பாகவதம் பிறந்த கதை - நங்கநல்லூர் J K SIVAN
ஹிந்துக்களுக்கு மஹா பாரதம் ராமாயணம் ஸ்ரீமத் பாகவதம் எல்லாம் தெய்வீக நூல்கள் ..பாகவதம் அவற்றில் பெரியது 18000 ஸ்லோகங் களை கொண்டது. 355 அத்தியா யங்கள். காண்டங்கள் எனப்படுபவை. இவற்றில் எண்ணற்ற கதைகள் உண்டு. .
பாகவதத்தில் 10 வது காண்டம் கிருஷ்ணன் வாழ்க் கை யை பற்றி சொல்கிறது. எல்லாவற் றிலும் நாராயணனின் அவதாரங்கள் பல வடிவங்களில் புராணங்களில் தலைவனாக அவனை காட்டுகிறது. பக்தர்கள் பாகவதர்கள் என்று பக்தி ஸ்வரூபிகளாக அறியப்படு கிறார்கள். பாகவதன் என்றால் அதிர்ஷ்டசாலி என்று பொருள். அதிர்ஷ்டம் என்றால் இங்கே உலகில் வாழ தேவையான பொருள்களை அடைவது அல்ல.
உண்மையான செல்வம் என்பது நாம் செய்யும் சத்காரியம்,பக்தி, புண்யம், தானம், தர்மம், அன்பு அறிவு, ஞானம், பற்றின்மை ஆகியவை தான். நிரந்தர செல்வம். அவையே மோக்ஷ மார்கத்துக்கு இட்டுச் செல்லும் படிக்கட்டுகள்.
பாகவதத்தை எழுதியவர் வேதவியாசர் எனும் கிருஷ்ண த்வைபாயனர். இன்னொரு பெயர் பாதராயணர். மகரிஷிகளில் முதன்மையானவர். விஷ்ணுவின் அவதாரம் என்பதுண்டு.
வேதங்களைத் தொகுத்து, பகுத்து நான்காக அளித்தவர். அவற்றை ஸ்ருதி என்போம். ஸ்ருதி என்றால் ஸ்ரவணம் பண்ணுவது. காதால் கேட்பது . வேதவியாசர் தனது ஞான த்ரிஷ்டியால் கண்டு தனது செவிகளில் கேட்டவை தான் பாகவதத்தில் உள்ளவை. தெய்வீகமான மந்த்ரங்கள். இந்த புராணங்க ளும் இதி ஹாசங்களும் ( ராமாயணம் மஹா பாரதம்) ஸ்லோகங்களாக அவரால் வெளி வந்தவை. இதெல்லாம் ஸ்ம்ருதி என வகைப்ப டுத்தப்பட்டவை. ஸ்ம்ருதி என்றால் என்ன? ஸ்மரணம் செய்வது. அதாவது மனதில் ஸ்மரிக்க தகுந்தவை. ,மனனம் செய்ய வேண்டியவை, மனதில் நிரம்பவேண்டியவை. நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை. திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே , படித்துக் கொண்டே , கேட்டுக்கொண்டே,நினைத்துக் கொண்டே இருந்தால் தானே மனதில் தங்கும்?
நான்கு வேதங்களைதவிர வேத வியாசர் இயற்றியது இதிகாசங்களில் ஒன்றான மஹா பாரதம். இதை ஐந்தாம் வேதம் என்பார்கள்.
என்னுடைய மஹா பாரத கதைகளுக்கு நான் இட்ட பெயர் ''ஐந்தாம் வேதம்''. இரு பாகங்களாக வெளிவந்து உலகில் பல இல்லங்களில் வரவேற்கப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 1000 பக்கங்கள் கொண்ட இரு பாகங்களாக வெளி வந்தது. விலை அல்ல. குறைந்த அன்பளிப்பு நன்கொடை RS 1000 இருபாகங்களுக்கும் சேர்த்து அச்சுக்கூலிக்காக பெறப்பட்டு மேற்கொண்டு பிரதிகள் தயாராகும். வேண்டுபவர்கள் அணுக 9840279080.
சந்தேகமே இல்லாமல் உலகிலேயே மிகச்சிறந்த ஒரு மகா பெரிய நூல் மஹா பாரதம், அதன் சிகரமாக விளங்குவது கிருஷ்ணன் அர்ஜுன னுக்கு உபதேசிக்கும் பகவத் கீதை. வேத வியாசரின் இணையற்ற ஒரு படைப்பு.
மஹா பாரதத்தைத் தவிர மேலே சொன்ன ஸ்ரீமத் பாகவதம், மற்றும் குறிப்பிட்ட 18 புராணங்களை யும் தவிர வேதவியாஸரின் மற்றுமொரு சிறந்த நூல் ப்ரம்ம சூத்ரம். வியாசர் குரு வம்ச முன்னோடி. தாத்தா. நீண்ட ஆயுட்காலம் வாழ்ந்தவர். அவரது குமாரர் சுக ப்ரம்ம ரிஷி. இந்த சுகப்பிரம்ம ரிஷி தான் தனது தந்தையின் படைப்புகளை அனைத்து ரிஷிகளுக்கும் நைமிசாரண்யத்தில் எடுத்துரைத்தவர்.
பாண்டவர்களின் வாரிசு பரிக்ஷித்தின் கடைசி எழுநாட்களில் அவன் சுகப்ரம்ம ரிஷியிடமிரு ந்து தெரிந்து கொண்ட பாகவதம் தான் சப்தாஹமாக எங்கும் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment