்.  யூ  ட்யூபுக்கு  நன்றி.  எவ்வாவு வருஷங்கள்  யூ  ட்யூப் தெரியாமல் வளர்ந்து விட்டிருக்கிறேன். நல்லவேளை இன்னும்  எனக்கு  சொச்ச காலம் இருக்கிறது. ரொம்ப நன்றி கிருஷ்ணா .
 ஆகவே தான் கிருஷ்ணன் கதைக்கு பவ ஒளஷதம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உலக வாழ்க்கையின் பற்றுதல்கள் விலக உதவும் மருந்து.
துருவன் தவமிருந்தான். பல வருஷங்கள் கழிந்து நாராயணன் எதிரே தோன்றினான்.
''உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் துருவா''
'' பகவானே எனக்கு எல்லாம் கிடைத்து திருப்தியாக இருக்கிறேன். இந்த உலக பற்று புலன்களின் ஆதிக்கம் என்னை விட்டு அகல அருள்வாய் பரந்தாமா. அது ஒன்றே போதும்'' என்றான் துருவன்.
பாகவதத்தில்,  ''சுகப்பிரம்ம மஹரிஷி,     கிருஷ்ணனின் தாமரைப்பதங்கள் எனும் படகினால் என் தாத்தா அர்ஜுனனும் மற்றவர்களும்,குருக்ஷேத்திர யுத்தம் எனும் கடலை கடந்து அதில் எதிர்ப்பட்ட பீஷ்மர் எனும் திமிங்கிலத்தை கூட வெல்லமுடிந்தது. கடக்கமுடியாத சமுத்திரத்தை ஒரு கன்றுக் குட்டியின் குளம்பு சுவடு போன்றதாக கடக்க முடிந்தது. என் தாய் உத்தரை,       '' கிருஷ்ணா நீயே கதி''    என்று சரணடைந்த போது கையில் சுதர்சன சக்ரம் ஏந்தி என் தா யின்  கர்ப்பத்தில் குடியேறி,    அஸ்வத்தாமன் என்னை அழிக்க எய்த பிரம்மாஸ்திரத்தை தடுத்து என் உயிர் காத்து இந்த பாண்டவ வம்சம் அழியாமல் கிருஷ்ணன்  காத்ததை உங்கள் மூலம் அறியும் போது, விஸ்வரூபம் காட்டி இந்த உலகில் அதர்மம் நீங்க தர்மம் தழைக்க நான் வருவேன் என்ற கிருஷ்ணனிடம் என் நன்றி உணர்ச்சி யை நான் எப்படி வெளிப்படுத்துவேன் '' என்று கதறுகிறான் பரீக்ஷித்

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...