ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
பில்வாஷ்டகம் 2ம் பதிவு.
2. ஒரே ஒரு வில்வ இலைக்கு இத்தனை பலனா?
சிவன் அபிஷேகப்பிரியன். வில்வத்தால் அவனை அர்ச்சிப்பதே ஒரு வில்வாபிஷேகம் எனலாம். அதோடு சிவன் ஸ்தோத்ரப்ரியனும் கூட. அவனை போற்றி புகழ்ந்து பாடினால் வேண்டிய வரம் தந்துவிடுவான். கேட்பது என்ன என்று கூட யோசிக்க மாட்டான். எதுவும் எப்போதும் தன்னை மீறி நடந்து விட முடியாது என்ற நம்பிக்கை. ஆகவே ஸ்தோத்ரம் என்பது வார்த்தைகளால் குளிப்பாட்டுவது தான் அல்லவா. அதுவும் அபிஷேகப்பிரியன் என்று தான் காட்டுகிறது.
अखण्ड बिल्वपत्रं च आयुतं शिवपूजनं
कृतं नाम सहस्रॆण ऎकबिल्वं शिवार्पणं
Aganda Bilwa Pathrena Poojithe Nandikeshware,
Shudhyanthi Sarva Papebhyo, Eka Bilwam Shivarpanam
அகண்டபில்வபத்ரேண பூஜிதே நந்திகேச்வரே
சுத்யந்தி ஸர்வபாபேப்யோ ஹ்யேகபில்வம் சிவார்பணம் |
கண்கொட்டாமல் பகவானையே நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? முடியும் என்றால் நாம் தான் நந்திகேஸ்வரர். அதனால் தான் அவருக்கு பிரதோஷ காலத்தில் விசேஷ பூஜை அர்ச்சனை, அலங்காரம், அடேயப்பா, அவருக்கு ஒரு த்ரி தளம் வில்வம் சார்த்தி னால் எத்தனை புண்யம் நமக்கு, முந்தைய ஜென்மங்களில் புரிந்த பாபங்கள் கரைந்து விடுகிறதே என்கிறார் ஆதி சங்கரர். சிவனுக்கு வில்வம் அளிப்பதும் நந்திக்கு அளிப்பதும் ஒன்றே தான்.
सालग्रामॆषु विप्राणां तटाकं दशकूपयॊः
यज्नकॊटि सहस्रस्च ऎकबिल्वं शिवार्पणं
Salagrameshu vipranam tatakam dasha koopayo Yagyakoti saharacha eka bilvam shivarpanam
ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:
யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்|
சாளக்ராமம் கண்டகி நதியில் கிடைப்பது பற்றி ஒரு தனி பதிவு இட்டிருந்தேன் ஞாபகம் இருக்கிறதா? மிகவும் ஸ்ரேஷ்டமானது சாளக்ராமம். அத்தனையும் விஷ்ணு பரம். அப்படி ஒரு புனிதமான சாளக்ராமத்தை ஒரு வைஷ்ணவனுக்கு தானமாக அளித்தால் எத்தனை புண்யமோ, குளங்கள் கிணறுகள் கட்டி எல்லோருக்கும் உதவினால் என்ன புண்ய பலனோ, ஒரு கோடி சோமயாகம் சிரத்தையாக சாஸ்த்ரோக்தமாக நடத்தினால் தேவர்கள் மகிழ்ந்து ஆஹுதி பெற்று திருப்தியடைந்து ஆசிர்வதிப்பார்களோ, அத்தனை புண்யம் ஒரே ஒரு, ஆமாம், ஒரே ஒரு , த்ரி தளம், மூன்று தளங்கள் கொண்ட வில்வத்தை சிவனுக்கு அர்பணித்தால் நாம் பெறும் பலன்.
दन्ति कॊटि सहस्रॆषु अश्वमॆध शतक्रतौ
कॊटिकन्या महादानम् ऎकबिल्वं शिवार्पणं
Dantikoti sahasreshu ashwamedha shatakratau
Kotikanya mahadanam ekabilvam shivarpanam
தந்திகோடிஸஹஸ்ராணி அச்வமேதசதானி ச |
கோடிகன்யாமஹாதானம் ஹ்யேகபில்வம் சிவார்பணம் |
ஒரே ஒரு வில்வத்தை, மூன்று தளங்கள் கொண்ட சுத்தமான வில்வ இலையை சிவனுக்கு அர்ப்பணியுங்கள். அதால் நீங்கள் பெறும் லாபம், பலன் எதற்கு இணையானது தெரியுமா? இதோ சங்கரர் ரெண்டு இணை சொல்கிறார் பாருங்கள் . ஆயிரம் யானைகளை தானமாக கொடுத்த பலன், அது போல், கோடி கன்னிகைகளுக்கு கல்யாணம் செயதுவைத்தது கன்னிகா தானம் செய்த பலன், நூறு அஸ்வமேதயாகம் பண்ணிய பலன், இந்த மூன்றில் ஒரே ஒரு வில்வ இலையால் பூஜை செயது அர்ப்பணிப்பது ரொம்ப சுலபம் இல்லையா. இப்போதே ஆரம்பிப்போம்.
बिल्वस्तॊत्रमिदं पुण्यं यः पठॆश्शिव सन्निधौ
शिवलॊकमवाप्नॊति ऎकबिल्वं शिवार्पणं
Bilvashhtakamidam punyam yah patheth shivasannidhau. shivalokamavapnoti Shiva Loka Maapnuyath
பில்வாஷ்டகமிதம் புண்யம் ய: படேச்சிவஸன்னிதௌ |
ஸர்வபாபவினிர்முக்த: சிவலோகமவாப்னுயாத் |
இந்த பில்வாஷ்டக ஸ்லோகங்களை படித்தீர்கள் அல்லவா? இதை சிவன் எதிரே அமர்ந்து சுத்தமாக மனத்தை அவன் மேல் வைத்து பாராயணம் செய்தால் நமது பாபங்கள் அனைத்தும் விலகிவிடும். முடிவில் சிவலோகப்பிராப்தி தாராளமாக கிடைக்கும் என்று ஒரு காரண்டீ சொல்கிறது இந்த ஸ்லோகம். ஆதிசங்கரருக்கு நன்றி, ஒரு நல்ல வழி காட்டியதற்கு. ரொம்ப கஷ்டமில்லாத சுலப, காசு செலவழியாத வழி யார் காட்டுவார்கள்?
No comments:
Post a Comment