Friday, June 11, 2021

GEETHANJALI

 கீதாஞ்சலி  -   நங்கநல்லூர்  J  K  SIVAN  --

தாகூர் 

68.  ஒளியும்  நிழலும்  


68. Thy sunbeam comes upon this earth of mine with arms outstretched and 
stands at my door the livelong day
 to carry back to thy feet clouds made of my tears and sighs and songs.
With fond delight thou wrappest about thy starry breast that mantle of misty cloud,
turning it into numberless shapes and folds and colouring it with hues everchanging.
It is so light and so fleeting, tender and tearful and dark, 
that is why thou lovest it, O thou spotless and serene. 
And that is why it may cover thy awful white light with its pathetic shadows.

கிருஷ்ணா,  நீ  உன்  சூரிய  ஒளிக்கிரணங்களை,  வெளிச்சக் கத்தைகளை , என் இந்த பூமியின் மேல் எப்படி  வீசுகிறாய் தெரியுமா?    கைகளை  நீளமாக நீட்டி, விரித்து  ஒரு தாய்  சேயைத் தழுவுவது போல, என் வீட்டு வாசலில்  நாள் முழுதும் நிற்கிறாய்..  ஓஹோ  நீ  நீட்டிய கரங்களில்  என் கண்ணீர், ஏக்கப் பெருமூச்சு  பாடல்கள் இவற்றின் மூலம்  எழுந்த  மேகங்களை   தூக்கிச் சென்று  உன் திருவடிகளில் சேர்க்க ஒரு  எண்ணமா ?

எல்லா பனிக்கூட்ட  பஞ்சு மேகங்களையும்  ஒன்று சேர்த்து  வாரி சுருட்டி  சந்தோஷமாக  உன்  நக்ஷத்ர  மார்பில்   அணைத்தவாறு எடுத்துச் செல்லப்போகிறாயா ?  அப்புறம்  என்ன செய்ய  திட்டம்? அதெல்லாவற்றையும்  சின்னதும் பெரிதுமாக  எண்ணற்ற  உருவில் வண்ணங்கள் தோய்த்து    வெவ்வேறாக  மாற்றி, தோற்றமளிக்கும்படி   உருவம்  தரப்  போகிறாயா?   பார்த்தாயா  இம் மேகங்களை ?  எவ்வளவு மிருதுவாக, மென்மையாக,  தொட்டால்  பறக்கும்படியான    எளியதாக,  கண்ணீர் நிறைந்தவையாக, கருமையாக  இருக்கிறது?   
ஓஹோ  அதனால் தான்  அவற்றின் மேல் அவ்வளவு பிரியமோ உனக்கு?  நீயோ   துல்லியமானவன், ஒரு வித கறையுமில்லாத  வெண்ணிற , அமைதி நிறைந்தவன் .   உன்  வெண்ணிற ஒளிமயத்தில்   அவை  அதனால் தான் படர்ந்து  முழுதும் தம்முடைய  பரிதாப  நிழல்களை அப்புகிறதோ?  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...